பைசர் தடுப்பூசியை தொடர்ந்து ஆக்ஸ்போர்டின் தடுப்பூசி

புதிய வகை கொரோனா வேகமாக பரவும் சூழலில் பைசர் தடுப்பூசியை தொடர்ந்து ஆக்ஸ்போர்டின் தடுப்பூசிக்கும் இங்கிலாந்து ஒப்புதல் வழங்கி உள்ளது.

இங்கிலாந்தில் நேற்று ஒரே நாளில் 53 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்புகள் பதிவாகி உள்ளது.அரசின் புள்ளிவிவரங்கள் படி கடந்த 24 மணி நேரத்தில் 53,135 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இங்கிலாந்தில் 71,100 க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளன.

தலைநகர் லண்டனில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை பிரிவு மொத்தமாக முடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், லண்டன் மருத்துவமனைகளில் இடம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், மருத்துவமனைகளுக்கு வெளியே கூடாரங்கள் அமைத்து நோயாளிகளை பராமரிக்க வேண்டிய மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. பொதுவாக போர் காலகட்டத்தில் இதுபோன்ற கூடாரங்கள் அமைத்தே நோயாளிகளை பரமாரிக்கும் நிலை உருவாகும்.தற்போது லண்டனிலும் அதே நிலை உருவாகியுள்ளதாக மருத்துவர்கள் தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் பைசர் தடுப்பூசியை தொடர்ந்து ஆக்ஸ்போர்டின் தடுப்பூசிக்கும் ஒப்புதல் வழங்கியது இங்கிலாந்து அரசு உருமாறிய கொரோனா வேகமாக பரவும் சூழலில் 2ஆவது தடுப்பூசிக்கு இங்கிலாந்து அரசு அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது.

கோவிஷீல்டு எனும் பெயரில் ஆக்ஸ்போர்டு உருவாக்கியுள்ள தடுப்பூசிக்கு பிரிட்டன் அனுமதி அளித்துள்ளது. இந்தியாவில் ஆக்ஸ்போர்டின் கோவிஷீல்டு தடுப்பூசியை சீரம் நிறுவனம் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

திங்கள்கிழமை முதல் லட்சக்கணக்கானவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும்.

Related posts