என் உடலில் இருக்கும் கரோனாவை அழிப்பேன்

தனக்குக் கரோனா தொற்று இருப்பதாக நடிகை கங்கணா ரணவத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சமூக வலைதளங்களில் சர்ச்சைக் கருத்துகளுக்குப் பிரபலமானவர் கங்கணா ரணவத். அவ்வப்போது அதிரடியாக ஏதாவது பகிர்ந்து சிக்கலில் சிக்குவதும் அவருக்கு வாடிக்கையே. சில சமயங்களில் கங்கணாவின் சகோதரி ரங்கோலியும் தன் பங்குக்கு சர்ச்சைகளைக் கிளப்புவார். இதனால் இருவரும் சட்டரீதியான நடவடிக்கைகளைச் சந்தித்துள்ளனர். சமீபத்தில் கூட கங்கணாவின் சர்ச்சைக் கருத்தைக் காரணம் காட்டி ட்விட்டர் நிறுவனம் அவரது கணக்கை நிரந்தரமாக முடங்கியது. இதனால் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கருத்துகளை பகிர்ந்து வருகிறார் கங்கணா. சனிக்கிழமை காலை தனக்குக் கரோனா தொற்று உறுதியானது குறித்து கங்கணா பகிர்ந்துள்ளார். "எனக்கு உடல் சோர்வாக, பலவீனமாக இருந்தது. கண்களில் எரிச்சல் இருந்தது. ஹிமாச்சல் கிளம்பலாம் என்று இருந்தேன். எனவே நேற்று பரிசோதனை செய்து கொண்டேன். இன்று எனக்குக் கோவிட்…

தனுஷ் நடிக்கும் 10 புதிய படங்கள்

தனுஷ் நடித்த கர்ணன் படம் கடந்த ஏப்ரல் மாதம் திரைக்கு வந்து வரவேற்பை பெற்றது. அடுத்து தனுஷ் கைவசம் 10 படங்கள் உள்ளன. அவற்றில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜெகமே தந்திரம் படம் முடிந்து அடுத்த மாதம் ஓ.டி.டி. தளத்தில் வெளியாக உள்ளது.இந்தியில் அக்‌ஷய்குமாருடன் அந்த்ராங்கி ரே படத்தில் நடித்து முடித்துள்ளார். தற்போது த கிரே மேன் என்ற ஹாலிவுட் படத்தில் நடிக்க அமெரிக்கா சென்றுள்ளார். ஹாலிவுட் படப்பிடிப்பை முடித்து விட்டு சென்னை திரும்பியதும் கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இது தனுசுக்கு 43-வது படம். இதில் கதாநாயகியாக நடிக்க மாளவிகா மோகனனை ஒப்பந்தம் செய்துள்ளனர். தொடர்ந்ந்து செல்வராகவன் இயக்கும் நானே வருவேன் படத்தில் நடிக்க உள்ளார்.நீண்ட இடைவெளிக்கு பிறகு செல்வராகவன் தனுஷ் கூட்டணியில் உருவாகும் இந்த படத்துக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு மித்ரன் ஜவஹர்…

உலகை உலுக்கும் கொரோனாவுக்கான சிகிச்சை ஏன் கடினம்?

கொரோனா சிகிச்சை அளிப்பது ஏன் கடினம்? என்பதற்கான சான்றுகள் ஆய்வு செய்யப்பட்டு முடிவுகள் வெளிவந்துள்ளன. சீனாவின் உகான் நகரில் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் கொரோனா வைரசானது முதன்முறையாக கண்டறியப்பட்டு உலக நாடுகளுக்கு தெரிய வந்தது. ஆனால், வேறு சில நாடுகளில் அதற்கு முன்பே இந்த வைரசானது தடம் பதித்துள்ளது என்ற தகவலும் வெளியானது. அதற்கு சான்றாக, அந்நாடுகளில் இருந்து பெறப்பட்ட கழிவுநீர் பரிசோதனை முடிவுகள் அமைந்தன. ஸ்பானிஷ் புளூ கடந்த 19ம் நூற்றாண்டில் ஸ்பானிஷ் புளூ பெருந்தொற்று உலக நாடுகளை மரணத்தில் மூழ்கடித்தது. இதனால் கோடிக்கணக்கான உயிர்கள் பறிபோயின. உலக போர்களை காட்டிலும் அதிக உயிர்ப்பலி கொண்டிருந்தது. பெயருக்கேற்றாற்போல், இந்த ஸ்பானிஷ் புளூவானது முதலில் ஸ்பெயின் நாட்டில் தோன்றவில்லை. வேறு சில நாடுகளில் முதலில் தோன்றிய தொற்றானது அந்நாடுகளால் பாதுகாப்புக்காக மறைக்கப்பட்டன. ஆனால், ஸ்பெயின்…

சுமார் 20 இலட்சம் பேஸ்புக் கணக்குகள் இடைநிறுத்தம் ?

நாட்டின் மொத்த முகநூல் கணக்குகளில் சரியான உரிமையாளர்கள் இல்லாதவர்களென உறுதிப்படுத்தப்பட்டுள்ள சுமார் 20 இலட்சம் கணக்குகளை இடை நிறுத்துவதற்கு தேவையான சட்ட நடவடிக்கை எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படுமென வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இவ்வாறான கணக்குகளை ஒழுங்குபடுத்தி கட்டுப்படுத்த, அரச நிறுவனங்களினூடாக தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வழக்கத்திலுள்ள சட்டத்திற்கமைய வேலைத்திட்டம் ஒன்றை வகுப்பதற்கு நீதி அமைச்சர் அலி சப்ரியும் தானும் இணைந்து அமைச்சரவை பத்திரம் ஒன்றை முன் வைத்திருப்பதாக அவர் குறிப்பிட்டார். இதற்கு அனுமதி கிடைக்கப் பெற்றதும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். உரிமையாளர்கள் இல்லாத முகநூல் கணக்குகளின் மூலம் பயங்கரவாதம், அடிப்படைவாதம் மற்றும் இனவாதத்தை தூண்டும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. இளம் சந்ததியினரை வழி கெடுக்கும் பல்வேறு சமூக விரோத செயற்பாடுகளை தூண்டுவதற்கும் இது வழி வகுப்பதாக கண்காணிக்கப்பட்டுள்ளது. இதன்படி தேசிய பாதுகாப்பையும் சிறந்த சமூக கட்டமைப்பையும்…