விவேக்கின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய நடிகர் விஜய்

நடிகர் விவேக்கின் குடும்பத்தினரை நடிகர் விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் விவேக். அவருக்கு கடந்த 16-ம் தேதி திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
ஆனால், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் விவேக் கடந்த 17-ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நடிகர் விவேக்கின் மறைவு பொதுமக்கள், திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விவேக் மரணமடைந்த போது நடிகர் விஜய் படப்பிடிப்பிறாக ஜார்ஜியா நாட்டிற்கு சென்றிருந்ததால் அவரால் விவேக்கின் இறுதிச்சடங்கில் பங்கேற்கமுடியவில்லை. இதற்கிடையில், படப்பிடிப்பு முடிந்து ஜார்ஜியாவில இருந்து நடிகர் விஜய் நேற்று சென்னை திரும்பினார்.
இந்நிலையில், ஜார்ஜியாவில் இருந்து சென்னை திரும்பிய நடிகர் விஜய் இன்று காலை மறைந்த நடிகர் விவேக்கின் வீட்டிற்கு சென்றார். அங்கு நடிகர் விவேக்கின் குடும்பத்தினரை சந்தித்த நடிகர் விஜய் ஆறுதல் கூறினார்.
நடிகர் விஜய்யுடன், நடிகர் விவேக் ஏராளமான படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts