வேகமாக நடைபெறும் ராஜ மவுலியின் ஆர்.ஆர்.ஆர்.

பாகுபலி படத்தை தொடர்ந்து ராஜமவுலி தற்போது தெலுங்கின் முன்னணி கதாநாயகர்களான ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இருவரையும் வைத்து ரத்தம் ரணம் ரவுத்திரம் (ஆர்.ஆர்.ஆர்) என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். டிவிவி தானய்யா தயாரிக்கும் இந்தப் படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. படத்தின் கதை சுதந்திர போராட்ட வீரர்களான அல்லூரி சீதராமராஜு, கொமராம்பீம் ஆகியோர் வாழ்க்கையை தழுவி எழுதப்பட்டிருக்கிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கடந்த வாரம் ஜூன் 21 மீண்டும் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆர்.ஆர்.ஆர் படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும் தருவாயில் உள்ளது, அதன் திட்டமிடப்பட்ட தேதியான அக்டோபர் 13 அன்று வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு பாடல்கள் மட்டுமே எடுக்கப்பட வேண்டும். ராம்சரணின் (அல்லூரி சீதாராம ராஜூ) ஜோடியாக அலியாபட் நடிக்கிறார். அவரது பாடல்…

பாபநாசம் 2-ம் பாகம் கமல் ஜோடியாக நதியா?

பாபநாசம் 2-ம் பாகம் கமல் ஜோடியாக நதியா நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. கமல்ஹாசன் தொடர்ந்து படங்களில் நடிக்க கவனம் செலுத்துகிறார். தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்க உள்ளார். ஏற்கனவே அவர் நடித்து வந்த இந்தியன் 2 படப்பிடிப்பு பாதியில் நிற்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடிக்கவும் ஒப்பதமாகி உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. மலையாளத்தில் மோகன்லால், மீனா நடித்து வெற்றி பெற்ற திரிஷ்யம் படத்தை தமிழில் கமல்ஹாசன், கவுதமி நடிக்க பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் செய்து வெளியிட்டனர். தற்போது மலையாளத்தில் திரிஷ்யம் 2-ம் பாகம் வெளிவந்தும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் அந்த படத்தையும் தமிழில் பாபநாசம் 2 என்ற பெயரில் ரீமேக் செய்ய முயற்சிகள் நடக்கின்றன. இதில் கமல்ஹாசன் ஜோடியாக கவுதமிக்கு…

ஒரே பெண்ணுக்கு சில நிமிடங்களில் 3 டோஸ் தடுப்பூசிகள்

ஒரே பெண்ணுக்கு சில நிமிடங்களில் 3 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தபட்டு உள்ளன. இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. மராட்டிய மாநிலம் தானே மாநகராட்சி ஊழியர் ஒருவரின் மனைவி ஆனந்த்நகரில் உள்ள ஒரு தடுப்பூசி மையத்தில் தடுப்பூசி போடச் சென்று உள்ளார். அங்கு அவருக்கு சில நிமிடங்களில் 3 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டு உள்ளன. இதுகுறித்து அவர் தனது கணவரிடம் கூறி உள்ளார். இதை தொடர்ந்து இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது. பின்னர் கணவர் உள்ளூர் அதிகாரியிடம் பிரச்சினையை கூறி உள்ளார். இதைத் தொடர்ந்து, அவரது மனைவியின் ஆரோக்கியம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அந்தப் பெண், தனது கணவர் மாநகராட்சியில் பணிபுரிவதால் புகார் எதுவும் அளிக்க விரும்பவில்லை என்று கூறினார். இதுகுறித்து அந்த பெண்ணின் கணவர் கூறியதாவது:- எனது மனைவி முதல் முறையாக கொரோனா தடுப்பூசி போட சென்றதால்…

வசூல் சாதனை படைத்த ‘எஃப் 9: தி ஃபாஸ்ட் சாகா’

‘எஃப் 9: தி ஃபாஸ்ட் சாகா’ திரைப்படம் கரோனா தொற்று காலகட்டத்திலும் அதிக வசூல் சாதனை படைத்துள்ளது. ஹாலிவுட்டின் பெரும் வரவேற்பைப் பெற்ற படங்களான ‘ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்’ பட வரிசையில் இறுதியாக வெளியாகியுள்ள படம் ‘எஃப் 9: தி ஃபாஸ்ட் சாகா’. 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகவேண்டிய இப்படம் கரோனா அச்சுறுத்தலால் பலமுறை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் இந்த ஆண்டு மே மாதம் தென்கொரியாவில் முதலில் வெளியாகி, பெரும் வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து அமெரிக்காவில் கடந்த வெள்ளி அன்று (ஜூன் 25) வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும் உலக அளவில் இந்த ஆண்டு அதிக வசூல் செய்த படங்களில் ஒன்றாக மாறியுள்ளது. வட அமெரிக்காவில் வெளியான முதல் வாரத்தில் அதிக வசூல் செய்த படமாகவும் ‘எஃப் 9: தி ஃபாஸ்ட் சாகா’ மாறியுள்ளது. இதுவரை…

