வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை தனிமைப்படுத்தும் திட்டத்தில் மாற்றம்

வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்கு அழைத்து வரப்படும் பணியாளர்களை வீட்டில் தனிமைப்படுத்தும் காலத்தில் மாற்றம் ஏற்படவுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இன்று காலை தெரண அருண நிகழ்ச்சியில் பேசிய போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இது குறித்த பரிந்துரைகளை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று முன்வைப்பார் எனவும் இராணுவத் தளபதி தெரிவித்தார்.

´தற்போது வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்கு அழைத்து வரப்படும் பணியாளர்கள் வெளியில் உள்ள பல்வேறு தனிமைப்படுத்தல் நிலையங்களில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர் அதன் பின்னர் அவர்கள் வீடுகளில் மேலும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவர். இந்த முறைதான் தற்போது வரைக்கும் நடைமுறையில் உள்ளது. ஆனால் இதற்கான புதிய திட்டம் ஒன்றை வகுக்க தீர்மானித்துள்ளோம். இதற்கான பரிந்துரைகளை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று முன்வைப்பார் என எதிர்பார்க்கின்றோம். அதற்கமைய தனிமைப்படுத்தல் நிலையங்களில் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்த பின்னர் அவர்கள் மேலும் 14 நாட்கள் வீடுகளில் தனிமைப்படுத்தல் செயற்பாட்டை முன்னெடுக்காதவாறே திட்டம் வகுக்கப்படுகின்றது. அதாவது தொடர்ச்சியாக 28 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தல் நிலைமையை குறைப்பதற்கு எதிர்பார்கின்றோம். மக்களுக்கு இலகுவான வழியை ஏற்படுத்த உத்தேசித்துள்ளோம்.´ என்றார்.

Related posts