கொரோனாவை நினைத்து பயப்பட வேண்டாம் கீர்த்தி சுரேஷ்

கொரோனாவை நினைத்து பயப்பட வேண்டாம் என்று நடிகை கீர்த்தி சுரேஷ் கூறியுள்ளார்.

நடிகை கீர்த்தி சுரேஷ் அளித்துள்ள பேட்டி வருமாறு:-

“கொரோனா ஓய்வில் எடை குறைக்க நிறைய உடற்பயிற்சிகள் செய்தேன். பருப்பு ரசம் வெங்காய தோசை செய்தேன். எனக்கு வந்த சிறிய யோசனையை வைத்து ஒரு கதை எழுதி இருக்கிறேன்.

மனிதனுக்கு பணம் பெரிது அல்ல. மனிதாபிமானம் ரொம்ப முக்கியம் என்பதை கொரோனா கற்றுக்கொடுத்து இருக்கிறது. ஊரடங்கில் முதல் ஒரு மாதம் ரொம்பவும் போரடித்தது. ஊரடங்குக்கு பிறகு முதல் முதலாக ரஜினிகாந்த் படத்தில் நடிக்க இருக்கிறேன்.

கொரோனா முற்றிலும் அழிந்த பிறகு ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்லும் ஆர்வம் இருக்கிறது. கொரோனாவை நினைத்து பயப்படுகிறவர்களுக்கு நான் கொடுக்கும் ஆலோசனைகள் என்ன வென்றால் பயப்படக்கூடாது.

எப்போது என்ன தேவை வந்தாலும் எனக்கு முதல் ஞாபகம் வருவது எனது அம்மாதான். கொரோனா கஷ்டகாலத்தில் ஒவ்வொருவருக்கும் தைரியம் கொடுப்பது அவர்கள் அம்மாதான். உனக்கு ஒன்றும் ஆகாது என்ற வார்த்தை அம்மா வாயில் இருந்து வந்தால் நமக்கு ஆயிரம் யானைகள் பலம் வந்த மாதிரி இருக்கும்.

புதிய விஷயங்களும் நிறைய கற்றுக்கொண்டேன். அளவுக்கு மீறாமல் பிடித்ததை சாப்பிடுவேன். எனக்கு பிடித்த கதாநாயகன் சூர்யா.” இவ்வாறு கீர்த்தி சுரேஷ் கூறியுள்ளார்.

Related posts