யாழ்ப்பாணத்தில் வீடு கொடுக்கிறதாம் ஆமி !

யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் அப்படைத் தலைமையகத்தின் படையினர் யாழ்ப்பாணம் சங்கரத்தை பகுதியில் வசிக்கும் மற்றுமொரு வறிய குடும்பத்திற்கான வீட்டை நிர்மாணிப்பதற்காக தங்களது தொழில்நுட்ப நிபுணத்துவம், பொறியியல் மற்றும் மனித வள உதவிகளை வழங்கினர். யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க குமார் வீரசூரிய என்பவரின் உதவியுடன் ராசதுரை அமுதப்பிரியா என்பவரின் குடும்பத்திற்கு புதிய வீடு கட்டிக்கொடுக்கப்பட்டது. 11வது இலங்கை இலேசாயுத காலாட் படையினரால் கட்டுமான பணிகளுக்கு அவசியமான மனித வள உதவிகள் வழங்கப்பட்டதுடன் 51 வது படைப்பிரிவின் 513 வது பிரிகேட் தளபதியின் மேற்பார்வையில் சில வாரங்களில் படையினரால் இந்த பணி நிறைவு செய்யப்பட்டது. நிர்மாணிக்கப்பட்ட வீட்டை பயனாளிகளுக்கு கையளிப்பதற்காக (13) இடம்பெற்ற நிகழ்வின் போது யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக…

ரிசாத் பதியுதீனின் வீட்டில் சேவையாற்றிய சிறுமி தொடர்பில்

பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீனின் வீட்டில் சேவையாற்றிக் கொண்டிருந்த நிலையில் உயிரிழந்த சிறுமி தொடர்பில் மேலும் தகவல்கள் வெளியாகி உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அதனடிப்படையில் குறித்து சிறுமியின் பிரேத பரிசோதனையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் பொலிஸார் மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான ரோஹன தெரிவித்துள்ளார். டயகம பகுதியைச் சேர்ந்த குறித்த சிறுமி கடந்த 2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இந்த வீட்டிற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு அழைத்து வரப்பட்ட சந்தர்ப்பத்தில் குறித்த சிறுமியின் வயது 15 வருடங்களும் 11 மாதங்களும் ஆகும் என அவர் தெரிவித்துள்ளார். பொரளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீனின் வீட்டில் சேவையாற்றி வந்த குறித்த சிறுமி கடந்த ஜூலை மாதம் மூன்றாம் திகதி தீக்காயங்களுடன்…

தீபாவளிக்கு ரஜினிகாந்த், அஜித் படங்கள் மோதல்?

தீபாவளிக்கு ரஜினிகாந்த், அஜித் ஆகிய இருவர் படங்களும் மோதுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. தீபாவளி பண்டிகையில் ரஜினிகாந்தின் அண்ணாத்த படம் திரைக்கு வருவதை படக்குழுவினர் ஏற்கனவே உறுதிப்படுத்தி உள்ளனர். இந்த நிலையில் அஜித்குமாரின் வலிமை படமும் தீபாவளிக்கு வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த படம் பற்றிய விவரங்களை வெளியிடும்படி ரசிகர்கள் அரசியல் நிகழ்ச்சிகளிலும், விளையாட்டு போட்டிகள் நடக்கும் இடங்களிலும் வற்புறுத்தி பரபரப்பு ஏற்படுத்தி வந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு அஜித்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டது. அடுத்த அப்டேட்டாக ரிலீஸ் தேதி வரலாம் என்று எதிர்பார்க்கின்றனர். தீபாவளி பண்டிகையில் பெரிய நடிகர்கள் படங்கள் வெளியாவதன் மூலம் ரசிகர்களை அதிக அளவு தியேட்டர்களுக்கு இழுக்கவும் ஓ.டி.டி. தளங்கள் எழுச்சியை கட்டுப்படுத்தவும் முடியும் என்று தியேட்டர் அதிபர்கள் நம்புகிறார்கள். அண்ணாத்த, வலிமை ஆகிய 2 படங்களும் தீபாவளிக்கு…

