அந்தகாரம் படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டிய கமல்ஹாசன்

கமல்ஹாசன் சாரிடம் அந்தகாரம் படக்குழு வாழ்த்துகளைப் பெற்றுள்ளது என்று இயக்குனர் அட்லி தெரிவித்துள்ளார். ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கிய அட்லி, 2017-ல் சங்கிலி புங்கிலி கதவ தொற என்கிற படத்தைத் தயாரித்தார். இதையடுத்து தனது ஏ ஃபார் ஆப்பிள் நிறுவனம் சார்பாக அந்தகாரம் என்கிற படத்தை வெளியிட்டுள்ளார். விக்னராஜன் இயக்கியுள்ள இப்படத்துக்கு இசை - பிரதீப் குமார். அந்தகாரம் படத்தில் அர்ஜுன் தாஸ், வினோத் கிருஷ்ணன், பூஜா ராமச்சந்திரன், மிஷா கோஷல், குமார் நடராஜன் போன்றோர் நடித்துள்ளார்கள். அந்தகாரம் படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நவம்பர் 24-ல் நேரடியாக வெளியானது. இந்நிலையில் அந்தகாரம் படக்குழுவினரை கமல் ஹாசன் நேரில் அழைத்து பாராட்டியுள்ளார் . இச்சந்திப்பின் புகைப்படங்களைப் அட்லி சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் டுவிட்டர் பதிவில் கூறியதாவது:- கமல்…

மாஸ்டர் திரைப்படத்தை தியேட்டரில் வெளியிடவே விரும்புகிறோம்

நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தை தியேட்டரில் வெளியிடவே விரும்புகிறோம் என பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்து உள்ளது. விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள மாஸ்டர் படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிகில் படத்துக்குப் பிறகு விஜய் மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்துக்கு இசை - அனிருத். விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் ஆகியோர் நடித்துள்ளார்கள். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, திரையரங்குகள் எட்டு மாதங்களாக மூடப்பட்டு இருந்தது. இதனால் மாஸ்டர் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. கடந்த நவம்பர் 14 மாலை 6 மணிக்கு மாஸ்டர் பட டீசர் சமூகவலைத்தளங்களில் வெளியானது. இந்திய அளவில் அதிக லைக்ஸ் பெற்ற டீசர் என்கிற பெருமையை மாஸ்டர் பட டீசர் பெற்றுள்ளதாக படத்தயாரிப்பு…

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பெயரில் இசை பள்ளி

நெல்லூரில் உள்ள அரசின் இசை மற்றும் நடன பள்ளிக்கு டாக்டர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அரசு இசை மற்றும் நடன பள்ளி என்ற பெயரை சூட்டி ஆந்திர அரசு கவுரவித்துள்ளது. இந்திய திரையுலகின் புகழ் பெற்ற பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் செப்டம்பர் 25-ந் தேதி மரணம் அடந்தார். அவரது உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு பாரத ரத்னா, தாதா சாகேப் பால்கே விருதுகள் வழங்க வேண்டும் என்று பலர் வற்புறுத்தினர். இந்த நிலையில் ஆந்திர அரசின் இசைப்பள்ளிக்கு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. இதுகுறித்து ஆந்திர தொழில் வர்த்தகம் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மிகபட்டி கவுதம் ரெட்டி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அனைவராலும் மதிக்கப்பட்ட தன்னிகரற்ற பாடகர். நெல்லூரில்…

ரிலீசுக்கு தயாராகும் பெரிய படங்கள்

கொரோனா ஊரடங்கால் 7 மாதங்கள் முடங்கி இருந்த திரையுலகம் தளர்வு காரணமாக இப்போது மீண்டு வருகிறது. சினிமா படப்பிடிப்புகள் தொடங்கி உள்ளன. தியேட்டர்கள் திறக்கப்பட்டு புதிய படங்கள் ரிலீசாகி கொண்டு இருக்கின்றன. சிறிய படங்கள் மட்டுமே திரைக்கு வருவதால் எதிர்பார்த்த அளவுக்கு தியேட்டர்களில் கூட்டம் இல்லை. எனவே பெரிய படங்கள் வருகையை ரசிகர்களும், திரையுலகினரும் எதிர்பார்க்கிறார்கள். தற்போதைய சூழ்நிலையில் ஜெயம் ரவியின் பூமி, விஷாலின் சக்ரா, கார்த்தியின் சுல்தான், தனுசின் ஜெகமே தந்திரம், விஜய்சேதுபதியின் மாமனிதன், லாபம், சிவகார்த்திகேயனின் டாக்டர் உள்ளிட்ட சில பெரிய படங்கள், அனைத்து தொழில்நுட்ப வேலைகளும் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளன. இந்த படங்களை அடுத்தடுத்து திரைக்கு கொண்டுவர ஏற்பாடுகள் நடக்கின்றன. கார்த்தியின் சுல்தான் படமும் பொங்கல் போட்டியில் உள்ளது. ஏற்கனவே ஓ.டி.டி.யில் வெளியான சில பெரிய படங்கள் 4 மாதத்துக்கு பிறகு…

விஜய் நடித்த ‘மாஸ்டர்’ ஓ.டி.டி.யில் வெளியாகிறது

விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படம் பொங்கல் விருந்தாக ஓ.டி.டி.யில் வெளியாகிறது. விஜய் தற்போது ‘மாஸ்டர்’ என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்தப் படம் தீபாவளி விருந்தாக வெளிவர இருந்தது. கொரோனா தொற்று காரணமாக தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்ததால், ‘மாஸ்டர்’ படம் வெளியாகவில்லை. சமீபத்தில் தியேட்டர்கள் அனைத்தையும் திறப்பதற்கு அரசு அனுமதி வழங்கியது. அதைத் தொடர்ந்து, ‘மாஸ்டர்’ படம் பொங்கல் விருந்தாக தியேட்டர்களில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், சூர்யா நடித்த ‘சூரரைப்போற்று’ ஓ.டி.டி.யில் வெளியிடப்பட்டது. அந்தப் படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியது. ரூ.100 கோடி வசூல் செய்ததாக கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து, விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படமும், ஓ.டி.டி.யில் வெளியாகலாம் என்று பேசப்பட்டது. அது இப்போது உறுதியாகியிருக்கிறது. மாஸ்டர் படத்தை வருகிற பொங்கல் அன்று ஓ.டி.டி.யில் திரையிடுவதற்கு ஏற்பாடுகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.…

சட்டவிரோத மதமாற்றம் 10 ஆண்டுகள் சிறை

நேர்மையற்ற முறையில் மதம் மாறுவது, சட்டவிரோத மதமாற்றம்,ஆகியவற்றைத் தடுக்க கொண்டுவரப்பட்ட அவசரச் சட்டத்துக்கு உத்தரப்பிரதேச ஆளுநர் இன்று ஒப்புதல் அளித்துள்ளார். நேர்மையற்ற முறையில் மதம் மாறுவது, சட்டவிரோத மதமாற்றம்,ஆகியவற்றைத் தடுக்கும் வகையில் புதிய வரைவு சட்டமசோதா உருவாக்கப்பட்டது. இந்த வரைவு சட்ட மசோதாவுக்கு இந்த வாரத் தொடக்கத்தில் உத்தர பிரதேச அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, இந்த அவசரச் சட்டத்துக்கு உத்தரப்பிரதேச ஆளுநர் இன்று ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து, இந்த குற்றங்களில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் என அவசரச்சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கட்டாயமாக மதமாற்றம் செய்தல், நேர்மையற்ற முறையில் குறிப்பாக திருமணத்துக்காக மதம் மாறுதல், ஆகியவற்றில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று சட்டமசோதாவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமல்லாமல் அதுபோன்று நடத்தப்படும் திருமணம் சட்டப்படி செல்லாது என்று அறிவிக்கப்படும்,…