‘தலைவி’ படத்தை தடுப்பதா? கங்கனா ரணாவத் கோபம்

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை தலைவி என்ற பெயரில் சினிமா படமாக தயாராகி உள்ளது. இதில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கனா ரணாவத், எம்.ஜி.ஆராக அரவிந்தசாமி நடித்து உள்ளனர்.

தலைவி படத்தை ஓ.டி.டி.யில் வெளியிட தியேட்டர் அதிபர்கள் எதிர்த்து பின்னர் பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற்பட்டது. இந்த நிலையில் தலைவி படத்தை மல்டி பிளக்ஸ் தியேட்டர்களில் வெளியிடுவதை தடுப்பதாக கங்கனா ரணாவத் குற்றம்சாட்டி உள்ளார். இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தற்போதைய சூழ்நிலையில் படங்கள் தியேட்டர்களில் வருவதில்லை. ஆனால் தலைவி படக்குழுவினர் சினிமா மீதிருந்த பற்றினால் அதிக லாபத்தை எதிர்பார்க்காமல் ஓ.டி.டி.யில் வெளியிடும் வாய்ப்பை விட்டு கொடுத்து உள்ளனர்.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஒருவரையொருவர் ஆதரிக்க வேண்டும். துன்புறுத்தவோ, அச்சுறுத்தவோ கூடாது. நாங்கள் போட்ட முதலீட்டை திரும்ப பெற வேண்டும் என்பது எங்களது உரிமை. இந்தி பதிப்புக்கு 2 வாரங்களும், தமிழுக்கு 4 வாரங்களும் இடைவெளி இருக்கிறது. ஆனாலும் மல்டி பிளக்ஸ் தியேட்டர்கள் தரப்பில் படம் வெளியாவதை தடுக்கிறார்கள். இது நியாயமற்ற கொடூர செயல். தியேட்டர்களை காப்பாற்ற ஒருவருக்கொருவர் உதவியாக இருப்போம்” என்று கூறியுள் ளார்.

இந்த நிலையில் சில மல்டி பிளக்ஸ் தியேட்டர்கள் தலைவி படத்தை திரையிடுவதாக அறிவித்து உள்ளன.

Related posts