தீர்ப்புக்கு எதிராக நடிகர் விஜய் மேல்முறையீடு

நடிகர் விஜய்க்கு எதிராக சென்னை ஐகோர்ட்டு விதித்த அபராதம் மற்றும் நீதிபதியின் கருத்துகள் ஆகியவற்றை நீக்க கோரி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. நடிகர் விஜய் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்த ரோல்ஸ் ராய் காருக்கு வணிக வரி துறை விதித்த நுழைவு வரியில் இருந்து விலக்கு அளிக்க கோரி தொடர்ந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டு தனி நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் விசாரணை மேற்கொண்டார். அவர் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டதுடன், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்துள்ளார். நடிகர்கள் நிஜத்திலும் ஹீரோவாக நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுரையும் வழங்கப்பட்டது. இந்த நிலையில், இதனை எதிர்த்து நடிகர் விஜய் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார். நடிகர் விஜய்க்கு எதிராக சென்னை ஐகோர்ட்டு விதித்த அபராதம் மற்றும் நீதிபதியின் கருத்துகள் ஆகியவற்றை நீக்க கோரி மேல்முறையீட்டு மனு தாக்கல்…

அமலாபால் பகிர்ந்த வாழ்க்கை அனுபவம்

அமலாபால் தமிழ், மலையாளம், தெஅமலாபால் பகிர்ந்த வாழ்க்கை அனுபவம்லுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கிறார். அவரது திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்தது. இந்த நிலையில் சினிமா மற்றும் வாழ்க்கை அனுபவங்கள் குறித்து அவர் கூறியதாவது:- “நான் 17 வயதில் சினிமா துறைக்கு வந்தேன். சொந்த வாழ்க்கையில் சந்தித்த விஷயங்களை சினிமா வாழ்க்கையிலும் பார்த்தேன். சினிமா வாழ்க்கை மற்றும் சொந்த வாழ்க்கை இரண்டையும் பிரித்து பார்க்க எனக்கு தெரியவில்லை. 2019 வரை அப்படித்தான் இருந்தேன்.ஆனால் 2020-ம் ஆண்டு எனது வாழ்க்கையை புரட்டிப்போட்டது. அந்த வருடம்தான் எனது தந்தை மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு பிறகுதான் என்னை நானே சுயபரிசோதனை செய்ய ஆரம்பித்தேன். அப்போதுதான் எனது சொந்த வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம் போல் இருப்பதையும், எனக்கென்று தனிப்பட்ட வாழ்க்கை இல்லாமல் இருப்பதையும், வாழ்க்கை தவறாக புரிந்து கொள்ளப்பட்டு…

200 கோடி பட்ஜெட்: பாகுபலி வெப் சீரிஸில் நடிக்கும் நயன்தாரா

சிவகாமி தேவியின் இளம் வயது வாழ்க்கையை தற்போது வெப் சீரிஸுக்காக 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கவிருக்கிறார்கள். எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு ‘பாகுபலி’ வெற்றி பெற்றதைத்தொடர்ந்து ‘பாகுபலி 2’ வெளியானது. இரண்டு பாகத்திலுமே மிரட்டலான நடிப்பில் கவனம் ஈர்த்தார் சிவகாமி தேவி ராஜமாதாவாக வரும் ரம்யா கிருஷ்ணன். வீரமான, துணிச்சலான, தலைமைப்பண்புடன் கூடிய அரசியாக வடிவமைக்கப்பட்டிருந்தது அவரது கதாபாத்திரம். இந்த நிலையில், சிவகாமி தேவியின் இளம் வயது வாழ்க்கையை தற்போது வெப் சீரிஸுக்காக 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கவிருக்கிறார்கள். சுமார் 9 எபிசோடுகளை கொண்ட இந்த வெப் சீரிஸ் பெரிய பட்ஜெட்டில் தயாராக உள்ளதாக கூறப்படுகிறது. இதில் இளம் வயது சிவகாமிதேவி கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் நடிகை சமந்தாவை, படக்குழு அணுகியது. ஆனால் அவர் நடிக்க மறுத்துவிட்டதால் தற்போது முன்னணி நடிகையான…

