தமிழகத்தில் 72.78% வாக்குப்பதிவு- மாவட்டம் வாரியாக அதிகாரப்பூர்வ விவரம்

தமிழகத்தில் 72.78 சதவீத வாக்கு பதிவாகியுள்ளது; மாவட்டம் வாரியாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அதிகாரபூர்வமாக அறிவித்து உள்ளார்.

தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் உள்ள 88 ஆயிரத்து 937 வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் அந்தந்த தொகுதி வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்கு எண்ணும் மையங்களுக்கு பாதுகாப்பாக கொண்டுசெல்லப்பட்டன.

சென்னையில் 3 வாக்கு எண்ணும் மையங்கள் உட்பட மாநிலம் முழுவதும் 75 வாக்கு எண்ணும் மையங்களில் தொகுதிவாரியாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன.

மையங்களில் ஒவ்வொரு தொகுதிக்கும் தனித்தனி ஸ்ட்ராங் ரூம்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. சீலிடப்பட்ட அந்த அறைகளுக்கு வெளியே துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப் படையினர் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் ஆயுதப்படை காவலர்களும் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.

வாக்கு எண்ணும் மையத்தின் நுழைவு வாயில்களில் போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையத்திலும் சுமார் 500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறைகளிலும், அதற்கு வெளியேயும் சிசிவிடி கேமராக்கள் பொருத்தப்பட்டு, 24 மணி நேரமும் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வரும் 2ஆம் தேதி அனைத்து மையங்களிலும் வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும்.

இந்த நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் 72.78 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அதிகாரபூர்வமாக அறிவித்து உள்ளார்.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழக சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் 72.78 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.

தமிழகத்தில் அதிகபட்சமாக தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தொகுதியில் 87.33% வாக்குகள் பதிவாகி உள்ளது. குறைந்தபட்சமாக சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் 55.52% வாக்குகள் பதிவாகி உள்ளது என கூறினார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி போட்டியிட்ட எடப்பாடி தொகுதியில் 85.6 சதவீத வாக்குகள் பதிவாகின.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் 60.52 சதவீத வாக்குகள் பதிவவாகி உள்ளது.

கமல்ஹாசன் போட்டியிட்ட கோவை தெற்கு தொகுதியில் 60.72 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.

நாம் தமிழர் சீமான் போட்டியிட்ட திருவொற்றியூர் தொகுதியில் 65 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் போட்டியிட்ட போடி தொகுதியில் 73.65 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.

பாஜக மாநில தலைவர் எல்.முருகன் போட்டியிட்ட தாராபுரம் தொகுதியில் 74.14 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.

டிடிவி தினகரன் போட்டியிட்ட கோவில்பட்டி தொகுதியில் 67.43 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.

திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி போட்டியிட்ட சேப்பாக்கம் தொகுதியில் 58.41 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.

பாஜக சார்பில் நடிகை குஷ்பு போட்டியிட்ட ஆயிரம் விளக்கு தொகுதியில் 58.4 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.

திருவள்ளூர் -70.56%
சென்னை -59.06 %
காஞ்சிபுரம் – 71.98%
வேலூர் – 73.73%
கிருஷ்ணகிரி – 77.30%
தர்மபுரி – 82.35%
திருவண்ணாமலை – 78.62%
விழுப்புரம் -7856%
சேலம் – 79.22%
நாமக்கல் – 79.72%
ஈரோடு – 77.07%
நீலகிரி – 69.68%
கோவை – 68.70%
திண்டுக்கல் – 77.13%
கரூர் – 83.92%
திருச்சி – 73.79%
பெரம்பலூர் – 79.09%
கடலூர் – 76.50%
நாகை – 75.48%
திருவாரூர் – 76.53%
தஞ்சை – 74.13%
புதுக்கோட்டை – 76.41%
சிவகங்கை – 68.94%
மதுரை -70.33%
தேனி 71.75%
விருதுநகர் – 73.77%
ராமநாதபுரம் – 69.60%
தூத்துக்குடி -70.20%
திருநெல்வேலி – 66.65%
கன்னியாகுமரி – 68.67%
அரியலூர் – 82.47%
திருப்பூர் – 70.12%
கள்ளக்குறிச்சி – 80.14%
தென்காசி – 72.63%
செங்கல்பட்டு -68.18%
திருப்பதூர் – 77.33%
ராணிப்பேட்டை – 77.92%

Related posts