யாழ். மாநகர முதல்வருக்கு கொரோனா தொற்று

கடந்த 20ஆம் திகதிக்கு பின்னர் தன்னுடன் நேரடியாக தொடர்பு கொண்டோரை அவதானமாக இருக்குமாறு யாழ். மாநகர முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் கோரியுள்ளார்.

யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியில் கடந்த 20ஆம் திகதி நடைபெற்ற திருமண வைபவத்தில் கலந்து கொண்ட ஒருவருக்கு கொரோனோ தொற்று அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, அதில் கலந்து கொண்டவர்களுக்கு மேற்கொண்ட PCR சோதனையில், யாழ்ப்பாணம் மாநகர முதல்வருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

நேற்றைய தினம் முதல்வருக்கு PCR சோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டதோடு, அதன் அறிக்கைக்கு அமைய, முதல்வருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

அதனைத் தொடர்ந்து, 20ஆம் திகதிக்கு பின்னர் தன்னுடன் நேரடியாக தொடர்பு பட்டோர் தம்மை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தி கொள்ளுமாறும், சுகாதார பரிசோதகர்களுக்கு தங்கள் விபரங்களை வழங்குமாறும் முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அதற்கமைய, அவருடன் தொடர்புபட்டவர்களை அடையாளம் காணும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts