திரையரங்கில் வெளியாகும் அதே நாளில் ஓடிடியிலும் ரிலீஸ்

2021-ம் ஆண்டு வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்புகள் அனைத்தும் திரையரங்கில் வெளியான அதே நாளில் ஓடிடி தளத்தில் வெளியிடப்படும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
கரோனா நெருக்கடி காரணமாகத் திரையரங்குகள் மூடப்பட்டதால் பல்வேறு பெரிய பட்ஜெட் திரைப்படங்களின் வெளியீடுகள் ஒத்திவைக்கப்பட்டன. சில மாதங்களுக்கு முன்பு திரையரங்குகள் திறக்கப்பட்டு கிறிஸ்டோஃபர் நோலனின் பிரம்மாண்ட படைப்பான ‘டெனெட்’, மார்வல்லின் ‘நியூ ம்யூடன்ட்ஸ்’ உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகின. ஆனால், எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை.
குறிப்பாக அமெரிக்காவில் கரோனா தொற்று இன்னும் கட்டுப்படுத்தப்படாமல் அதிக அளவு பரவி வருவதால் மக்கள் திரையரங்குக்கு வரத் தயக்கம் காட்டி வருகின்றனர். ரசிகர்கள் வருகை குறைந்ததால் அமெரிக்கா, பிரிட்டன் எனப் பல நாடுகளில் எண்ணற்ற திரையரங்குகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில் இதில் ஜூன் மாதம் வெளியாகவிருந்த வார்னர் பிரதர்ஸ் தயாரிப்பான ‘வொண்டர் வுமன் 1984’, டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ‘டெனெட்’ படத்துக்குக் கிடைத்த வரவேற்பைப் பார்த்து ‘வொண்டர் வுமன்’ வெளியீடு குறித்துத் தயாரிப்புத் தரப்பு மறுபரிசீலனை செய்ய ஆரம்பித்தது.
—–
‘ராதே ஷ்யாம்’, ‘சலார்’, ‘ஆதிபுருஷ்’ மற்றும் நாக் அஸ்வின் படம் ஆகிய பிரபாஸ் படங்களின் பட்ஜெட்டை சேர்த்தால் சுமார் 1,000 கோடி ரூபாயைத் தாண்டுகிறது. இந்திய அளவில் அதிகப் பண முதலீடு கொண்ட நடிகராக பிரபாஸ் மாறியிருப்பதை பலரும் ஆச்சரியமாகப் பார்க்கிறார்கள்.
இந்தியாவில் கரோனா அச்சுறுத்தலால் சுமார் 6 மாதங்களுக்கு மேலாக, எந்தவொரு படத்தின் படப்பிடிப்பும் நடைபெறவில்லை. புதிய படங்களும் வெளியாகவில்லை. இதனால், தயாரிப்பாளர்களுக்குக் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. தற்போதுதான் நிலைமை சீராகிப் படப்பிடிப்புகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இந்தியத் திரையுலகில் சில முன்னணி நடிகர்களைத் தவிர, மீதமுள்ள அனைவருமே படப்பிடிப்புக்குக் கிளம்பிவிட்டார்கள். கரோனா அச்சுறுத்தலால் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளனர். இதில், ராதா கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகும் ‘ராதே ஷ்யாம்’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் பிரபாஸ். இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படமும் பெரும் பொருட்செலவில் அனைத்து மொழிகளிலும் வெளியாகவுள்ளது.
‘ராதே ஷ்யாம்’ படத்தைத் தொடர்ந்து, ‘கே.ஜி.எஃப்’ இயக்குநர் பிரசாத் நீல் இயக்கத்தில் உருவாகும் ‘சலார்’, ஓம் ராவத் இயக்கத்தில் உருவாகும் ‘ஆதிபுருஷ்’ மற்றும் ‘மஹாநடி’ இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகும் படம் ஆகியவற்றில் நடிக்க பிரபாஸ் ஒப்பந்தமாகியுள்ளார். 2022-ம் ஆண்டு இறுதிவரை இவருடைய கால்ஷீட் ஃபுல் என்பது தெளிவாகியுள்ளது.
இப்படங்கள் அனைத்துமே பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்டு, அனைத்து மொழிகளிலும் வெளியிட முடிவு செய்துள்ளனர். ‘பாகுபலி’ படங்களின் பிரம்மாண்ட வெற்றியால் இந்த முடிவை எடுத்துள்ளனர். தற்போது உள்ள சூழல்படி இந்தியாவில் ஒரு நடிகரின் படங்களில் அதிகப்படியான பண முதலீடு இருக்கும் நடிகராக பிரபாஸ் திகழ்கிறார்.
‘ராதே ஷ்யாம்’, ‘சலார்’, ‘ஆதிபுருஷ்’ மற்றும் நாக் அஸ்வின் படம் ஆகிய படங்களின் பட்ஜெட்டை சேர்த்தால் சுமார் 1,000 கோடி ரூபாயைத் தாண்டுகிறது. இந்தப் பண முதலீட்டை பல்வேறு முன்னணி நடிகர்களும் ஆச்சரியமாகப் பார்க்கிறார்கள். இதற்கு முன்னர் இந்தியத் திரையுலகில் ஒரே சமயத்தில் 1,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்ட நடிகர் வேறு யாருமில்லை என்று கூறப்படுகிறது.

Related posts