கப்பல் படைத்தளபதியாக நியமிக்கப்பட்ட ஜேம்ஸ் பாண்ட்

ஜேம்ஸ்பாண்ட் படங்கள் வரிசையில் 25-வது படமாக ‘நோ டைம் டூ டை’ தயாராகி உள்ளது. இதில் டேனியல் கிரேக் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கடந்த 2006-ல் ஜேம்ஸ் பாண்ட் ஆக நடிக்க ஆரம்பித்த டேனியல் கிரேக் இதுவரை கேசினோ ராயல், குவாண்டம் ஆப் சோலஸ், ஸ்கைபால், ஸ்பெக்டர் ஆகிய 4 ஜேம்ஸ் பாண்ட் படங்களில் நடித்து இருக்கிறார்.

2015-ல் வெளியான ‘ஸ்பெக்டர்’ தனது கடைசி ஜேம்ஸ் பாண்ட் படம் என்றும் இனிமேல் ஜேம்ஸ் பாண்டாக நடிக்கமாட்டேன் என்றும் டேனியல் கிரேக் தெரிவித்து இருந்தார். ஆனால் திடீரென்று முடிவை மாற்றி ஐந்தாவது ஜேம்ஸ் பாண்ட் படமான ‘நோ டைம் டூ டை’ படத்தில் நடித்துள்ளார். இந்த படம் டேனியல் கிரேக் நடிக்கும் கடைசி ஜேம்ஸ் பாண்ட் படம்.

இதன் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. இதன் கடைசி நாள் படப்பிடிப்பில் டேனியல் கிரேக் படக்குழுவினர் மத்தியில் கண்ணீர்விட்டு அழுதபடி உருக்கமாக பேசி விடைபெற்றார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த திரைப்படம் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் டேனியல் கிராக்கை கவுரவிக்கும் விதமாக இங்கிலாந்து கப்பல் படைத்தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக ஜேம்ஸ் பாண்ட் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், டேனியல் கிரேக் கப்பல் படை சீருடை அணிந்துள்ள புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. அதில், கப்பல் படைத்தளபதி என்ற கவுரமிக்க பதவி தனக்கு கிடைத்திருப்பது மிகவும் பெருமையளிப்பதாக டேனியல் கிரேக் பதிவிட்டுள்ளார்.

Related posts