ஒரே ஸ்டூடியோவில் விஜய், கார்த்தி

விஜய், கார்த்தி ஆகியோரின் 2 படங்களின் படப்பிடிப்புகளும் பூந்தமல்லி அருகே ஒரே ஸ்டூடியோவில் நடக்கிறது. கொரோனா ஊரடங்கால் முடங்கி இருந்த சினிமா படப்பிடிப்புகள் தளர்வுக்கு பின் மீண்டும் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. விஜய்யின் பீஸ்ட், கார்த்தியின் சர்தார் படப்பிடிப்புகளும் தொடங்கி உள்ளது. இந்த 2 படங்களின் படப்பிடிப்புகளும் பூந்தமல்லி அருகே ஒரே ஸ்டூடியோவில் நடக்கிறது. இதனால் விஜய்யும், கார்த்தியும் படப்பிடிப்பு தளத்தில் நேரில் சந்தித்து பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பீஸ்ட் முதல்கட்ட படப்பிடிப்பு வெளிநாட்டில் நடந்தது. தற்போது விஜய்யும், பூஜா ஹெக்டேவும் நடிக்கும் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. சர்தார் படத்தில் கார்த்தி தந்தை மகனாக இருவேடங்களில் நடிக்கிறார். தந்தை தோற்றம் ஏற்கனவே வெளியாகி படத்துக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது விஜய் படப்பிடிப்பு நடக்கும் ஸ்டூடியோவில் வில்லன்களுடன் கார்த்தி மோதும் சண்டை காட்சி படமாக்கப்பட்டு வருகிறது.…

டோக்கியோ ஒலிம்பிக் முதல் கொரோனா பாதிப்பு உறுதி

கொரோனா பரவல் காரணமாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டி கடும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் நடைபெற உள்ளது. ஏற்கனவே இந்த போட்டியை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது என்று அறிவிக்கப்பட்டு விட்டது. டோக்கியோ ஒலிம்பிக் திருவிழா வரும் ஜூலை 23 ஆம் தேதி ஜப்பானின் தேசிய விளையாட்டு அரங்கில் தொடங்கவுள்ளது. வழக்கமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் பிரமாண்டமாக கொண்டாடப்படும் ஒலிம்பிக் திருவிழா இம்முறை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக எளிமையாக கொண்டாடப்படவுள்ளது. முன்னதாக 10 ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே டோக்கியோவில் கொரோனா தினசரி பாதிப்பு அதிகரித்ததாலும், அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாலும் உலகின் மிக முக்கிய பிரபலங்கள் ஆயிரம் பேர் மட்டுமே தொடக்கவிழாவில் கலந்து கொள்ளவுள்ளனர். ஜப்பான் பேரரசர் நரிஹிட்டோ, அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடன் உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள்…

கொரோனா 3 வது அலை ஆகஸ்டில் தொடங்கும்

இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை ஆகஸ்டில் தொடங்கும் ஒரு நாளைக்கு 1 லட்சம் பேர் பாதிக்க வாய்ப்பு உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்சி கவுன்சில் மூத்த விஞ்ஞானி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலையின் சாத்தியக்கூறு குறித்து இந்திய மருத்துவ ஆராய்சி கவுன்சில் லண்டனின் இம்பீரியல் கல்லூரியின் ஸ்கூல் ஆப் பப்ளிக் ஹெல்த்துடன் இணைந்து ஒரு கணித ஆய்வை மேற்கொண்டது. இந்த தகவல்கள் இந்திய மருத்துவ ஆராய்ச்சி இதழில் வெளியிடப்பட்டு உள்ளது. மூன்றாவது அலை ஏற்படக்கூடிய நம்பத்தகுந்த ஆதாரங்களை அது கொடுத்துள்ளது. அதே சமயம் 3 -வது அலை இரண்டாவது அலை போல பெரியதாக இருக்க வாய்ப்பில்லை என்பதையும் ஆய்வு விளக்குகிறது. கொரோனா மூன்றாவது அலை குறித்து இந்திய மருத்துவ ஆராய்சி கவுன்சில் தொற்றுநோயியல் மற்றும் தொற்று நோய்களின் பிரிவின் தலைவர் பேராசிரியர் சமிரன் பாண்டா…