சர்ச்சை கதையில் அனுஷ்கா

அனுஷ்கா 20 வயது இளைஞருக்கும், 40 வயது பெண்ணுக்குமான காதலை மையப்படுத்தி தயாராகும் சர்ச்சை படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த அனுஷ்கா பாகுபலி படத்தில் நடித்து மேலும் பிரபலமானார். பின்னர் அனுஷ்காவின் உடல் எடை கூடியதால் பட வாய்ப்புகள் குறைந்தன. வெளிநாடு சென்று சிகிச்சை பெற்று எடையை குறைத்து வந்த அவருக்கு சமீபத்தில் மீண்டும் எடை கூடியது. இதனால் புதிய படங்களில் நடிக்க அனுஷ்காவை யாரும் அணுகவில்லை. முன்னணி கதாநாயகர்களும் அனுஷ்காவை ஜோடியாக்க மறுத்தனர். கடைசியாக அனுஷ்கா நடிப்பில் சைலன்ஸ் படம் வந்தது. அனுஷ்காவுக்கு 39 வயது ஆகியும் இன்னும் திருமணம் ஆகவில்லை. ஏற்கனவே பிரபாசுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டார். தொழில் அதிபரை திருணம் செய்து கொள்ள இருப்பதாகவும் கூறப்பட்டது. இதனை அவர் மறுத்தார். ஜாதகத்தில்…

சினிமா துறையில் பெண்கள் நிலையை கணிக்கும் தமன்னா

திரையுலகில் பெண்களுக்கு எதிரான போக்கு தொடர்ந்து இருக்கிறதா? என்ற கேள்விக்கு பதில் அளித்து தமன்னா கூறும்போது, நடிகை தமன்னா சமூக விஷயங்களை வலைத்தளத்தில் பகிர்ந்து வருகிறார். டைரக்டர் சுராஜ் ஏற்கனவே, ‘நடிகைகள் அரைகுறை உடையில் கவர்ச்சியாக நடிப்பதைத்தான் ரசிகர்கள் விரும்புகிறார்கள். அதிக சம்பளம் பெறும் நடிகைகள் டைரக்டர் சொல்கிறபடி கவர்ச்சியாக நடிக்கத்தான் வேண்டும்'' என்று பேசியது சர்ச்சையானது. சுராஜை தமன்னா கண்டித்தார். தமன்னாவிடம் தற்போது அந்த சம்பவத்தை நினைவுபடுத்தி திரையுலகில் பெண்களுக்கு எதிரான போக்கு தொடர்ந்து இருக்கிறதா? என்ற கேள்வி எழுப்பட்டது. அதற்கு பதில் அளித்து தமன்னா கூறும்போது, “பெண்களுக்கு எதிரான வெறுப்பும், பாரபட்சமும் எல்லா இடங்களிலும் இருக்கிறது. திரைத்துறையில் நடக்கும்போது பெரிதாகி விடுகிறது. முன்பு இயக்குனர் சுராஜ் அர்த்தம் புரியாமல் யதார்த்தமாக பேசி விட்டார். அந்த சமயத்தில் அவர் படத்தில் நான் நடித்துக்கொண்டு இருந்ததால் அச்சம்…

எனக்கு திருமணமா? சுருதிஹாசன் விளக்கம்

எனக்கு திருமணமா? நடிகை சுருதிஹாசன் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களின் கேள்விக்கு விளக்கம் அளித்தார். நடிகை சுருதிஹாசன் டெல்லியை சேர்ந்த சாந்தனு ஹசாரியா என்பவரை காதலித்து வருகிறார். இருவரும் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் சுருதிஹாசன் கலந்துரையாடினார். அப்போது ஒரு ரசிகர் உங்களுக்கு திருமணம் முடிந்துவிட்டதா? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த சுருதிஹாசன் எனக்கு திருமணம் ஆகவில்லை என்றார். எப்போது திருமணம் செய்து கொள்வீர்கள்? என்ற இன்னொரு ரசிகர் கேள்விக்கு அது எனக்கு தெரியாது என்றார். மேலும் சுருதிஹாசன் கூறும்போது, ‘குடும்பத்தினர் உள்பட அனைவரும் பாதுகாப்பாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். எல்லோரிடமும் அன்பு காட்டுங்கள். எனக்கு தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கில மொழிகள் தெரியும். தமிழில் பேசவும் எழுதவும் மெதுவாக படிக்கவும் தெரியும். ஆனால் எனது…

