இளம் தலைமுறையினருக்கு ஊக்கம்: அனிருத்

ஏ.ஆர்.ரஹ்மானின் புதிய முயற்சிகள் இளம் தலைமுறையினருக்கு ஊக்கமாக இருப்பதாக இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்துள்ளார். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கதை மற்றும் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘99 ஸாங்ஸ்’. இதன் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் உடன் பணிபுரிந்த இயக்குநர்கள், நடிகர்கள் மற்றும் இதர இசையமைப்பாளர்கள் என ஒரு பெரும் படையே கலந்து கொண்டது. இந்த விழாவில் இசையமைப்பாளர்களில் யுவன், ஜி.வி.பிரகாஷ் மற்றும் அனிருத் மூவருமே கலந்து கொண்டனர். இதில் இசையமைப்பாளர் அனிருத் பேசியதாவது: "நான் சிறுவயதில் முதன்முதலாகக் கேட்க ஆரம்பித்தது ‘காதலன்’ பட பாடல்கள். அது தான் எனக்கு முதல் ஊக்கமாக அமைந்தது. பள்ளிக்காலங்களில் நானும் எனது நண்பர்கள் அனைவரும் ரஹ்மான் வெறியர்களாக இருந்தோம். அவரது பாடல் கேசட் வெளியானதும் முதல் நாளே எப்படியாவது போய் வாங்கி விடுவோம். அவரது…

இந்தி படத்தில் வில்லனாக விஷால்

தமிழ் நடிகர்கள் இந்தி படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர். தமிழ் நடிகர்கள் இந்தி படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர். தனுஷ் ராஞ்சனா, ஷமிதாப் ஆகிய இந்தி படங்களில் நடித்துள்ளார். தற்போது அட்ராங்கி ரே என்ற இந்தி படத்தில் நடித்து முடித்துள்ளார். விஜய்சேதுபதி மாநகரம் படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்கிறார். நடிகர் விஷால் சில மாதங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் இந்தி நடிகர் சோனுசூட்டை சந்தித்து கொரோனா பேரிடர் காலத்தில் மக்களுக்கு உதவிகள் செய்ததற்காக பாராட்டினார். அப்போது இந்தி படங்களில் நடிக்க வருமாறு விஷாலுக்கு சோனுசூட் அழைப்பு விடுத்தார். இந்த நிலையில் விரைவில் இந்தி படத்தில் நடிக்க விஷால் தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. விஷால் நடித்து 2018-ல் வெளியாகி வசூல் குவித்த இரும்புத்திரை படத்தின் இந்தி ரீமேக்கில் வில்லனாக விஷால் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. தமிழ் இரும்புத்திரையில்…

கதை எழுதி படம் தயாரிப்பது ஏன்? ஏ.ஆர்.ரகுமான் விளக்கம்

இந்திய பட உலகில் முன்னனி இசையமைப்பாளராக இருக்கும் ஏ.ஆர்.ரகுமான் ஆஸ்கார் விருதையும் வென்றுள்ளார். தற்போது 99 ஸாங்க்ஸ் என்ற படத்துக்கு கதை எழுதி தயாரித்து இருக்கிறார். இந்திய பட உலகில் முன்னனி இசையமைப்பாளராக இருக்கும் ஏ.ஆர்.ரகுமான் ஆஸ்கார் விருதையும் வென்றுள்ளார். தற்போது 99 ஸாங்க்ஸ் என்ற படத்துக்கு கதை எழுதி தயாரித்து இருக்கிறார். இந்த படம் தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. படத்துக்கு கதை எழுதி தயாரிப்பாளரானது குறித்து ஏ.ஆர்.ரகுமான் கூறும்போது, ‘தமிழ் நாட்டில் பிறந்த எனக்கு வட இந்தியாவிலும் அங்கீகாரம் கிடைத்தது. அதன்பிறகு லண்டனில் பாம்பே டிரீம்ஸ் படத்துக்கு இசையமைக்கும் வாய்ப்பு வந்தது. பலர் என்னிடம் படம் எடுக்க கதை இருக்கிறதா? என்று கேட்டனர். அதன்பிறகுதான் படத்துக்கு கதை எழுதும் எண்ணம் தோன்றியது. நிறைய கற்க தொடங்கினேன். சில பயிற்சி பட்டறைகளிலும்…

