கொரோனா பரவலை சமூக பரவலாக்க விடாது கட்டுப்படுத்தலில் தீவிர முயற்சி

கொவிட்- 19 வைரஸ் பரவலின் நான்காவது படிமுறையே சமூகப் பரவலாகும். கொத்தணிகளாக நோயாளர்கள் கண்டறியப்படும் மூன்றாவது படிமுறையிலேயே இலங்கை உள்ளது என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.

பாராளுமன்றில் நேற்று வெள்ளிக்கிழமை ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்லவின் உரையை நான் செவிமடுத்தேன். அவரது உரையில் கொவிட் 19 வைரஸ் இலங்கையில் முற்றாக ஒழிக்கப்பட்டுவிட்டதென நான் கூறியதாக கூறியுள்ளார். இராணுவத்தின் யூடியூப் ஒன்றில் இக் காணொளி உள்ளதாகவும் அவர் கூறுகிறார். சமூகத்தில் இருந்து கொவிட் 19 முற்றாக ஒழிக்கப்பட்ட நாடு இலங்கை என நான் கூறியுள்ளதாகவும் குற்றம் சுமத்துகிறார்.

நான் விடுத்த கூற்றின் இறுதிப்பகுதியில் கொவிட் 19 தொற்று சமூகத்தில் இருந்து நீக்கப்பட்ட ஒரு நாடாக இந்த தருணத்தில் இலங்கையை கருத முடியும் என்றுதான் கூறியிருந்தேன். சில விசேட காரணங்களை அடிப்படையாக கொண்டுதான் அந்த கூற்றை நான் முன்வைத்திருந்தேன். விஞ்ஞான ரீதியான விளக்கங்களின் பிரகாரம் நான்கு படிமுறைகளில் கொவிட் 19 வைரஸ் இனங்காணப்படுகிறது.

எந்தவொரு நோயாளியும் இல்லாத நிலை முதல் படிமுறையாகும். இரண்டாவது படிமுறையில் சில சில இடங்களில் நோயாளர்கள் தோன்றுகின்றனர். அவ்வாறு உருவாகும் நோயாளர்களுக்கு நோய் ஏற்பட்டமைக்கான மூலக்காரணத்தை கண்டறிய முடியும்.

மூன்றாவது படிமுறையானது கொத்தணிகளாக கண்டறியப்படுதாலும். கந்தகாடு, கடற்படை முகாம்களில் கண்டறியப்பட்டது போன்றாகும். நான்காவது படிமுறைதான் சமூகத்தில் எவ்வித அறிகுறிகளும் முலக்காரணங்களுமின்றி தொற்றாளர்கள் கண்டறியப்படுவதாகும். இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் இந்நிலைதான் காணப்படுகிறது. குழுக்களாக கண்டுப்பிடிப்பது. நான்காவது சமூகத்தில் எந்த இடமென தெரியாது கண்டுப்பிடிப்பது. மூலாதாரத்தை தெரியார். அமெரிக்காவில் இதுதான் இடம்பெறுகிறது. ஓகஸ்ட் இரண்டாம் திகதி இந்த அறிவிப்பை விடுத்திருந்தேன். நான் இதனை தெரிவித்த போது 25 ஆயிரம் பி.சீ.ஆர். பரிசோதனைகளை செய்திருந்தோம்.

அதன் பிரகாரம் தான் கடந்த ஆகஸ்ட் 02ஆம் திகதி பொறுப்புடன் ஒரு கூற்றை வெளிப்படுத்தியிருந்தேன். அத்தருணத்தில் சமூகத்தில் 25ஆயிரம் பேருக்கும் அதிகமானவர்களை நாம் பரிசோதனைகளுக்கு உட்படுத்தியிருந்தோம். பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நோயாளர்கள் எவரும் கண்டறியப்பட்டிருக்கவில்லை. வைத்தியாலை கிளினிக்களிலும் தினமும் 10 பேருக்கு பி.சீ.ஆர். பரிசோதனைகளை பரிசோதிக்கவும் நடவடிக்கையெடுத்திருந்தோம். அத்தருணத்திலும் எவரும் அடையாளம் காணப்பட்டவில்லை. அதற்கு அப்பால் நிமோனியா நோய் ஏற்பட்டு எவரும் இறந்திருந்தால் அவருடைய மாதிரியையும் பரிசோதனைக்கு உட்படுத்துமாறு பணித்திருந்தோம். அதிலும் எந்தவொரு நோயாளரும் கண்டறியப்பட்டிருக்கவில்லை.

கொத்தணிகளாக நோயாளர்களை கண்டறியும் இடத்தில்தான் நாம் இருந்தோம். அதன் பின்னர் சில மாதங்களாக எந்தவொரு நோயாளரும் சமூகத்தில் இனங்காணப்படவில்லை. அதனை அடிப்படையாகக் கொண்டுதான் கடந்த செப்டெம்பர் மாதம் 03ஆம் திகதி நான் சமூகத்திலிருந்து கொரோனா வைரஸை ஒழித்த நாடாக இலங்கை உள்ளதென கூறியிருந்தேன் என்றார்.

சுப்பிரமணிம் நிஷாந்தன்

Related posts