எம்ஜிஆர் வழியில் ரஜினியும் ஆட்சியைப் பிடிப்பார்!

கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக, தேமுதிக போன்றவை முயன்றும் முடிவுக்குக் கொண்டுவர முடியாத திராவிடக் கட்சிகளின் ஊழல் ஆட்சியை ரஜினியால்தான் அகற்ற முடியும் என்கிறார் முன்னாள் எம்எல்ஏவான பழ.கருப்பையா. இது தொடர்பாக 'இந்து தமிழ் திசை' இணையதளத்துக்கு அவர் அளித்த பேட்டி... திமுக, அதிமுக இரண்டு கட்சிகளிலும் இருந்தும் வெளியேறிய நீங்கள், திடீரென்று ரஜினியை ஆதரித்துப் பேசுவது ஏன்? பாரதி சொன்னான், "இந்தியா விடுதலை பெற்றால் என்ன சிறப்பு ஏற்படும் தெரியுமா... இப்போது நல்லவனெல்லாம் மோசமாக நடத்தப்படுகிறான். கெட்டவன் எல்லாம் உயரத்தில் வைக்கப்படுகிறான். இந்தியா விடுதலை அடைந்தால், நல்லோர் பெரியார் எனும் காலம் வந்ததே கெட்ட நயவஞ்சகருக்கு நாசம் வந்ததே" என்று கனவு கண்டான். ஆனால், என்ன நடந்தது? நயவஞ்சகக்காரர் எல்லாம் அரசியலுக்கு வந்து வாழ்வு பெற்றுவிட்டார். கெட்டவர் ஒவ்வொருவரும் ஆயிரம் கோடி, 500 கோடி ரூபாய் சொத்து…

முத்தையா முரளிதரன் ‘800’ படத்திலிருந்து விலகினார் விஜய் சேதுபதி

முத்தையா முரளிதரன் பயோபிக்கான '800' படத்திலிருந்து விலகியுள்ளார் விஜய் சேதுபதி. முத்தையா முரளிதரன் பயோபிக்கில் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 800 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்திருப்பதால், முத்தையா முரளிதரன் பயோபிக் கதைக்கு '800' எனத் தலைப்பிட்டுள்ளது படக்குழு. முத்தையா முரளிதரன் பயோபிக்கில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என எதிர்ப்பு உருவானது. அரசியல் கட்சித் தலைவர்கள், இலங்கைத் தமிழர்கள், இயக்குநர்கள் பாரதிராஜா, சீனு ராமசாமி, சேரன் உள்ளிட்ட பலரும் விஜய் சேதுபதிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதனிடையே, தனது பயோபிக்கிற்கு வரும் எதிர்ப்புகள் தொடர்பாக நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார் முத்தையா முரளிதரன். அதையும் தாண்டி எதிர்ப்புகள் வலுத்துக் கொண்டே உள்ளன. இன்று (அக்டோபர் 19) முத்தையா முரளிதரன் வெளியிட்ட மற்றொரு அறிக்கையில், தனது பயோபிக்கிலிருந்து விலகிக் கொள்ளுமாறு விஜய் சேதுபதிக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். முத்தையா முரளிதரனின்…

“நன்றி, வணக்கம்” என்றால் எல்லாம் முடிந்து விட்டதாக அர்த்தம்

“நன்றி, வணக்கம்” என்றால் எல்லாம் முடிந்து விட்டதாக அர்த்தம் என்று நடிகர் விஜய்சேதுபதி தெரிவித்துள்ளார். சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதலமைச்சர் பழனிசாமியை நடிகர் விஜய்சேதுபதி நேரில் சந்தித்தார். முதலமைச்சரின் தாயார் தவுசாயம்மாள் காலமானதையொட்டி நேரில் சந்தித்து விஜய்சேதுபதி ஆறுதல் கூறினார். தொடர்ந்து முதலமைச்சர் பழனிசாமியின் தாயார் படத்திற்கு விஜய்சேதுபதி மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். அதைத்தொடர்ந்து 800 திரைப்படம் கைவிடப்பட்டதா? என்ற செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, “நன்றி, வணக்கம்” என்றால் எல்லாம் முடிந்து விட்டதாக அர்த்தம், இனி பேசுவதற்கு ஒன்றுமில்லை என்று நடிகர் விஜய்சேதுபதி தெரிவித்தார்.