கார்த்தியின் ‘கொம்பன்’ படம் 2-ம் பாகம்

தமிழில் இரண்டாம் பாகம் படங்கள் அதிகம் வந்து வரவேற்பை பெற்றுள்ளன. தமிழில் இரண்டாம் பாகம் படங்கள் அதிகம் வந்து வரவேற்பை பெற்றுள்ளன. ரஜினிகாந்தின் எந்திரன் படத்தின் இரண்டாம் பாகம் 2.0 என்ற பெயரில் வெளியானது. கமல்ஹாசனின் விஸ்வரூபம், அஜித்குமாரின் பில்லா, விக்ரம் நடித்த சாமி, தனுசின் வேலை இல்லா பட்டதாரி, விஷாலின் சண்டக்கோழி உள்ளிட்ட படங்களின் இரண்டாம் பாகங்கள் வந்துள்ளன. சூர்யாவின் சிங்கம் மற்றும் காஞ்சனா 3 பாகங்கள் வந்துள்ளன. தற்போது கமல்ஹாசனின் இந்தியன் 2-ம் பாகம் தயாராகி வருகிறது. இந்த நிலையில் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்து 2015-ல் திரைக்கு வந்த கொம்பன் படத்தின் இரண்டாம் பாகத்தை படமாக்கும் முயற்சிகள் நடக்கின்றன. கொம்பன் படத்தில் நாயகியாக லட்சுமி மேனன் நடித்து இருந்தார். ராஜ்கிரண், சூப்பர் சுப்பராயன், தம்பி ராமையா, கருணாஸ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வந்தார்கள்.…

பிரதமர் மோடியின் விசாவை ஏன் ரத்து செய்யக்கூடாது? – மம்தா

294 தொகுதிகளை கொண்ட மேற்குவங்காள சட்டசபைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி, அம்மாநிலத்தில் 30 தொகுதிகளுக்கு இன்று (மார்ச் 27) முதல்கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு ஒருசில இடர்பாடுகளை தவிர பெரும்பாலும் சுமூகமாக நடைபெற்று வருகிறது. எஞ்சிய தொகுதிகளுக்கு ஏப்ரல் 1, 6, 10, 17, 22, 26 மற்றும் 29 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. இத்தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜக-வுக்கும் இடையே நேரடி போட்டி ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இடதுசாரிகள், காங்கிரஸ் மற்றும் இந்திய மதசார்பற்ற முன்னணி ஆகிய கட்சிகள் கூட்டணியாக இணைந்து தேர்தலை சந்திக்கின்றன. இதனால், அரசியல் கட்சிகள் தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.…

நாடு மீண்டும் அழிவுக்குள்ளாவதை தவிர்க்க முடியாது : கோட்டாபய

தனிநபர்களை அல்லாமல், அரசாங்கத்தின் கொள்கைகளை முன்னிலைப் படுத்த அனைவரும் உறுதியாக இருக்க வேண்டும். கொள்கைகள் தோல்வியுற்றால் நாடு மீண்டும் அழிவுக்குள்ளாவதை தவிர்க்க முடியாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று எதிர்க்கட்சி நாட்டை வெற்றிபெறச்செய்யும் கொள்கை திட்டங்களுக்கு எதிராகவே தாக்குதல் தொடுத்திருக்கிறது. அரசாங்கத்தின் மீது மக்கள் வைத்துள்ள எதிர்பார்ப்புகளை பூர்த்திசெய்து அபிவிருத்தி பணிகளை தொடர வேண்டும். அரசாங்கத்தின் திட்டங்களை முறையாக செயற்படுத்துவதன் மூலம் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி வலியுறுத்தினார். நேற்று (27) பிற்பகல் பத்தரமுல்லையில் உள்ள தியத உயன வளாகத்தில் நடைபெற்ற உள்ளூராட்சி பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போதே ஜனாதிபதி இந்த கருத்துக்களை தெரிவித்தார். மேல், வடமேல் மற்றும் தென் மாகாணங்களைச் சேர்ந்த உள்ளூராட்சி பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர். தனிநபர்களை அல்லாமல், அரசாங்கத்தின் கொள்கைகளை முன்னிலைப் படுத்த அனைவரும் உறுதியாக இருக்க…

மாணவர் குழுக்களின் கோஷ்டி மோதல்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் வீட்டின் முன்னால் இனந்தெரியாத 08 பேர் கொண்ட குழுவினர் நேற்று தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவத்தில் சிறிதரன் எம்.பியின் மகன்கள் இருவரும் அவரது நண்பரும் வீட்டுக்குள் ஓடி தப்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 2020 /2021 உயர்தரப்பிரிவில் கற்கும் மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட முறுகல் கைகலப்பாக மாறியே இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் இரண்டாவது மகனின் நண்பர் ஒருவருக்கும் தாக்குதல் நடத்த வந்த நபர்களுக்குமிடையே இந்த முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. யாழ். இந்துக் கல்லூரி மைதானத்தில் நடந்த கிரிக்கெட் போட்டியின் போது இரு தரப்புக்கும் மீண்டும் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சிறிதரன் எம்.பியின் இரண்டாவது மகன் மூத்த மகனை அழைத்துக் கொண்டு தனது நண்பனுடன் வீட்டை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இவர்களை பின் தொடர்ந்து…