‘அண்ணாத்த’ திரைப்படத்தின் ‘பர்ஸ்ட் லுக்’ வெளியானது

நவம்பர் 4 ந்தேதி தீபாவளி அன்று அண்ணாத்த படம் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது.

‘தர்பார்’ படத்தைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் தற்போது ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார். படத்தை டைரக்டர் சிவா இயக்குகிறார். வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளர் டி. இமான் இசையமைக்கிறார்.

‘அண்ணாத்த’ படத்தில் ரஜினிகாந்துடன் மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்பட பலர் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத், சென்னை, லக்னோ, கொல்கத்தா பகுதிகளில் நடந்து முடிந்தது.

நவம்பர் 4 ந்தேதி தீபாவளி அன்று அண்ணாத்த படம் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் தற்போது முழு வீச்சில் நடந்து வருகின்றன. ரஜினிகாந்த் டப்பிங் பேசி முடித்துவிட்டார்.

இந்த நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் இன்று விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு வெளியிடப்படுகிறது.

காலை 11 மணிக்கு பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. மாலை 6 மணிக்கு மோஷன் போஸ்டரும் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts