அஜித் 50ஆம் பிறந்த நாள் ஸ்பெஷல்

அகவை 50ஐ நிறைவு செய்யும் ‘தல’ அஜித் குமாரின் வாழ்வின் அசத்தல் 50 தருணங்களை நினைவுகூர்வோம். 1. 1971 மே 1 – ஹைதரபாத்தில் சுப்பிரமணியம்- மோஹினி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். 2. 1990 ஏப்ரல் 13 –‘என் வீடு என் கணவர்’ திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தில் ஒரு பாடலில் பள்ளி மாணவராக தலைகாட்டியிருப்பார் அஜித். இதுவே அவர் திரையில் தோன்றிய முதல் திரைப்படம். 3. 1993 ஜூன் 4 – அஜித் நாயகனாக நடித்த ‘அமராவதி’ வெளியானது. இதற்கு முன்பே ‘பிரேம புஸ்தகம்’ என்னும் தெலுங்குப் படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமானாலும் அது தாமதமாகவே வெளியானது. 4. 1993 ஜூலை 16 – அஜித் நடித்த ஒரே நேரடி தெலுங்குப் படமான ‘பிரேம புஸ்தகம்’ வெளியானது. 5. 1995 ஆகஸ்ட் 5 – அஜித்…

தேச துரோகச் சட்டத்துக்கு எதிராக மனுத்தாக்கல்

தேச துரோகச் சட்டம் அரசியலமைப்புச் சட்டத்தின்படி செல்லுபடியாகுமா எனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், மத்திய அரசு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். கடந்த 3 மாதங்களுக்கு முன்பாக இதேபோன்ற மனுவை வழக்கறிஞர்கள் தாக்கல் செய்திருந்தனர், ஆனால், அந்தமனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது. இந்த மனுவை மணிப்பூரைச் சேர்ந்த பத்திரிகையாளர் கிஷோர்சந்திரா வாங்கமேச்சா, சத்தீஸ்கரைச் சேர்ந்த பத்திரிகையாளர் கண்ஹையா லால் சுக்லா ஆகியோர் தாக்கல் செய்தனர். இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் யுயு லலித், இந்திரா பானர்ஜி, கே.எஸ். ஜோஸப் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் அமர்வு மத்திய அரசு பதில் அளிக்கக் கோரி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். மனுதாரர்கள் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது கடந்த 1962-ம்…

துபாய் தொழில் அதிபரை மணக்கும் அனுஷ்கா?

ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார், சூர்யா, விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள அனுஷ்கா 39 வயது ஆகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். அனுஷ்கா திருமணம் குறித்து தொடர்ந்து கிசுகிசுக்கள் வந்தன. பாகுபலி படத்தில் பிரபாஸ் ஜோடியாக நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்ததாக பேசப்பட்டது. பின்னர் ஆந்திராவை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரை காதலிப்பதாக தகவல் பரவியது. ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் விளையாடும் கிரிக்கெட் வீரர் ஒருவருடன் இணைத்து பேசினர். இறுதியாக மனைவியை விவாகரத்து செய்த 44 வயது தெலுங்கு இயக்குனர் பிரகாஷ் கோவலமுடியை அனுஷ்கா காதலிப்பதாகவும், இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்க உள்ளது என்றும் பேசப்பட்டது. இவற்றையெல்லாம் அனுஷ்கா மறுத்தார். சமீபத்தில் அனுஷ்காவிடம் உங்கள் திருமணம் எப்போது என்று நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது எனக்கு தெரியவில்லை. திருமணம் முடிவானதும் அனைவருக்கும் தெரிவிப்பேன் என்றார். இந்த…

நயன்தாரா படத்துக்கு மீண்டும் சர்வதேச விருது

நடிகை நயன்தாரா, காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கிய கூழாங்கல் என்ற படத்தை தயாரித்துள்ளார். குடிகார தந்தைக்கும், மகனுக்குமான உறவு பற்றிய கதை. ‘கூழாங்கல்’ தலைப்பை போல் மிக எளிமையாக இருந்தாலும் அது எங்களுக்குள் ஏற்படுத்திய தாக்கம் ஆழமானது. இத்திரைப்படத்தை சர்வதேச திரைப்பட விழாக்களிலும் கொண்டு செல்வது என முடிவு செய்துள்ளோம் என்று நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் தெரிவித்து இருந்தனர். இதையடுத்து கூழாங்கல் படம் நெதர்லாந்தில் உள்ள ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் போட்டி பிரிவில் திரையிடப்பட்டு சிறந்த படத்துக்கான விருதை பெற்றது. ரோட்டர்டாம் சர்வதேச விழாவில் விருது பெற்ற முதல் தமிழ் படம் கூழாங்கல். இதையடுத்து நியூயார்க்கில் நடந்த டைரக்டர்ஸ் நியூ திரைப்பட விழாவுக்கும் அனுப்பப்பட்டது. அங்கு கூழாங்கல் படம் திரையிடப்பட்டு சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டு விருது பெற்றுள்ளது. இதற்காக நயன்தாரா…

அஜித் வலிமை படத்துக்கு விலைபேசும் ஓ.டி.டி. தளங்கள்

கொரோனா சினிமா தொழிலை புரட்டி போட்டுள்ளது. தியேட்டர்களை மூடி உள்ளதால் திரைக்கு வர தயாராக இருந்த 50-க்கும் மேற்பட்ட படங்கள் முடங்கி உள்ளன. இந்த சிக்கலை சாதகமாக்கிய ஓ.டி.டி. தளங்கள் ஏற்கனவே சூர்யாவின் சூரரை போற்று, விஜய்சேதுபதியின் க.பெ.ரணசிங்கம், நயன்தாரா நடித்துள்ள மூக்குத்தி அம்மன், கீர்த்தி சுரேசின் பெண்குயின் உள்ளிட்ட பல படங்களை கைப்பற்றி ஓ.டி.டி.யில் வெளியிட்டன. தனுஷ் நடித்துள்ள ஜெகமே தந்திரம் படத்தையும், ஓ.டி.டி. தளம் வாங்கி ஜூன் மாதம் வெளியிடுகிறது. விஜய்சேதுபதியின் துக்ளக் தர்பார், திரிஷா நடித்துள்ள ராங்கி, சிவகார்த்திகேயனின் டாக்டர், நயன்தாரா நடித்துள்ள நெற்றிக்கண் ஆகிய படங்களையும் ஓ.டி.டி.யில் வெளியிட பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன. இந்த நிலையில் அஜித்குமார் நடித்துள்ள வலிமை படத்துக்கும் ஓ.டி.டி. தளங்கள் விலை பேசுவதாக பரபரப்பு தகவல் பரவி வருகிறது. இந்த வருடம் ஆகஸ்டு மாதம் திரைக்கு வருவதாக இருந்த…

ஆக்சிஜன் பற்றாக்குறை 8 கொரோனா நோயாளிகள் பலி

டெல்லி முழுவதும் நாள்தோறும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதியாகி வருகிறது. இதனால் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவி வருகிறது. இந்நிலையில், டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் இன்று பிற்பகல் 12 மணியளவில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதால் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மருத்துவர் உள்பட 8 கொரோனா நோயாளிகள் பலியாகியுள்ளனர். கடந்த 15 நாள்களுக்கு மேலாக டெல்லி மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவி வருவது குறிப்பிடத்தக்கது. டெல்லியில் ஆக்சிஜன் முக்கிய பிரச்சினையாக உள்ளது. அனைத்து மருத்துவமனைகளிலிருந்தும் ஆக்சிஜன் தேவை என அறிக்கை வருகிறது. டெல்லிக்கு தினமும் 976 டன் ஆக்சிஜன் தேவைப்படுகிறது என்று நாங்கள் நீதிமன்றங்களில் கூறியுள்ளோம் ஆனால் எங்களுக்கு 490 டன் ஆக்சிஜன் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. நேற்று எங்களுக்கு 312 டன் மட்டுமே கிடைத்தது. இது எவ்வாறு சாத்தியப்படும் என ?…