டக்ளஸ் அங்கயன் இருவராலும் மக்கள் மனங்களை இனி வெல்ல முடியுமா..?

இந்திய மீனவர்களுக்கு இலங்கை கடலில் மீன் பிடிக்க அனுமதி?

இலங்கை கடற்பரப்புக்குள் இந்திய மீனவர்களை அனுமதிப்பதற்கான யோசனையொன்றை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்தியாவிடம் முன்வைத்துள்ளார்.

சில கட்டுப்பாடுகளின் கீழ் இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பினுள் பிரவேசித்து, கடற்றொழிலில் ஈடுபடுவதற்கான அனுமதியை வழங்கும் வகையில், இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கட்டணம் செலுத்தி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ளும் நடைமுறையொன்றை அறிமுகப்படுத்தி, இலங்கை கடற்பரப்பினுள் பிரவேசிப்பதற்கு இந்திய மீனவர்களுக்கு அனுமதி வழங்க யோசனை முன்வைத்ததாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.

——

யாழ். மாவட்டத்தில் ஏற்கனவே 10 பாடசாலைகள் தேசிய பாடசாலையாகத் தரம் உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து மேலும் 17 பாடசாலைகளை தேசிய பாடசாலையாக மாற்றுவதற்கு பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் அங்கஜன் இராமநாதனின் கோரிக்கையை கல்வி அமைச்சர் கலாநிதி ஜீ.எல் பீரிஸ் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் அங்கஜன் இராமநாதனின் கோரிக்கையை கல்வி அமைச்சர் கலாநிதி ஜீ.எல் பீரிஸ் ஏற்றுக்கொண்டுள்ளார்.

இதற்கான கலந்துரையாடல் நேற்று வியாழக்கிழமை கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகளுக்கும் யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமாகிய அங்கஜன் இராமநாதனுக்குமிடையில் கொழும்பில் நடைற்றது. யாழ். மாவட்டத்தின் கஷ்டப்பட்ட பிரதேசங்களான தீவகம் மற்றும் மருதங்கேணி பகுதிகளின் எதிர்கால கல்வியை மேம்படுத்தும் முகமாக விசேட திட்டத்தின் கீழ் தீவகத்தில் 03 பாடசாலைகளும் மருதங்கேணியில் ஒரு பாடசாலையையும் தேசிய பாடசாலையாக தரமுயர்த்தப்படவுள்ளன.
யாழ். புங்குடுதீவு மஹா வித்தியாலயம், அனலைதீவு சதாசிவ வித்தியாலயம், புங்குடுதீவு பெண்கள் றோமன் கத்தோலிக்கப் பாடசாலை, காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரி ஆகிய பாடசாலைகளே இவ்வாறு விசேடமாக தரம் உயர்த்தப்பட உள்ளன.

ஆகவே இவ் வருடம் 2021 நிறைவடைய முன்னர் 17 பாடசாலைகளையும் தேசிய பாடசாலை ஆக்குவதற்கு நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன என அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts