‘பிரேமம்’ இயக்குநரின் வேண்டுகோள்: கமல் ஏற்பு

ஃபேஸ்புக் பக்கத்தில் 'பிரேமம்' இயக்குநர் விடுத்த வேண்டுகோளை கமல் ஏற்றுக்கொண்டார். கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான படம் 'தசாவதாரம்'. 2008-ம் ஆண்டு ஜூன் 14-ம் தேதி வெளியானது. இந்தப் படம் வெளியாகி 13 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, அந்தப் படம் உருவான விதம், அதில் தனக்குக் கிடைத்த அனுபவங்கள் ஆகியவற்றைப் பற்றி தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் விரிவான பதிவு ஒன்றை வெளியிட்டார் கமல் 'தசாவதாரம்' படத்துக்குக் கதை, திரைக்கதை, வசனம் ஆகியவற்றை கமலே எழுதியிருந்தார். இந்தப் படமும் மாபெரும் வரவேற்பைப் பெற்ற படமாகும். சமூக வலைதளத்தில் கமலின் நீண்ட பதிவு பெரும் வைரலானது. இந்தப் பதிவுக்கு 'பிரேமம்' இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் பின்னூட்டம் ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் "கமல்ஹாசன் சார், 'மைக்கேல் மதன காமராஜன்' படத்தை எப்படிப் படம் பிடித்தீர்கள் என்று எனக்குச் சொல்ல…

நயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ படம் ரூ.25 கோடிக்கு விற்பனை

நடிகர் ரஜினிகாந்த் உடன் 'அண்ணாத்த' படத்தில் நடித்துள்ள நயன்தாரா அடுத்தப்படியாக 'காத்து வாக்குல ரெண்டு காதல்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தநிலையில், காதலன் விக்னேஷ் சிவன் தயாரிப்பில், மிலிந்த்ராவ் டைரக்சனில் ‘நெற்றிக்கண்' படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடித்து வந்தார். இந்த படமும் முடிவடைந்து, திரைக்கு வர தயாராக இருக்கிறது. ‘நெற்றிக்கண்' படம் ரூ.25 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரியன் படமான ‘பிளைன்ட்' படத்தின் கதையை தழுவி தயாரிக்கப்பட்டுள்ள படம் இது. இதில் நயன்தாரா கண் பார்வை இல்லாதவராக நடித்து இருக்கிறார். ஒரு சைக்கோ கொலைக்காரனை பழிவாங்கும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

திமுகவின் இரட்டை வேடம் அம்பலமாகி விட்டது

பெட்ரோல், டீசல் விலை விவகாரம் தொடர்பாக, திமுகவின் இரட்டை வேடம் அம்பலமாகி விட்டது என, பாமக இளைஞரணித் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக, அன்புமணி இன்று (ஜூன் 20) வெளியிட்ட அறிக்கை: "தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலைகளை குறைப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார். பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலை 4 ரூபாயும் குறைக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் அளித்திருந்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாது என்று கூறியிருப்பதன் மூலம் ஆட்சிப் பொறுப்பேற்ற 50 நாட்களுக்குள்ளாகவே திமுகவின் சாயம் வெளுத்து விட்டது. சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் தியாகராஜன், பெட்ரோல், டீசல் மீது மத்திய அரசு மிக அதிக அளவில் கலால் வரியை விதித்திருப்பதாகவும், அதன் மூலம் கிடைக்கும் வருவாயில் மாநில…

நாளைய தினம் பின்பற்றவேண்டிய நடைமுறைகள்

சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டே நாளை (21) பயணக் கட்டுப்பாடு நீக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். மக்கள் அதற்கேற்ப செயல்பட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். அலுவலகளுக்கு சேவைக்காக குறைந்தபட்ச ஊழியர்களையே வரவழைக்க முடியும். வீட்டிலிருந்து வேலை செய்யக்கூடியவர்களை அவ்வாறே சேவையில் ஈடுபடுத்த வேண்டும். பொது போக்குவரத்தில், பயணிகளை இருக்கைகளின் எண்ணிக்கையில் மட்டுமே அழைத்துச் செல்ல வேண்டும். ஒவ்வொரு நபரும் முகக் கவசம் அணிவது கட்டாயமாகும். தனிமைப்படுத்தல் சட்டங்களை உரிய முறையில் பின்பற்ற வேண்டும். மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட மாட்டாது. அதனபடிப்படையில், ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக மட்டுமே மாகாணங்கள் இடையே பயணிக்க முடியும். உல்லாசப் பயணங்கள் மற்றும் யாத்திரை செல்ல அனுமதி இல்லை. பொது இடங்களில் கூட்டமாக இருக்க கூடாது.

விதுஷனின் உடலை தோண்டி மீளவும் பிரேத பரிசோதனை

பொலிஸாரால் கைதாகி அவர்களது கட்டுப்பாட்டில் இருந்த வேளையில் உயிரிழந்த விதுஷனின் உடலை தோண்டி எடுத்து, மீளவும் பிரதே பரிசோதனைக்கு உட்படுத்துமாறு மட்டக்களப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜூன் 03 ஆந் திகதி சந்திரன் விதுஷன் எனும் இளைஞன் ஐஸ் போதை பொருள் வியாபாரம் செய்வதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சுமார் இரவு 10.45 மணியளவில் கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் காவலில் இருந்த வேளை மறுநாள் அதிகாலை 4.00 மணியளவில் மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை மரணமடைந்திருந்தார். அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற வழக்கு விசாரனையின் போது பிரேத பரிசோதனை அறிக்கையில் தமக்கு சந்தேகம் உள்ளதாகவும் மீளவும் பிரேத பரிசோதனை செய்து அதற்கான சரியான நீதி கிடைக்க வேண்டும் குறித்த இளைஞனது பெற்றோர் நீதிமன்றத்தில் சாட்சியமளித்ததனைத் தொடர்ந்து இன்று (18) இடம்பெற்ற வழக்கு…

இதுவரை 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது

தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில், கடந்த ஒக்டோபர் முதல் இதுவரை 40,674 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். அந்த வகையில், கடந்த 24 மணி நேரத்தில் இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,082 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இவர்களில் பெரும்பாலானோர் கண்டி, மாத்தளை, குளியாப்பிட்டி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். இன்றையதினமும் பயணக்கட்டுப்பாடு அமுலில் இருக்கும் என்பதால் தொடர்ந்தும் பொலிஸார் இது தொடர்பில் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார். இதேவேளை, வாழைத்தோட்டம், மருதானை பிரதேசங்களில் ட்ரோன் மூலம் நடத்திய சோதனை நடவடிக்கையின் போது பயணக்கட்டுப்பாட்டை மீறியமை தொடர்பில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, இதுவரை ட்ரோன் மூலமான நடவடிக்கையில் மொத்தமாக 143 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ்…