திரையரங்குகளைக் காப்பாற்றுங்கள்..

திரையரங்குகள் திறக்கப்படாமல் இருப்பது தொடர்பாக ஜி.கே.சினிமாஸ் ரூபன் கடிதமொன்றை வெளியிட்டுள்ளார். இந்திய அளவில் கரோனா அச்சுறுத்தல் தொடங்கியபோது பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் என அனைத்தும் மூடப்பட்டன. கரோனா அச்சுறுத்தல் குறையத் தொடங்கியதிலிருந்து மத்திய அரசு பல்வேறு ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இதில் திரையரங்குகளை 50% பார்வையாளர்களுடன் திறக்க மத்திய அரசு அனுமதித்தது. இதனைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் திரையரங்குகள் செயல்படத் தொடங்கின. ஆனால், தமிழகத்தில் திரையரங்குகளைத் திறக்க இன்னும் தமிழக அரசு அனுமதியளிக்கவில்லை. இதனால் திரையரங்கு உரிமையாளர்களுக்குக் கடும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்பு திரையரங்க உரிமையாளர்கள் தமிழக முதல்வரை நேரில் சந்தித்து, திரையரங்குகள் திறப்பு தொடர்பாக வலியுறுத்தினார்கள். ஆனால், இப்போது வரை தமிழக அரசு அனுமதியளிக்கவில்லை. 150 நாட்களைக் கடந்தும், திரையரங்குகள் மூடப்பட்டு இருப்பது தொடர்பாக சென்னையில் உள்ள ஜி.கே. சினிமாஸை…

லாரன்ஸின் புதிய படம் அறிவிப்பு..

பிறந்த நாளை முன்னிட்டு லாரன்ஸ் நடிக்கவுள்ள புதிய படத்தை அறிவித்துள்ளது படக்குழு. அக்‌ஷய் குமார் நடிப்பில் உருவாகியுள்ள 'லட்சுமி' படத்தை இயக்கியுள்ளார் லாரன்ஸ். தமிழில் தனது இயக்கத்தில் பெரும் வரவேற்பு பெற்ற 'காஞ்சனா' படத்தை இந்தியில் இயக்கியுள்ளார். பெரும் எதிர்பார்ப்புடன் இருக்கும் இந்தப் படம் நவம்பர் 12-ம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. தமிழில் பி.வாசு இயக்கத்தில் உருவாகும் 'சந்திரமுகி 2' படத்திலும், 5 ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் உருவாகும் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் லாரன்ஸ். இன்று (அக்டோபர் 29) லாரன்ஸ் பிறந்த நாளை முன்னிட்டு, 5 ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் உருவாகும் படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. 'ருத்ரன்' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் இயக்குநர் யார் என்பதை படக்குழு அறிவிக்கவில்லை. இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் பணிபுரியவுள்ளார். புதுமுக இயக்குநர் ஒருவர் இயக்கவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. 'லட்சுமி'…

சிம்புவின் மாற்றம் எடைக் குறைப்பு பற்றியது மட்டுமல்ல

சிம்புவின் மாற்றம் எடைக் குறைப்பு பற்றியது மட்டுமல்ல என்று அவரது தங்கை இலக்கியா தெரிவித்துள்ளார். கரோனா ஊரடங்கு சமயத்தில் தனது உடலமைப்பை முழுமையாக மாற்றியுள்ளார் சிம்பு. தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஈஸ்வரன்' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இதன் படப்பிடிப்பு திண்டுக்கல்லைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. தனது உடலமைப்பை மாற்றியவுடன், எடுக்கப்பட்ட போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் சிம்பு. அந்தப் புகைப்படங்களுடன் இந்த மாற்றத்துக்கு உதவிய, வழிகாட்டிய அனைவருக்கும் நன்றி எனவும் தெரிவித்திருந்தார். சிம்புவின் இந்த ட்வீட்டைக் குறிப்பிட்டு அவருடைய தங்கை இலக்கியா ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: "சிம்பு பல மாற்றங்களைக் கண்டிருக்கிறார். இந்த மாற்றம் எடைக் குறைப்பு பற்றியது மட்டுமல்ல. தனது சுயம், வாழ்க்கையின் நோக்கம், லட்சியங்களை அறிந்து கொள்ளவும்தான். இந்தப் பயணத்தில் சில நாட்கள் நான் அவருடன் இருந்தேன். அவரது…

பெயர் மாற்றம் பெற்ற அக்‌ஷய் குமாரின் லக்‌ஷ்மி பாம்

அக்‌ஷய் குமார் நடிப்பில் உருவாகியுள்ள 'லக்‌ஷ்மி பாம்' திரைப்படம் 'லக்‌ஷ்மி' என்று பெயர் மாற்றம் பெற்றுள்ளது. 2011-ம் ஆண்டு தமிழில் ராகவா லாரன்ஸ் தயாரித்து, இயக்கி, நாயகனாக நடித்த படம் 'காஞ்சனா'. தற்போது இந்தப் படம் 'லக்‌ஷ்மி பாம்' என்கிற பெயரில் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. அக்‌ஷய் குமார், கியாரா அத்வானி நடிக்க, தமிழில் இயக்கி நடித்த ராகவா லாரன்ஸ் இந்தியிலும் இயக்கியுள்ளார். கரோனா நெருக்கடியால் தற்போது இந்தத் திரைப்படம் நேரடியாக டிஜிட்டல் வெளியீடாக டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் நவம்பர் 9-ம் தேதி அன்று வெளியாகவுள்ளது. இந்தத் திரைப்படத்தில் இரண்டு கதாபாத்திரங்களில் அக்‌ஷய் குமார் நடிக்கிறார். ட்ரெய்லருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து அக்‌ஷய் குமாரின் திருநங்கை கதாபாத்திரத்துக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் படத்துக்கான தணிக்கை நடந்தது. இது முடிந்ததும், யாருடைய உணர்வுகளையும் புண்படுத்த வேண்டாம் என்ற…