சிறந்த நடிகருக்கான தேசிய விருதுக்கு தனுஷ் தேர்வு

சூப்பர் டீலக்ஸ் படத்திற்காக நடிகர் விஜய் சேதுபதிக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
67-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. 2019-ம் ஆண்டில் வெளியான படங்களுக்கு இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வருடத்திலும் ஏப்ரல் மாதம் திரைப்பட தேசிய விருதுகள் குறித்த அறிவிப்பு வெளியாகும். ஆனால் கடந்த வருடம் கொரோனா அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கு காரணமாக தேசிய விருது அறிவிப்பு ஒத்திவைக்கப்பட்டது. இதன்படி இன்று தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அசுரன் படத்திற்காக நடிகர் தனுஷுக்கு சிறந்த நடிகர் விருது வழங்கப்படுகிறது
சிறந்த நடிகருக்கான தேசிய விருதுக்கு நடிகர் தனுஷ் 2வது முறையாக தேர்வு
ஆடுகளம் படத்திற்காக முதல் முறையாக தேசிய விருது பெற்றார் நடிகர் தனுஷ்
தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான அசுரன் படத்திற்காக விருது பெறுகிறார் தனுஷ்
சூப்பர் டீலக்ஸ் படத்திற்காக நடிகர் விஜய் சேதுபதிக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
சூப்பர் டீலக்ஸ் படத்திற்காக நடிகர் விஜய் சேதுபதிக்கு தேசிய விருது
சிறந்த துணை நடிகருக்கான விருது பிரிவில் விஜய் சேதுபதி தேர்வு
இதன்படி இன்று தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதில், பார்த்திபன் இயக்கி, நடித்த ’ஒத்த செருப்பு சைஸ் 7’ படத்திற்கு 2 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு தேசிய விருது மற்றும் ஒலிப்பதிவு பிரிவுகளில் ஒத்தசெருப்பு படத்திற்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த ஒலிப்பதிவு பிரிவில் ரசூல் பூக்குட்டிக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒத்தசெருப்பு படத்திற்கு 2 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அப்படத்தை இயக்கி நடித்த பார்த்திபனுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Related posts