முயற்சி செய்தால் முடியாது என்று ஒன்றுமில்லை

சித்திரைப் புத்தாண்டு காலப்பகுதியில் சுகாதார ஆலோசனைகளை முறையாக பின்பற்றுமாறு இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சுகாதார வழிமுறைகளை உரிய வகையில் பின்பற்றாவிடின் மிகுந்த சவாலுக்கு மத்தியில் கொவிட் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு மேற்கொண்ட முயற்சிகள் சீர்குலையுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புத்தாண்டு காலத்தில் முகக் கவசங்களை அணிந்து, சமூக இடைவெளிகளைப் பேணி நடந்து கொள்ளுமாறு இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா கேட்டுக் கொண்டுள்ளார்.

—–

ஆயிரம் ரூபா சம்பளத்தினை பெற்றுத்தர முடியாது என்று பலர் தெரிவித்தனர். அதனை பெற்றுக்கொடுத்த பின் வேலை நாட்கள் குறைக்கப்படும் என்றார்கள் அதனையும் நிர்வர்த்தி செய்தவுடன் இன்று கூறுகிறார்கள். மேலதிக இறாத்தல் கொழுந்துக்காசு இல்லை என்று எதனை செய்தாலும் அதில் குறை காண்பதில் தான் இந்த சமூகம் உள்ளது. ஆனால் முயற்சி செய்தால் முடியாது என்று ஒன்றுமில்லை. என்பதனை இந்த ஆயிரம் ரூபா சம்பளத்தின் மூலம் நிரூபித்து காட்டியுள்ளோம் என தோட்ட வீடமைப்பு மற்றும் சமூதாய உட்கட்டமைப்பு ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட டயகம சௌமிய மூர்த்தி கல்லூரியில் அப்பிரதேச மாணவர்கள் தகவல் தொழிநுட்ப அறிவினை விருத்தி செய்யும் முகமாக இரண்டு திறன்விருத்தி வகுப்பறைகள் மாணவர்களின் பயனப்பாட்டிக்காக கையளிக்கும் நிகழழ்வு தோட்ட வீடமைப்பு மற்றும் சமூதாய உட்கட்டமைப்புகள் ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் நேற்று (10) மாலை திறந்து வைக்கப்பட்டன. அதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன் போது இலங்கை இந்திய பேரவையினால் 25 வரிய மாணவர்களுக்கு கற்றல் நடவடிக்கைகளுக்காக புலமைப்பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில். இன்று மனிதபிமானமாக செய்கின்ற சேவைகளுக்கு கூட நன்றி தெரிவிக்கும் நிலை உருவாகியுள்ளது. ஆனால் நாம் பாடசாலைக்ளுக்காக செய்கின்ற சேவைகள் மனிதபிமானம் அவ்வாறான விடயங்கள் நன்றித் தெரிவிக்க அவசியமில்லை. எனினும் ஒரு சமூகம் மனித அபிமானத்துடன் வாழ்ந்தால் தான் அந்த சமூகம் முன்னேற்றம் காணும் அதற்காக நாம் சிறுவயது முதல் மனிதபிமான பண்புகளை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும். அதற்கு ஆசிரியர்கள் எந்த பாடம் கற்பித்தாலும் முதலில் மாணவர்கள் மத்தியில் மனிதபிமான பண்புகளை ஏற்படுத்த வேண்டும்.

இன்று ஒரு சில ஆசிரியர்கள் ஏனோ தானோ என்று கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள். எல்லாருமல்ல ஒரு சிலர் மாத்திரம் அவ்வாறு செய்கின்றனர். எந்த துறையாயினும் சரி அதனை மனசாட்சியுடன் திறமையாக முழுமூச்சாக செய்தால் உலகம் உங்கள் கைகளில் என்பதனை நாம் மறந்து விட கூடாது.அதே நேரம் இந்த பாடசாலையில் பல மாணவர்களுடன் பேசிய போது பொலிஸாராக,தொழிநுட்ப வியலாளராக,பொறியியலாராக வர ஆசைப்படுவதாக தெரிவித்தார்கள்.

ஆகவே இனி வரும் காலங்களில் டயகம பகுதியில் உள்ள பெண்கள் நிச்சயம் முன்னேறுவார்கள் காரணம் ஒவ்வொரு பெண் மாணவர்களுக்கும் ஒரு குறிக்கோள் உள்ளது. ஆகவே இந்த பிரதேசம் விரைவில் மாற்றம் காணும் இன்று பல படித்தவர்களும் படிக்காதவர்களும் வேலை வாய்ப்புக்காக என்னை நாடி வருகிறார்கள். அதிகமானவர்கள் நினைப்பது வேலை பெற்றுவிட்டால் இது தான் வாழ்க்கை எல்லாம் நடந்து முடிந்துவிட்டது அதில் நாம் பூரணத்துவம் அடைந்து விட்டோம் என்று நினைக்கிறார்கள்.அந்த மனநிலையினை நாம் மாற்றியாக வேண்டும்.சுய தொழிலில் ஈடுபடவும் வாய்ப்பு உள்ளது. என்பதை எடுத்துகாட்ட வேண்டும். அதே நேரம் நன்றாக படித்தால் என்ன வேண்டுமாலும் செய்யலாம்.

