பசுக்களை இறைச்சிக்காக வெட்டுவதை தடை செய்யும் சட்டம்

பசுக்களை இறைச்சிக்காக வெட்டுவதை தடை செய்யும் சட்டம் விரைவில் கொண்டு வரப்படும் என இலங்கை பிரதமர் ராஜபக்சே அறிவித்துள்ளார்.

இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே கடந்த 8 ஆம் தேதி நாடாளுமன்றத்தின் போது, “பசுக்களை இறைச்சிக்காக வெட்டுவதை தடை செய்யும் சட்டம் விரைவில் கொண்டு வரப்படும்” என்று அறிவித்தார். பிரதமர் ராஜபக்சேவின் முடிவை ஆளும் கட்சியான இலங்கை மக்கள் கட்சி எம்.பி.,க்கள் நாடாளுமன்றத்தில் வரவேற்றனர்.

இதனையடுத்து இலங்கையில் மதம் மற்றும் கலாச்சார விவகாரத் துறை அமைச்சர் புத்த சாசனா தலைமையிலான நாடாளுமன்றக் குழு இந்தத் தீர்மானத்துக்கு ஒப்புதல் அளித்தது. இந்த சட்டம் குறித்து பிரதமர் மகிந்த ராஜபக்சே தெரிவிக்கையில், “பசுக்களை இறைச்சிக்காக கொல்வதைத் தடுக்க வேண்டும் என, புத்த மத மறுமலர்ச்சி பிக்ஷுவும், தேசியத் தலைவருமான அனாகரிகா தர்மபாலா வலியுறுத்தி வந்தார். ஆனால், இதை சட்டமாக்க எந்த அரசும் நடவடிக்கை எடுக்கவில்லை.

தற்போது எங்கள் அரசு இதற்கான சட்டத்தை விரைவில் கொண்டு வரவுள்ளது. பசுக்களை இறைச்சிக்காக வெட்டுவதைத் தடை செய்யும் தீர்மானம் இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. வேண்டுமானால் இறைச்சி சாப்பிடுவோருக்காக இறைச்சியை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து கொள்ளலாம். அதற்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்படும்” என்று தெரிவித்தார்.

Related posts