நடிகர் பிரித்விரா​​​ஜ் கொரோனா தொற்றால் பாதிப்பு

மலையாள திரைப்பட நடிகர் பிரித்விரா​​​ஜ் மேற்கொண்ட மருத்துவ பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மலையாள திரைப்பட உலகில் புகழ் பெற்ற நடிகர் பிரித்விராஜ். இவர் தமிழில் கனா கண்டேன் என்ற படத்தில் அறிமுகம் ஆனவர். பின்னர் மொழி, ராவணன் ஆகிய பல்வேறு படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில், ஜன கன மன என்ற படத்தில் அவர் நடித்து வருகிறார். இதற்கான படப்பிடிப்பில் கடந்த 7ந்தேதியில் இருந்து அவர் கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில், அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் உறுதிப்படுத்தி உள்ளார். அதில், கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை நாங்கள் கடுமையாக கடைப்பிடித்தோம். பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டோம். விதிகளின்படி, படப்பிடிப்பில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன் கொரோனாவுக்கான மருத்துவ பரிசோதனை செய்து கொண்டோம். இதன்பின்னர் படப்பிடிப்பின்…

மவுத்வாஷ் மூலம் கொரோனா வைரஸ்களை செயலிழக்கச் செய்யலாம்

தினசரி மவுத்வாஷ் மூலம் நாம் வாய் கொப்பளிச்சா கொரோனா வைரஸ்களை செயலிழக்கச் செய்யலாம் என புதிய ஆய்வில் தெரியவந்து உள்ளது. உலகம் முழுவதும் தீவிரமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த உலகநாடுகள் பல்வேறு முயற்சிகளையும், நடவடிக்கைகளையும் செய்து வருகிறது. இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில், விஞ்ஞானிகள் சில வாய்வழி கிருமி நாசினிகள் மற்றும் மவுத்வாஷ்கள் மனித கொரோனா வைரஸ்களை செயலிழக்கச் செய்யும் திறனைக் கொண்டிருக்கின்றன என்பதைக் கண்டறிந்துள்ளனர். மருத்துவ வைராலஜி இதழில் வெளியிடப்பட்ட கட்டுரையில் கூறி இருப்பதவது:- ஆய்வின் போது, ஆராய்ச்சி குழு பல வாய்வழி மற்றும் நாசோபார்னீஜியல் வாய்க் கொப்பளிப்பான்களை ஒரு ஆய்வக அமைப்பில் சோதித்தது. அவை மனித கொரோனா வைரஸ்களை செயலிழக்கச் செய்யும் திறனைக் கொண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சோதனை செய்யப்பட்ட தயாரிப்புகளில் குழந்தை ஷாம்பு, பெராக்சைடு புண்-வாய் சுத்தப்படுத்திகள்…

உன்னதத்தின் ஆறுதல் ! வாரம் 20. 42

உதவியற்ற வேளையிலும் அரவணைக்கும் தேவன். சகோதரன். பிரான்ஸ்சீஸ் அந்தோனிப்பிள்ளை. ரெகோபோத் ஊழியங்கள் . டென்மார்க்கிற்காக பிரார்த்திப்போம். ஆகிலும், நீர் வந்து உமது கையை வையும் அப்போது அவள் பிழைப்பாள். மத்தேயு 9:18. இன்று மக்கள் தங்கள் சுயமுயற்சியினால் எதையும் அடைந்து கொள்ளலாம் என்று வாழ்ந்து வருவதை நாம் காணக்கூடியதாக உள்ளது அதேநேரம் சகலதும் தேவனால் ஆகும் என்று தேவனைச் சார்ந்து வாழ்து வருவதையும் காணக்கூடியதாக உள்ளது. மேலே நாம் வாசித்த வேதப்பகுதியில், ஒரு ஜெபஆலயத்தலைவனின் மகள் சுகவீனம் அடைந்து மரிக்கும் வரையிலும் அவன் வைத்திய உதவியை நாடியிருந்தான். மரித்த பிற்பாடு அவன் இயேசுவை நாடினான். இயேசு அவனின் வேதனையை அறிந்து அவனின் மகளை மீண்டும் உயிர்ப்பித்து, அவனின் வேதனையை நீக்கினார். இந்த உண்மையை அறிய கீழ்வரும் வேதப்பகுதியை நாம் தியானத்துடன் வாசிப்போம். அப்பொழுது ஜெபஆலயத் தலைவனாகிய யவீரு…