உலகளவில் கொரோனா பாதிப்பு 2.8 கோடி – 9 இலட்சம் பேர் பலி!

உலகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்றுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 908,002 உயர்ந்துள்ளது. தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 28,026,967 கோடியை எட்டியுள்ளது.

உலக நாடுகளில் கொரோனா நோய்த்தொற்று பரவல் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் வியாழக்கிழமை காலை நிலவரப்படி, உலக அளவில் மொத்த கொரோனா பாதிப்பு 28,026,967 கோடியாக உள்ளது. பலியானோர் எண்ணிக்கை 908,002 ஆக உள்ளது. கொரோனா பாதித்த 28,026,967 பேரில் 20,104,939 பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.

உலகளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு 6,549,475 பேரும், இந்தியாவில் 4,465,863 பேரும், பிரேசிலில் 4,199,332 பேரும், ரஷ்யாவில் 1,041,007 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்று பாதிப்பை பொறுத்தவரை பிரேசிலை பின்னுக்கு தள்ளி இந்தியா இரண்டாவது இடத்துக்கு வந்துள்ளது.

உலகம் முழுவதும் நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 20,104,939 ஆக உள்ளது. தற்போது 7,014,026 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 60,533 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

Related posts