சர்ச்சையில் சிக்கிய நடிகை வித்யாபாலன்

நடிகை வித்யாபாலன் ரியாவுக்கு ஆதரவாக பேசி எதிர்ப்பில் சிக்கி உள்ளார். இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கை சி.பி.ஐ விசாரிக்கிறது. அவரை நடிகை ரியா சக்கரவர்த்தி காதலித்து ஏமாற்றி பணத்தை மோசடி செய்து விட்டதாகவும் போதை பொருள் கும்பலுடன் அவருக்கு தொடர்பு உள்ளது என்றும் வலைத்தளத்தில் ரசிகர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் நடிகை வித்யாபாலன் ரியாவுக்கு ஆதரவாக பேசி எதிர்ப்பில் சிக்கி உள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், “ரியாவை வில்லியாக சித்தரிப்பதை பார்த்து எனது நெஞ்சே வெடிக்கிறது. நீதி துறை மீதும் விசாரணை அதிகாரிகள் மீதும் நம்பிக்கை உள்ளது. அவர்கள் உன்மையை கண்டு பிடிப்பார்கள். அதற்குள் நீங்களே தீர்ப்பு எழுதி விடாதீர்கள்” என்று குறிப்பிட்டு உள்ளார். இதனால் ரசிகர்கள் கோபம் வித்யாபாலன் பக்கம் திரும்பி உள்ளது. சுஷாந்த் சிங் மரண வழக்கை…

சமூகத்தின் மீது மனிதன் காட்டும் எதிர்ப்பு தற்கொலை வைரமுத்து

சமூகத்தின் மீது மனிதன் காட்டும் எதிர்ப்பு தற்கொலை என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். இந்தியாவில் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து பதிவு செய்யப்பட்டு வருகிறது. கடந்த 3 ஆண்டுகளாக தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதில் தமிழகம் தொடர்ந்து 2 ஆம் இடத்தில் இருந்து வருவதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் அதிர்ச்சி தரும் தகவலை நேற்று வெளியிட்டது. அதுமட்டுமில்லாமல் அதிகமாக தற்கொலை செய்து கொள்ளும் நகரங்களின் பட்டியலில் சென்னை முதலிடத்தில் இருப்பதாகவும் 2,461 தமிழகத்தில் கடந்த ஆண்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிவித்திருந்தது. மேலும், காதல் பிரச்னை, குடும்பத் தகராறு உள்ளிட்ட காரணங்களால் தான் அதிகளவு தற்கொலை நடந்துள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தது. தேசிய ஆவண காப்பகம் வெளியிட்ட இந்த தகவல் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில் தற்கொலையில் தமிழகம் இரண்டாவது இடத்தில் இருப்பது குறித்து…

நடிகை ரியாவின் தந்தையிடம் சிபிஐ விசாரணை

இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் 14-ந் தேதி மும்பை பாந்திராவில் உள்ள வீட்டில் தூக்கில் தொங்கியபடி பிணமாக மீட்கப்பட்டார். 34 வயது இளம் நடிகரான அவரது மரணம் சினிமா உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து மும்பை போலீசார் விசாரித்து வந்த நிலையில், பீகாரில் வசித்து வரும் சுஷாந்த் சிங்கின் தந்தை அளித்த புகாரின் பேரில், சுஷாந்த் சிங்கின் காதலியும், நடிகையுமான ரியா சக்ரபோர்த்தி (வயது28) மீது தற்கொலைக்கு தூண்டுதல், பணமோசடி ஆகிய பிரிவுகளின் கீழ் பாட்னா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் பீகார் அரசின் பரிந்துரையை ஏற்று சி.பி.ஐ. விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டது. இதையடுத்து டெல்லியில் இருந்து வந்த சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த 10 நாட்களுக்கு மேலாக மும்பை சாந்தாகுருசில் உள்ள டி.ஆர்.டி.ஓ. விருந்தினர் மாளிகையில் முகாமிட்டு தீவிர விசாரணை…