இலங்கையில் மேலும் 161 மரணங்கள் பதிவு

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 161 மரணங்கள் நேற்று (14) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் இலங்கையில் ஏற்கனவே 5,935 கொரோனா மரணங்கள் பதிவானதாக அறிவிக்கப்படட்ட நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 161 மரணங்களுடன், இலங்கையில் இதுவரை 6,096 கொவிட்-19 தொடர்பான மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு மரணமடைந்த 161 பேரில், 83 பேர் ஆண்கள், 78 பேர் பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

——

புதிய பொலிஸ் ஊடகப் பேச்சாளராக, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (SSP), சட்டத்தரணி நிஹால் தல்துவ நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2011 முதல் 2021 வரை கடந்த 10 வருடங்களாக 4 தடவைகள் குறித்த பதவியிலிருந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹணவின் இடத்திற்கே அவர் இன்று (16) முதல் அமுலாகும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளார்.

தனது ஊடகத் துறை தொடர்பான பணியில் வழங்கிய ஒத்துழைப்பு தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு அஜித் ரோஹண நன்றி தெரிவித்துள்ளார்.

——-

பொதுமக்கள் மத்தியில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவிவரும் தன்மை காணப்படுவதாக சுகாதார அமைச்சின் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.நோய் அறிகுறிகள் காணப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதனால், சிகிச்சை அளிக்கப்பட வேண்டிய நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளாதவர்களே என்றும் எனவே, பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையை குறைக்க வேண்டுமாயின், அனைவரும் தடுப்பூசி ஏற்றிக்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Related posts