இலங்கையில் மேலும் 1,989 பேருக்கு கொரோனா

இலங்கையில் மேலும் 1,989 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணி உடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்தார்.
அதன் அடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 188,353 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 153, 371 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் இவர்களில் 1,484பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
—–
விடுதலைப் புலிகள் அமைப்பை மீள் உருவாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட முன்னாள் போராளிகள் ஜனநாய கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பொருளாளரான முன்னாள் போராளி ஒருவரை இன்று (01) பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிசார் தெரிவித்தனர்.
மாவட்ட புலனாய்வு பிரிவினரின் இரகசிய தகவலை அடுத்து களுவாங்சிக்குடி பொலிசார் சம்பவ தினமான இன்று முன்னாள் போராளியான முன்னாள் போராளிகள் ஜனநாயகட்சியின் பொருளாளராக செயற்பட்டு வந்த நாகலிங்கம் பிரதீபன் என்பவரை மட்பாண்ட வீதி போரதீவு பிரதேசத்திலுள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்துள்ளனர்.
குறித்த நபரை தடைசெய்யப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பை மீள் உருவாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளார் என்ற குற்றச்சாட்டில் சந்தேகத்தில் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளதாக தெரிவித்த பொலிசார் இதில் கைது செய்யப்பட்டவரை நாளை (02) நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தனர்.

——
நாட்டில் உள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் சீல் வைக்க மதுவரித் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
பயணக் கட்டுப்பாட்டு காலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களத்தின் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.
இதற்கமைய எதிர்வரும் 7 ஆம் திகதி வரையில் நாட்டில் உள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் தற்காலிகமாக சீல் வைக்கப்படுவதாக அவர் மே்லும் தெரிவித்தார்.

Related posts