மஹர சிறை உயிரிழந்வர்களில் 8 பேருக்கும் கொவிட் 19


கடந்த 29 ஆம் திகதி மஹர சிறைச்சாலை கைதிகள் சிலருக்கு இடையில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பான காணொளிகள் தற்போது ஊடகங்களுக்கு வௌியிடப்பட்டுள்ளது.
இதன்போது ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் இதுவரையில் 11 கைதிகள் உயிரிழந்துள்ளமை குறிப்படத்தக்கது.
அத்துடன் மேலும் 106 கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் இருவர் காயமடைந்த நிலையில் அவர்களில் 29 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதேவேளை, இவ்வாறு காயமடைந்த கைதிகளில் 38 பேருக்கும் உயிரிழந்வர்களில் 8 பேருக்கும் கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

—–
இலங்கையில் மேலும் 350 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த அனைவரும் நோயாளர்கள் உடன் நெருங்கிப் பழகியவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 24,882 ஆக அதிகரித்துள்ளது.
இன்றைய தினம் 487 பேர் பூரண குணமடைந்தந்தததை அடுத்து இலங்கையில் 18,304 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.
அதனடிப்படையில் மேலும் 6,456 பேரே தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

—–
புரவி சுறாவளி இன்று இரவு 7 மணி முதல் 10 மணி வரையான காலப்பகுதிக்குள் கிழக்கு மாகாணத்தில் ஊடாக நகர்ந்து இலங்கையை கடக்கக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இதன்பொது கிழக்கு, வடக்கு, வடமத்திய, வடமேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் இடையிடையே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
சில இடங்களில் 200 மி.மீ க்கும் அதிகமான மிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு, வடமேல், மேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 80-90 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் மிகப் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related posts