தி.மு.க பிரமுகர் தமிழன் பிரசன்னாவின் மனைவி தற்கொலை

தி.மு.க செய்தி தொடர்பு இணை செயலாளர் தமிழன் பிரசன்னாவின் மனைவி நதியா, தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். தி.மு.க செய்தித் தொடர்பு இணை செயலாளராக இருப்பவர் தமிழன் பிரசன்னா. தி.மு.க.,வின் முன்னணி பேச்சாளர்களில் ஒருவராக இருக்கும் இவர், பல்வேறு டிவி விவாத நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். இந்நிலையில், இவரது மனைவி நதியா இன்று (ஜூன் 8) காலை சென்னை எருக்கங்சேரியில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். நதியாவை பிரசன்னா, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் பிரசன்னா - நதியா தம்பதிகளுக்கு திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகி, 3 குழந்தைகள் உள்ளனர். மனைவி நதியாவின் பிறந்தநாளான இன்று, அதனை சிறப்பாக கொண்டாடி பேஸ்புக்கில் போட வேண்டும் என நதியா கூறியதாக தெரிகிறது. இதற்கு…

வெற்றிமாறனின் அறிவுரையைக் கேட்டிருக்க வேண்டும்..

வெற்றிமாறன் கூறிய அறிவுரையைக் கேட்டிருக்க வேண்டும் என்று இயக்குநர் கார்த்திக் நரேன் தெரிவித்துள்ளார். தனுஷ் நடித்து வரும் படத்தை இயக்கி வருகிறார் கார்த்திக் நரேன். இதன் முதற்கட்டப் படப்பிடிப்பை முடித்துவிட்டுதான் ஹாலிவுட் படப்பிடிப்புக்காக அமெரிக்காவுக்குச் சென்றுள்ளார் தனுஷ். இந்த மாதம் அமெரிக்காவிலிருந்து திரும்பியவுடன், மீண்டும் கார்த்திக் நரேன் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் தனுஷ். சத்யஜோதி நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தின் நாயகியாக மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளராகப் பணிபுரிந்து வருகிறார். தற்போது தனது திரையுலகப் பயணம், படங்கள் உள்ளிட்டவை குறித்து நீண்ட பேட்டியளித்துள்ளார் கார்த்திக் நரேன். அவரது முதல் படம் முடிந்தபிறகு ஒரு பொது நிகழ்ச்சியில், இயக்குநர் வெற்றிமாறன், உடனடியாக அடுத்த படம் எடுக்க வேண்டாம் என்றும், இன்னும் பயணப்பட்டு, சினிமாவைப் பற்றிக் கற்றுக் கொள்ளுங்கள் என்றும் சொன்னார். அப்போது, அவர் சொல்வதை நான்…

நண்பர்களுக்காக எப்போதும் இருப்பவர் விஜய்..

நண்பர்களுக்காக எப்போதும் இருப்பவர் விஜய் என்று மாளவிகா மோகனன் அளித்துள்ள பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் 'மாஸ்டர்'. இந்தப் படத்தில் நாயகியாக நடித்திருந்தார் மாளவிகா மோகனன். அவர் தமிழில் நாயகியாக அறிமுகமான முதல் படமாக 'மாஸ்டர்' அமைந்திருந்தது. தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படத்தில் நாயகியாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடித்ததின் மூலம் விஜய்க்கு நெருங்கிய நண்பர்களில் ஒருவராக மாறியுள்ளார் மாளவிகா மோகனன். விஜய்யுடனான நட்பு குறித்து மாளவிகா மோகனன் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: "விஜய் அவர்கள் நண்பர்களுக்காக எப்போதும் இருப்பவர். அவரது நட்பின் அளவை நம்பவே முடியாது. எப்போது பேச வேண்டுமானாலும் அவரை அழைக்கலாம். அவர் மொபைலை எடுப்பார். உதவி வேண்டுமென்றால் செய்வார். என்னிடம் மட்டுமல்ல, அவரது எல்லா நண்பர்களிடமும் அவர்…