பெஞ்சமின்,மேக்மில்லன் ஆகியோருக்கு வேதியலுக்கான நோபல் பரிசு

வேதியல் துறையில் சிறந்த ஆராய்ச்சிக்காக 2 பேருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது.

மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், இலக்கியம், அமைதி ஆகிய துறைகளில் மகத்தான சாதனை புரிபவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

உலக அளவில் கவுரவமிக்க விருதாக இது கருதப்படுகிறது. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வே நாட்டில் அறிவிக்கப்படுகிறது. மற்ற விருதுகள், சுவீடன் நாட்டின் தலைநகர் ஸ்டாக்ஹோமில் அறிவிக்கப்படுகின்றன.

இந்த நோபல் பரிசு, தங்க பதக்கமும், ரூ.8½ கோடி பரிசுப்பணமும் கொண்டது ஆகும்.

நோபல் பரிசு அறிவிக்கும் பணி கடந்த 4 ந்தேதி தொடங்கியது. முதல் விருதாக, மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. நோபல் பரிசு கமிட்டி தலைவர் தாமஸ் பெர்மன் இதை அறிவித்தார். அமெரிக்காவை சேர்ந்த டேவிட் ஜூலியஸ், ஆர்டெம் பட்டபவுசியன் ஆகிய விஞ்ஞானிகளுக்கு இப்பரிசு பகிர்ந்து அளிக்கப்படுவதாக அவர் அறிவித்தார்.

நேற்று இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. சியுகுரோ மனாபே( அமெரிக்கா), கிளாஸ் ஹாசில்மேன் ( ஜெர்மனி) மற்றும் ஜார்ஜியோ பாரிசி (இத்தாலி) ஆகியோருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

இன்று வேதியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஜெர்மனியை சேர்ந்த பெஞ்சமின் லிஸ்ட், அமெரிக்காவை சேர்ந்த டபிள்யூ சி மேக்மில்லன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.

வேதியல் துறையில் சிறந்த ஆராய்ச்சிக்காக இவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு உள்ளது.

கடந்த ஆண்டு வேதியியல் பரிசு பெற்ற இம்மானுவேல் சார்பென்டியர் மற்றும் ஜெனிபர் டவுட்னா ஆகியோர் மரபணு தொழில்நுட்பத்தின் கூர்மையான கருவிகளில் ஒன்றான மரபணு கத்தரிக்கோல் (CRISPR/Cas9 ) கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசைப் பகிர்ந்து கொண்டனர்.

Related posts