ஓடிடியில் வெளியாகிறது டாக்டர்

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'டாக்டர்' திரைப்படம் ஓடிடியில் வெளியாவது உறுதியாகியுள்ளது. நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ப்ரியங்கா அருள் மோகன், வினய், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'டாக்டர்'. கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது. ரோனா அச்சுறுத்தல் சமயத்தில் ஹாட்ஸ்டார் ஓடிடி நிறுவனம், இந்தப் படத்தை நேரடியாக டிஜிட்டலில் வெளியிட ஆர்வம் காட்டியது. ஆனால், தொலைக்காட்சி உரிமம் விற்பனையில் ஏற்பட்ட சிக்கலால் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது படக்குழு. இறுதியாக, கரோனா அச்சுறுத்தல் குறைந்து திரையரங்குகள் திறக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் திரையரங்க வெளியீட்டுக்கு முயற்சி செய்தது. ஆனால், வாரம் ஒரு படம் வெளியீடு என்ற ரீதியில் வரிசையாகப் படங்கள் இருக்கின்றன. இதனை முன்வைத்து ஓடிடி வெளியீடுதான் சரியாக இருக்கும் என்று…

ஆட்சியின் முழு அலங்கோலத்தையும் மூட முடியாது.

ஒருநாளைக்கு ஆயிரம் என முப்பது நாளைக்கு முப்பதாயிரம் ரூபா சம்பளத்தை தோட்ட தொழிலாளர்கள் பெறுகிறார்கள் என நீங்கள் நினைக்கிறீர்களா, ஜனாதிபதி அவர்களே! தனது உரையில், “சிலோன் டீ” பற்றி பேசிவிட்டு, தோட்ட தொழிலாளரை மறந்த ஜனாதிபதி கோட்டாபயவிடம் இதை நான் கேட்க விரும்புகிறேன் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி கூறியுள்ளார். இன்று எதிரணி தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் இதுபற்றி மனோ எம்பி மேலும் விவரித்து கூறியுள்ளதாவது, விலைவாசி உயர்வுக்கு கொரோனா என காரணம் காட்டும் ஜனாதிபதியால், தனது 19 மாத ஆட்சியின் முழு அலங்கோலத்தையும் கொவிட் கொரோனா என்ற திரையை போட்டு மூட முடியாது. ஜனாதிபதி கோட்டாபயவை நினைத்து, எல்லே குணவன்ச தேரர் இன்று கண்ணீர் விட்டு அழுகின்றார். இன்னொருவரான முருத்தெட்டுவே தேரர் திட்டி தீர்க்கிறார். உண்மையில் அழ…

கூட்டமைப்புக்கும் – அரசுக்கும் இடையில் விரைவில் பேச்சு

இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கும் இடையில் விரைவில் பேச்சுவார்த்தை இடம்பெறும் அதில் தமிழ் தேசிய பிரச்சினைக்கான அரசியல் தீர்வு பற்றியே பேசப்படும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். யாழ்.வடமராட்சி முள்ளிப்பகுதியில் இயற்கை உரம் தயாரிக்கும் தொழிற்சாலை நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை(27) மாலை 4.00 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம்பெற உள்ளமை தொடர்பில் தொலைபேசி மூலமாக இரண்டு தடவைகள் அறிவிக்கப்பட்டது. ஆனால் அது பின்னர் ரத்து செய்யப்பட்டது. தற்போது எழுத்து மூலமாக சம்பந்தனுக்கு ஜனாதிபதி அறிவித்துள்ளார். இப் பேச்சுவார்த்தை மிக விரைவில் இடம்பெறும் என தெரிவித்துள்ளதுடன், அதில் நாங்கள் பிரதானமாக பேசவிருப்பது தமிழ் தேசிய…

அரசியல் கைதிகள் விடயத்தில் ஜனாதிபதியுடன் பேச்சு

அரசியல் கைதிகள் விடயத்தில் எடுத்தோம் கவிழ்த்தோமென்று செய்துவிடமுடியாது. அதற்கென்று ஒரு வரைமுறையுள்ளது. அதன் பிரகாரம் ஜனாதிபதியுடன் கலந்துரையாடப்பட்டு முன்னெடுக்கப்படுமென அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வடமராட்சி முள்ளிப்பகுதியில் அமைக்கப்பட்ட சேதனப் பசளை உற்பத்தி நிலையத்தை திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். அரசியல் கைதிகள் தொடர்பில் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்யமுடியாது. அதற்கென்று ஒரு வரைமுறை உள்ளது. அதன் பிரகாரம் ஜனாதிபதியுடன் கலந்துரையாடப்பட்டு அது முன்னெடுக்கப்படுமென தெரிவித்தார். காணாமல் போனோர் விடத்தை ஊடகங்களின் முன் தெரிவித்து அரசியலாக்க கூடாது. இது குறித்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று பல ஆண்டுகள் ஆகின்றன. அதேபோல் 88, 89 மற்றும் 83 ஆம் ஆண்டுகளில் காணாமல் போனோர் தொடர்பில் தெற்கிலும் பேசப்படுகிறது. இது தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் அரச…