ஆகவே ஒரு பாடசாலை மீது பலர் அக்கறை வைத்திருப்பார்கள். ஆனால் நீங்கள் உங்கள் பெறுபேறுகளை உயர்த்தவில்லை என்றால் அந்த பாடசாலை சமூத்தை விட்டு காணாமல் போய் விடும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இதே நேரம் நான் அண்மையில் பெற்றுக்கொண்ட தகவல்களின் அடிப்படையில் 628 தமிழ் பாடசாலைகள் உள்ளன அதில் 124 பாடசாலைகள் ரொம்ப மோசமான நிலையில் உள்ளன.40 பாடசாலைகள் இடிந்து விழும் நிலையில் உள்ளன மாணவர்கள் மைதானத்தில் அமர்ந்து கற்றல் நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள் .ஆனால் நம்மில் படித்து விட்டு முன்னேறிய சிலர் நமது பிரதேசத்தினையே மறந்து செயப்படுகிறார்கள் இன்று பலர் வைத்தியர்களாக இருக்கலாம், சட்டத்தரணிகளாக இருக்கலாம் உருவாக்கவும் முடியும்.

ஆனால் அவர்கள் தாங்கள் வாழுகின்ற பிரதேசங்களை மறப்பார்களேயானால் அதுவே இருக்கின்ற மிகப்பெரிய கொடுமை. அதே நேரம் அண்மையில் ஜனாதிபதி அவர்களால் பலருக்கு பட்டதாரி நியமனங்கள் வழங்கப்பட்டிருந்தன அதில் மலையகத்தைச் சேர்ந்த சுமார் 300 இற்கும் மேற்பட்டவர்களுக்கு பட்டாதாரி நியமனங்கள் கிடைக்கப்பட்டிருந்தது அதில் ஒரு சில பட்டதாரிகள் கணித விஞ்ஞானப்பட்டதாரிகள் எமக்கு இன்று மிகவும் பற்றாக்குறையாக இருப்பதும் அந்த ஆசிரியர்கள் தான் ஆனால் அவர்களில் ஒரு சிலர் கூறியதை கேட்டால் மிகவும் மனவறுத்தம் ஏற்படுகிறது.

ஆசிரியர் நியமனம் என்றால் வேண்டாம் எங்களுக்கு நியமனங்களை வெளி மாவட்டத்திற்கு பெற்றுக்கொடுங்கள் என்று கேட்டிருகிறார்கள் இப்படியிருக்கும் போது எமது சமூகம் எவ்வாறு முன்னேற்றம் அடையும் எனது தந்தை 1998 ஆண்டு பகுதியில் மலையகத்திற்கு பல்கலைக்கழகம் ஒன்று வேண்டும் என்று ஒரு கையேட்டில் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் அது எமக்கு சுமார் 20 ஆண்டுகள் பின் தங்கிய நிலையில் தற்போது அதற்கான ஆரம்பகட்ட வேலைகள் நடைகின்றன. அது நான் அல்ல யார் வந்தாலும் நிலைமை இப்படி தான் இருக்கும் ஏனென்றால் நாம் சிந்தித்து செயப்படாத வரை எமக்கு எதுவும் கிடைக்கப்போவதில்லை. நாம் எதனை எடுத்தாலும் போராடி தான் பெறவேண்டியிருக்கும் ஆகவே தான் நாம் ஒவ்வொரு விடயத்திலும் பத்து ஆண்டுகள் இருபது ஆண்டுகள் என பின்தங்கிய நிலையில் இருக்கின்றோம் இது மாற வேண்டும் சுய நலன்களை மறந்து சமூக உணர்வோடு செயப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

அதிபர்.பி.கோபால்ராஜ் ஏற்பாட்டில் நடைபெற்ற குறித்த நிகழ்வுக்கு இலங்கை இந்திய பேரவையில் தலைவர் ராஜூ சிவராமன், முன்னாள் மத்திய மாகாணசபை உறுப்பினர்களான பி.சத்திவேல், பிலிப்குமார், நுவரெலியா கல்வி வலயத்தின் அதிகாரிகள் அதிபர்கள், ஆசிரியர்கள்.உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

Related posts