சர்வதேச படவிழாவில் நயன்தாரா தயாரித்த படம் போட்டி

நயன்தாராவும், அவருடைய காதலர் விக்னேஷ் சிவனும் சேர்ந்து, ‘ரவுடி பிக்சர்ஸ்’ என்ற சொந்த பட நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார்கள். இந்தப் பட நிறுவனம் சார்பில், ‘கூழாங்கல்’ என்ற படத்தை இருவரும் தயாரித்து இருக்கிறார்கள். பி.எஸ்.வினோத்ராஜ் டைரக்டு செய்து இருக்கிறார். ‘கூழாங்கல்’ படம் அடுத்த மாதம் (பிப்ரவரி) நெதர்லாந்தில் நடைபெற இருக்கும், ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவின் போட்டி பிரிவில் திரையிடுவதற்காக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது. இந்தப் பட விழாவின் உயரிய அங்கீகாரமான ‘டைகர்’ விருதுக்கு போட்டியிடுகிறது, ‘கூழாங்கல்’. இதுபற்றி நயன்தாரா, விக்னேஷ்சிவன் இருவரும் கூறியதாவது: “மிக அரிதான படைப்பை பார்த்து வியந்து, நாம் இருக்கும் துறையை நினைத்து எப்போதாவதுதான் சந்தோசப்படுகிறோம். ‘கூழாங்கல்’ படத்தை பார்த்தபோது அப்படி ஒரு அனுபவம் எங்களுக்கு ஏற்பட்டது. படம் மிக எளிமையாக இருந்தாலும் அது எங்களுக்குள் ஏற்படுத்திய தாக்கம் ஆழமானது. மிகத் திறமையான…

விஜய் படத்துக்காக மட்டும் என்னை சந்திக்கவில்லை

நடிகர் விஜய் படத்துக்காக மட்டும் என்னை சந்திக்கவில்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். சட்டமன்ற தேர்தலுக்காக திருச்சியில் பிரச்சாரம் மேற்கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, விஜய் எதற்காக தன்னை சந்தித்தார் என்பது குறித்து பேசினார். அதில் அவர் கூறியதாவது: “நடிகர் விஜய் மாஸ்டர் படத்துக்காக மட்டும் என்னை சந்திக்கவில்லை. ஏகப்பட்ட படங்கள் ரிலீசாகாமல் உள்ளது. பல கோடி ரூபாய் செலவு செய்து படம் எடுத்துருக்காங்க. நிறைய பேருக்கு நஷ்டம் ஆகிட்டு இருக்கு. அந்த எல்லா படத்தையும் கருத்தில் கொண்டு எங்களுக்கு உதவி செய்யுங்கள்” என விஜய் கேட்டுக்கொண்டதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் கடந்த சில தினங்களுக்கு முன்னர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். மாஸ்டர் படம் பொங்கலையொட்டி வெளியாக உள்ளதால் தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி…

ஜனாதிபதியின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி!

புத்தாண்டின் விடியல், கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும் நாம் எதிர்நோக்கும் சவால்களை சரியாகப் புரிந்துகொண்டு வாழ்க்கையைத் திட்டமிடுவதற்கும், உறுதியுடன் முன்னேறுவதற்கும் எம்மை ஊக்குவிக்கின்றது. எனவே, 2021 ஆம் ஆண்டை ஒரு நேர்மறையான மனப்பாங்குடனும், திடவுறுதி மற்றும் அர்ப்பணிப்புடனும் நாம் வரவேற்கிறோம். சுபீட்சத்தை நோக்கிய பயணம் வெற்றிகரமாக ஆரம்பித்துள்ள நிலையில், எதிர்பாராத விதமாக நாட்டில் ஏற்பட்டுள்ள கோவிட் நோய்த்தொற்றினை வெற்றிகொள்ள முழு உலகுடனும் இணைந்து நாமும் முன்னிலை வகித்துள்ளோம். கடுமையான சவால்கள் மற்றும் தடைகளுக்கு மத்தியிலும், தேசிய அபிலாஷைகளின் அடிப்படையில் நிலையான அபிவிருத்திக்கு அடித்தளம் அமைக்க எமக்கு முடிந்தது. மக்களின் எதிர்பார்ப்புகளை அடைந்துகொள்வதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை புதிய ஆண்டில் மேலும் வலுப்படுத்த அரசாங்கம் தயாராக உள்ளது. மக்களை மையமாகக் கொண்ட அபிவிருத்தி மற்றும் தேசிய தனித்துவத்தைப் பாதுகாக்கும் எதிர்பார்ப்புடனேயே புதிய அரசாங்கம் உருவாக்கப்பட்டது. நாட்டுக்கும் மக்கள் ஆணைக்கும் எதிராக…

