கொரோனா வந்தாலும் உயிரிழப்பு ஏற்படாது – நடிகர் விவேக்

தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு கொரோனா வந்தாலும் உயிரிழப்பு என்பது ஏற்படாது என தடுப்பூசி போட்டுக்கொண்ட நடிகர் விவேக் அறிவுறுத்தி உள்ளார். நடிகர் விவேக் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். தடுப்பூசி குறித்து எவ்வித அச்சமும் தேவையில்லை. தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின்பும் கொரோனா வரும். ஆனால் உயிரிழப்புகள் போன்ற பெரிய பாதிப்புகள் இருக்காது. தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின்னரும் முக கவசம் அணிய வேண்டும். அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் மிகவும் திறமைசாலிகள் எனத் தெரிவித்தார். ----- கொரோனா பாதிப்பு குறித்து நடிகர் செந்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசும்போது, ‘'எனக்கு கொரோனா வந்தது உண்மைதான். யாரும் பயப்பட வேண்டாம். நான் நன்றாக இருக்கிறேன். கொரோனா வந்தால் யாரும் பயப்பட தேவை இல்லை. பரிசோதனை செய்து…

ஷங்கருக்கு அந்நியன் படத்தயாரிப்பாளர் நோட்டீஸ்

இயக்குநர் ஷங்கருக்கு அந்நியன் படத்தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். 2005-ம் ஆண்டு விக்ரம் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் அந்நியன். இத்திரைப்படத்தின் இந்தி ரீமேக் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதன்படி ரன்வீர் சிங் நடிப்பில் பென் ஸ்டுடியோஸ் ஜெயந்திலால் தயாரிப்பில் அந்நியன் இந்தி ரீமேக்கை இயக்குகிறார் ஷங்கர். படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக்கலைஞர்கள் குறித்த விவரத்தை படக்குழு இன்னும் அறிவிக்கவில்லை. இந்நிலையில் அந்நியன் படத்தின் உரிமம் தன்னிடம் இருப்பதாகவும் ரீமேக் செய்வதற்குரிய முறையான அனுமதியை ஷங்கர் பெறவில்லை என்றும் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது, அந்நியன் இந்தி ரீமேக் செய்யப்படுவதாக வெளியான தகவல் குறித்து கேள்விப்பட்டு மிகவும் அதிர்ச்சியடைந்தேன். சுஜாதாவிடம் அந்தக் கதையை முழு தொகை கொடுத்து…

எஸ்-400 ஏவுகணை ஒப்பந்தத்தில் இந்தியாவும், ரஷியாவும் உறுதி

ரஷியாவிடம் இருந்து 5 எஸ்-400 ஏவுகணை தடுப்பு அலகுகளை வாங்குவதற்கு இந்தியா கடந்த 2018-ம் ஆண்டு ஒப்பந்தம் போட்டுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அமெரிக்கா, ரஷியாவிடம் இருந்து மேற்படி தளவாடங்களை வாங்கினால் பொருளாதார தடையை சந்திக்க நேரிடும் என எச்சரித்தது. ஆனால் அப்போதைய டிரம்ப் நிர்வாகத்தின் இந்த மிரட்டலையும் மீறி இந்தியா இந்த ஒப்பந்தத்தை மேற்கொண்டு நடைமுறைப்படுத்தி வருகிறது. எனவே அமெரிக்காவின் பொருளாதார தடையை எதிர்கொள்ள நேரிடும் என கூறப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த மாதம் இந்தியா வந்திருந்த அமெரிக்க ராணுவ மந்திரி ஆஸ்டின், இந்த தடை குறித்து ராஜ்நாத் சிங்கிடம் எதுவும் பேசவில்லை என தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் எஸ்-400 ஏவுகணை தடுப்பு அலகுகள் தொடர்பான ஒப்பந்தத்தை செயல்படுத்துவதில் இந்தியாவும், ரஷியாவும் உறுதியாக இருப்பதாக இந்தியாவுக்கான ரஷிய தூதர் நிகோலெய் குதாசேவ் உறுதிபட…

இந்தியாவில் இதுவரை இல்லாத கொரோனா பாதிப்பின் புதிய உச்சம்

இந்தியாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் எகிறுகிறது. ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கானோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு வந்த கொரோனாவின் முதல் அலையைக் காட்டிலும், தற்போது வந்துள்ள இரண்டாவது அலையின் தாக்கம் மிக அதிக அளவில் இருக்கிறது. இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,00,739 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,40,74,564 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 1,038 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1,73,123 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 93,528 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,24,29,564 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது…

நேற்று 10 பேர் உயிரிழப்பு – 758 பேர் கைது

புத்தாண்டு தினமான நேற்று இடம்பெற்ற விபத்துக்களில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் மது அருந்திவிட்டு வாகனம் செலுத்திய 758 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். ----- இந்திய மீனவர்கள் அத்து மீறி இலங்கை கடற்பரப்பில் நுழைந்து மீன் பிடிக்கும் நடவடிக்கைகளை ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க கடற்தொழில் அமைச்சர் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று (15) காலை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இந்திய மீனவர்கள் அத்து மீறி நுழைந்து இலங்கை கடற்பரப்பில் மீன் பிடியில் ஈடுபடும் நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டு…