நடிகைக்கு மீண்டும் கொரோனா

பிரபல இந்தி நடிகை பாருல் சவுத்ரி. இவர் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து இருக்கிறார். பாருல் சவுத்ரிக்கு ஏற்கனவே கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று மீண்டார். இந்த நிலையில் அவருக்கு மீண்டும் உடல்நல குறைவு ஏற்பட்டு பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து பாருல் சவுத்ரி கூறும்போது, “எனக்கு கடந்த செப்டம்பர் மாதம் கொரோனா தொற்று ஏற்பட்டது. அப்போது கஷ்டமாக தெரியவில்லை. தற்போது 2-வது முறை கொரோனா தொற்று ஏற்பட்டு மிகவும் கஷ்டப்படுகிறேன். உடம்பு வலி, தலை வலி இருக்கிறது. சோர்வாக உள்ளது. உடம்பில் தெம்பே இல்லை. வயிற்றுப்போக்கும் உள்ளது. எனது அம்மா, அப்பா. சகோதரிக்கும் கொரோனா தொற்று உள்ளது. அனைவரும் வீட்டில் தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வருகிறோம். ஒரு முறை கொரோனா வந்தால் மீண்டும் வராது என்று இருக்காதீர்கள். கூட்டம் அதிகம் உள்ள…

இந்தியாவில் புதிதாக 2,34,692 பேருக்கு கொரோனா 1,341 பேர் பலி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,34,692 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவின் கொடூரம் சமீப காலமாக குறைந்து வந்தது ஆனால் தற்போது கடந்த சில வாரங்களாக புதிதாக தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட இரண்டாவது நாடாக இந்தியா விளங்குகிறது. கொரோனாவின் தீவிர தாக்குதலுக்கு ஆளாகி உள்ள முதல் 5 மாநிலங்களின் பட்டியலில் மராட்டியம், கேரளா, கர்நாடகம், தமிழகம், ஆந்திரா ஆகிய மாநிலங்கள் இருக்கின்றன இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,34,692 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,45,26,609 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 1,341 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை…

நடிகர் விவேக் மறைவு ; இன்று மாலை உடல் தகனம்

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான விவேக் சென்னை சாலிகிராமம் பத்மாவதி நகரில் உள்ள வீட்டில் நேற்று காலை குடும்பத்தினருடன் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அவருக்கு திடீரென்று நெஞ்சுவலியும், மூச்சுத்திணறலும் ஏற்பட்டது. மயக்க நிலைக்கு சென்றார். உடனடியாக அவரை வடபழனியில் உள்ள சிம்ஸ் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். விவேக்கை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இதய செயல்பாடு குறைந்ததால், இதயத்தை முழுமையாக செயல்பட வைக்க எக்மோ கருவி பொருத்தி சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை 4.35 மணியளவில் நடிகர் விவேக் காலமானார். 59 வயதாகும் விவேக் நூற்றுக்கணக்கான படங்களில் நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து இருக்கிறார். ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்கள் படங்களிலும் நடித்து இருக்கிறார். திரைப்படங்களில் சீர்திருத்த கருத்துகளையும்…