கொவிட் பூதவுடல்களை அடக்கம் செய்ய பிரதமர் அனுமதி!

கொவிட் தொற்றுக்குள்ளான நபர்களின் பூதவுடல்களை அடக்கம் செய்ய இடமளிப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றில் இன்று (10) தெரிவித்தார்.

கொவிட் வைரஸ் பரவல் குறித்து இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளை நேற்று (09) பாராளுமன்றில் தெரிவித்திருந்த விடயம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்காரினால் முன்வைக்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த மரிக்கார், தண்ணீரில் கொவிட் தொற்றாது என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி புள்ளே கூறினார். அப்படியென்றால் இப்பொழுதாவது அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்குமாறு நாம் பிரதமரிடம் கேட்கின்றோம்.

பிரதமர் – ” அடக்கம் செய்வதற்கு அனுமதியளிக்கப்படும்” என்றார்.

——

வடக்கு கிழக்கு காணிகளில் 95% உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டு யுத்தத்திற்கு பின்னர் இதுவரையில், வடக்கு கிழக்கு மாகாண காணிகளில் 97% சதவீதமானவை அவற்றின் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியல் அட்மிரல் சரத் வீரசேகர இன்று (10) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் எஸ் ராஜமாணிக்கம் முன்வைத்த கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

97% சதவீதமான காணிகள் இதுவரையில் கையளிக்கப்பட்டுள்ளன. எஞ்சிய காணிகள் தேசிய பாதுகாப்பு கருதியே வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

தனியார் காணிகள் இவ்வாறு கையளிக்கப்பட்டுள்ளன. எஞ்சிய காணிகள் குறித்து கேள்வி எழுப்ப முடியாது. அவை பாதுகாப்புக்கு உட்பட்ட விடயமாகும் என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.

—-

Related posts