வில்லனாக நடிக்க ஆதிக்கு ரூ.4 கோடி

வில்லன் வேடம் ஏற்க ஆதிக்கு ரூ.4 கோடி சம்பளம் பேசி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கதாநாயகர்கள் வில்லன்களாகவும் நடிக்கின்றனர். விஜய்சேதுபதி, அர்ஜூன், அருண் விஜய், கார்த்திக், அரவிந்தசாமி ஆகியோர் வில்லன்களாக நடித்துள்ளனர். ஆர்யா எனிமி படத்தில் விஷாலுக்கு வில்லனாக நடித்து வருகிறார். இந்த நிலையில் லிங்குசாமி இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் தயாராகும் படத்தில் ஆதி வில்லனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். இதில் நாயகனாக ராம் பொதினேனி நடிக்கிறார். இந்த படத்தில் வில்லன் வேடம் ஏற்க ஆதிக்கு ரூ.4 கோடி சம்பளம் பேசி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது பெரிய தொகை என்று திரையுலகினர் வியக்கின்றனர். கதையில் தனது கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் இருப்பதால் வில்லனாக நடிக்க ஆதி ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இதில் நாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். மிருகம் படம் மூலம் பிரபலமான ஆதி…

ரஜினி நடிக்கும் அண்ணாத்த படப்பிடிப்பு சென்னையில் இன்று..

ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது. ஏற்கனவே ஐதராபாத்தில் கடந்த டிசம்பர் மாதம் படப்பிடிப்பை நடத்தியபோது படக்குழுவை சேர்ந்த சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் நிறுத்தினர். பின்னர் சிறிது இடைவெளிக்கு பிறகு கொரோனா முன் எச்சரிக்கை பாதுகாப்போடு மீண்டும் படப்பிடிப்பை நடத்தினர். இதில் ரஜினிகாந்த் பங்கேற்று நடித்துவிட்டு அமெரிக்கா சென்றார். அங்கு மருத்துவ பரிசோதனைகள் செய்து கொண்டு சென்னை திரும்பி உள்ளார். இன்னும் ரஜினிகாந்த் நடிக்க வேண்டிய சில காட்சிகள் பாக்கி உள்ளதால் அதற்கான படப்பிடிப்பை சென்னையில் அரங்குகள் அமைத்து இன்றும் (20-ந்தேதி), நாளையும் நடத்த உள்ளனர். இந்த 2 நாள் படப்பிடிப்பில் ரஜினிகாந்த் பங்கேற்று நடிக்கிறார். அதோடு அவர் நடிக்க வேண்டிய காட்சிகள் அனைத்தும் முடிகின்றன. மற்ற சில நடிகர்கள் நடிக்க வேண்டிய காட்சிகளை கொல்கத்தாவிலும், லக்னோவிலும் படமாக்குகின்றனர். வருகிற 25-ந்தேதி அண்ணாத்த…

தமிழ்மொழிக்கென தனி அமைச்சகம் உருவாக்கப்பட வேண்டும்

தமிழ் வளர்ச்சிக்கென அதிக அளவில் நிதி ஒதுக்கி, பணியாற்ற வேண்டியதும் நம்முடைய வரலாற்றுக் கடமை என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தமிழ் மொழிக்கென தனி அமைச்சகமும், தமிழ் வளர்ச்சிக்கு அதிகளவில் நிதி ஒதுக்கி தீவிரமாகப் பணியாற்ற வேண்டியதும் நம்முடைய வரலாற்றுக் கடமை என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடுமையான முயற்சிகளுக்குப் பின் 2004-ம் ஆண்டு செம்மொழி எனும் அங்கீகாரத்தைப் பெற்றது தமிழ் மொழி. பரிதிமாற்கலைஞர் போன்ற தமிழறிஞர்கள் தொடங்கிய இந்தப் போராட்டத்தில் இறுதி வெற்றியை ஈட்டித் தந்தவர் கருணாநிதி. செம்மொழியான தருணத்தை அனைவருமே கொண்டாடி மகிழ்ந்தோம். செம்மொழி அறிவிப்பு வந்து 17 ஆண்டுகளாகிவிட்டன. மொழி வளர்ச்சிக்கென நாம் என்னவெல்லாம் செய்திருக்கிறோம் என, கறாராகத் தொகுத்துப் பார்த்தால், பெரிதாக ஒன்றும் இல்லை. ஒரு வழக்கில்…

குஷ்புவின் டுவிட்டர் கணக்கு ஹேக் செய்து முடக்கம்

குஷ்புவின் டுவிட்டர் கணக்கு ஹேக் செய்து முடக்கப்பட்டு உள்ளது. அவரது பதிவுகள் அனைத்தும் அழிக்கப்பட்டு உள்ளது. நடிகையும், பா.ஜ.க நிர்வாகியான நடிகை குஷ்பு டிவிட்டர் வலைதளத்தில் ஆக்டிவாக இருந்தார் .தற்போது @khushsundar என்ற அவரது டுவிட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டு முடக்கப்பட்டு உள்ளது.அவரது அனைத்து பதிவுகளும் அழிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குஷ்புவை டுவிட்டர் பக்கத்தில் 13 லட்சம் பேர் பின் தொடர்ந்து வந்தனர்.அவர் 710 பேரை தொடர்ந்து வருகிறார். இந்நிலையில் அவரது ஐடி முடக்கப்பட்டு @khushsundar என்பதற்கு பதிலாக briann என்கிற பெயரில் உள்ளது. அதன் பிறகு பின்னூட்டம் எதும் இடம்பெறவில்லை. காங்கிரஸ் கட்சியில் இருந்து பா.ஜ.கவுக்கு வந்த குஷ்பு சட்டசபை தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். இருப்பினும் தனக்கு பா.ஜ.கவில் ஏதாவது முக்கிய பொறுப்பு கிடைக்கும் என நம்பி இருந்தார்.…

ஓடிடி பார்வை: ஷேர்னி – காப்பதே வீரம்

இயற்கையின் அமைப்பு குறித்த புரிதலோ, உணவுச் சங்கிலி குறித்த தெளிவோ இல்லாமல் காட்டுயிர் வதையைச் சமூகப் பொறுப்பற்ற முறையில் ஆராதிக்கும் விதமாகத் திரைப்படங்கள் காலங்காலமாகக் காட்சிப்படுத்தி வருகின்றன. எம்.ஜி.ஆர் – சிவாஜி காலத்தில் தொடங்கிய அந்தப் போக்கு இன்றுவரை தொடர்கிறது என்பதற்கு 2016இல் மோகன்லால் நடிப்பில் வெளியாகி, பெரும் வெற்றி பெற்ற 'புலி முருகன்' திரைப்படமே சான்று. சாத்தியமில்லாத ஒன்றைச் சாத்தியமாக்கத் துடிக்கும் / ஏங்கும் மனிதனின் நப்பாசைக்கு வடிகாலாகவே இத்தகைய திரைப்படங்களின் நாயக பிம்பங்கள் பொதுவாகக் கட்டமைக்கப்படுகின்றன. அமேசான் பிரைமில், வித்யா பாலன் நடிப்பில் வெளியாகி இருக்கும் 'ஷேர்னி' அதற்கு விதிவிலக்கு. புத்துணர்ச்சி அளிக்கும் வித்யா பாலன் வானில் சுழன்று, சுழன்று ஒரே நேரத்தில் பத்து நபர்களை அடிக்கும் நாயகர்களையும் வாய் தைக்கப்பட்ட சிங்கம், புலி போன்ற காட்டுயிர்களுடன் சண்டையிட்டு ஜெயிக்கும் நாயகர்களையும் பார்த்துப் பழகிய…

ரிஷாத்தின் மனைவி, பெற்றோரிடம் மீண்டும் பொலிஸார் வாக்குமூலம்

ஹட்டன், டயகம சிறுமியை கொழும்புக்கு அழைத்து வந்த நபரிடம் நேற்று வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதுடன் சிறுமியின் தாய் மற்றும் ரிஷாத்தின், தந்தை, மற்றும் மனைவியிடமும் மீண்டும் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இதேநேரம், சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கை நேற்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் சிறுமி நீண்டகாலமாக பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டிருந்தமை தெரிய வந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் கொழும்பு வீட்டில் பணிப்பெண்ணாக வேலைக்கமர்தப்பட்டிருந்த ஹட்டன் , டயகம சிறுமி எரிகாயங்களுடன் கடந்த ஜூலை 03ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அது தொடர்பான மேலதிக விசாரணைகளை தொடர்ந்தும் கொழும்பு சிறுவர் மற்றும் மகளிர் பாதுகாப்பு பிரிவு, பொரளை பொலிஸாருடன் இணைந்து முன்னெடுத்து…

உன்னதத்தின் ஆறுதல்! இரட்சிப்பின் வசனம். வாரம் 21. 28

ஆசீர்வாத வாழ்வைக் தரும் தேவன். சகோதரன். பிரான்சீஸ் அந்தோனிப்பிள்ளை. ரெகொபோத் ஊழியங்கள் - டென்மார்க்கிற்காக பிரார்த்திப்போம். அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன்காலத்தில் தன்கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப் போலிருப்பான். சங்கீதம் 1:3. இன்று வேதத்தை வாசிக்கும்படி யாரும் கூறினால் முதலில் நம்மில் பலர் ஆத்திரப்படுவது, கோபப்படுவது இயற்கை. ஆனால் அதை நேசிக்க ஆவல் ஏற்பட்ட பிற்பாடு அதை ஒருவரும் தடுக்க முடியாதுள்ளதை நாம் காண்கிறோம். இந்த இரு வேறுபட்ட அனுபவத்தை எங்களில் பலரிடத்தில் காணக்கூடியதாக உள்ளது. அந்த அனுபவங்கள் எப்படி மனிதர்களிடத்தில் வெளிப்படுகிறது என்பதை அலைகள் வாசக நேயர்கள் அறிந்து கொள்ளும்படியாக ஒரு சம்பவத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஒரு மனிதன் கவிதைப் புத்தகம் ஒன்றை வாங்கி படிக்கமுற்பட்டான். அதில் முன்பகுதியை மட்டும் வாசித்துவிட்டு அது சுவைஇல்லை என ஒதுக்கிவைத்து விட்டான். ஒரு சிலமாதங்களின் பின்…