இலங்கை சினிமா தியேட்டர்களுக்கு ஒரு வருட கால அவகாசம்

கொரோனா வைரஸ் தொற்று சூழ்நிலை காரணமாக மின்சார கட்டண நிலுவைப் பணத்தை வழங்க முடியாத நிலையிலுள்ள சினிமா தியேட்டர் உரிமையாளர்களுக்கு அதனை மீள வழங்குவதற்கான கால அவகாசம் ஒன்றை வழங்க மின்வலு எரிசக்தி அமைச்சு தீர்மானித்துள்ளது. அதற்கிணங்க இவ்வருடம் மார்ச் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை அவ்வாறு நிலுவைப் பணத்தை செலுத்த முடியாத சினிமா தியேட்டர் உரிமையாளர்களுக்கு அதற்கான கால அவகாசத்தை அடுத்த வருடம் டிசம்பர் மாதம் வரை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில் உள்ள திரைப்படக் கூட்டுத்தாபனத்தில் பதிவு செய்யப்பட்ட 194 சினிமா தியேட்டர்களுக்கும் இச் சலுகைக் காலம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். சமமான தவணை முறையில் அதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும் இக்காலப்பகுதியில் நிலுவைப் பணத்தை காரணங்காட்டி மின் துண்டிப்பு மேற்கொள்ளாமல் இருப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டு ள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.…

ROOBHA திரை அழகியலின் உச்சத்தில் எரியும் திருநங்கை வாழ்வின் பயணவெளி

A GUN & A RING, 1999 என கவனத்திற்குரிய திரைப்படங்களைத் தந்த லெனின் M சிவத்தின் மற்றொரு படம் ROOBHA. அவருடைய வழமையைப்போல, சவால் மிக்க மேலும் கடினமான, கவனத்திற்குரியதொரு பரப்பைத் தேர்ந்திருக்கிறார் M சிவம். A GUN & A RING போல இதுவும் ஒருவகையில் கனேடியத் தமிழ்ச் சினிமாவே. கனேடியத் தமிழ்ச்சினிமா என்று ஏன் விசேடமாக குறிப்படுகிறதென்றால், கனடாவில் வாழ்கின்ற தமிழ்ச் சமூகப்பரப்பின் உள்ளடக்குகளைப் பெரும்பாலும் இந்தப்படமும் திறக்க முற்படுகிறது என்பதால். ஆனால், தனியே கனடாவில் வாழ்கின்ற இலங்கைத் தமிழ்ச் சமூகத்திற்குள் இது மட்டுப்படுவதில்லை. அப்படி மட்டுப்படுத்தப்படுவதுமில்லை. பதிலாக கனடியச் சூழலின் (Multicultural social environment) யதார்த்தத்தோடு தமிழ் வாழ்வின் உள்ளடக்குகள் காண்பிக்கப்படுகின்றன. M சிவத்தின் பார்வையே அதுதான். தன்னுள் குறுகிக் கொள்ளாமல், விரிந்து நோக்குவது. அப்படி விரிந்து நோக்கும்போது அவருடைய படங்களில்…

உன்னதத்தின் ஆறுதல்! வாரம் 20.53

திட நம்பிக்கையுடனான எதிர்காலம் நமக்கு உண்டு. சகோதரன். பிரான்சீஸ் அந்தோனிப்பிள்ளை. ரெகொபோத் ஊழியங்கள் - டென்மார்க்கிற்காக பிரார்த்திப்போம். தளர்ந்த கைகளைத் திடப்படுத்தி, தள்ளாடுகிற முழங்கால்களைப் பலப்படுத்துங்கள் ஏசாயா 35:3 வருடத்தின் கடைசி நாட்களுக்குள் வந்துவிட்ட நாம் அமர்ந்திருந்து கடந்து வந்த நமது பாதைகளை சற்றே திரும்பிப்பார்ப்போம். அப்படி நாம் எண்ணிப்பார்க்கும்போது நம் மனக்கண்களுக்கு முன்வருவது என்ன? இந்த ஆண்டில் நிறைவேறும் என்று காத்திருந்து நிறைவேறாமல்போன வேதனையும் தோல்வியும் நிறைந்த காரியங்களா? அல்லது அந்த குறைவிலும் நம்மை ஆதரித்து வந்த தேவனுடைய கிருபையா? தனது மந்தைகளை மேய்த்துக் கொண்டிருந்த தாவீது என்பவனை ராஜாவாக தேவன் அபிசேகம் பண்ணினார். அவன் தேவனின் இருதயத்திற்கு ஏற்றவன் என்றும் பெயர் பெற்றான். அப்படியிருந்தும் அவனின் வாழ்வில் பல இன்னல்கள், போராட்டங்கள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தன. ஆனாலும் தாவீது சோர்ந்து போகவில்லை. அதுவரை தன்னை…