லண்டனில் குரொய்டன் மக்கள் வாழ ஆபத்தான குற்றச்செயல் பகுதி !

லண்டன் போலீசாரின் புள்ளி விவரங்களின் படி குரோய்டோன் வாழ மிகவும் ஆபத்தான இடமாக பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்தில் கடந்த சில ஆண்டுகளாகவே கத்தி குத்து சம்பவம், துப்பாக்கிச் சூடு தாக்குதல் என்பது சர்வசாதரணமாகி வருகிறது.வன்முறை மற்றும் குடும்ப சண்டை போன்றவைகளாலும் இறப்பு ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது தலைநகரான லண்டனில் இருக்கும் குரோய்டோனில் வன்முறை குற்றங்கள் பொதுவாக 5,978 பதிவாகியுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஆண்டு இதுவரை குரோய்டோனில் கிட்டத்தட்ட 19,000 குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் ஜூலை 31 வரை 18,955 குற்றங்கள் காவல்நிலையத்தில் பதிவாகியுள்ளதாக பெருநகர காவல்துறை வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

திருட்டு மற்றும் வாகன குற்றங்கள் முறையே 2,584 மற்றும் 3,121-ஆக பதிவாகியுள்ளன். ஜனவரி மாதத்தில் தான் இந்த நகரில் அதிக குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பொலிசாரின் அறிக்கையின் படி பார்த்தால், 2980 குற்றங்கள் பதிவாகியுள்ளது.

கடந்த ஏப்ரல் முதல் குற்றங்களின் எண்ணிக்கை மாதந்தோறும் அதிகரித்து வருவதாக பொலிசாரின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

பெருநகரத்தைப் பொறுத்தவரை 1000 குடியிருப்பாளர்களில், 49.57 என குற்ற எண்ணிக்கை பதிவாகிறது. அதன் படி குரோய்டோனில் இருக்கும் பகுதிகளில் எத்தனை குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறித்து பிரபல ஆங்கில ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

பட்டியலில் தோர்ன்டன் ஹீத் ஐந்தாவது இடத்தில் வருகிறது. இங்கு இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் ஜுலை 31 வரை 1078 குற்றங்கள் காவல்நிலையத்தில் பதிவாகியுள்ளன.நபருக்கு எதிரான வன்முறை என்பது 366 பதிவாகியுள்ளதாகவும், ஆதே நேரத்தில் ஆயுதங்கள் வைத்திருப்பதில் 12-ஆக பதிவாகியிருப்பதாகவும், இது மிகக் குறைவு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கு அடுத்த படியாக வாடான் உள்ளது. இங்கு குற்ற விகிதம் என்பது 52.07 சதவீதமாக உள்ளது. இது சராசரியை விட சற்றே அதிகம். இங்கு அதிக குடியிருப்பு பகுதி என்பதால், குற்றங்களின் எண்ணிக்கை அதிகமாகவுள்ளது. இந்த ஆண்டில் எந்த மாதங்களையும் விட, கடந்த ஜுலை மாதத்தில் மட்டும் 187 குற்றங்கள் காவல்நிலையத்தில் பதிவாகியுள்ளன.குறைந்தது என்றால் 125 குற்றங்கள் மாதங்களில் பதிவாகியுள்ளது.

மேற்கு தோர்ன்டன் இங்கு 443 குற்றங்கள் பதிவாகியுள்ளன. குறிப்பாக திருட்டு மற்றும் வாகன குற்றங்கள் முறையே 251 மற்றும் 237 ஆக பதிவாகியுள்ளது. இங்கு குற்ற விகிதம் 74.5 சதவீதமாக இருப்பதால், இது சராசரியை விட கிட்டத்தட்ட 50 சதவீதம் அதிகம் ஆகும்.

மேற்கு தோர்ன்டனில் 443 குற்றங்கள் பதிவாகியுள்ளதால், அந்த நபருக்கு எதிரான வன்முறை மிகவும் பொதுவான குற்றமாகும்.திருட்டு மற்றும் வாகன குற்றங்கள் இரண்டாவது மற்றும் மூன்றாவது பொதுவானவை, முறையே 251 மற்றும் 237 குற்றங்கள்.குற்ற விகிதம் 74.5 ஆக இருப்பதால், இது சராசரியை விட கிட்டத்தட்ட 50 சதவீதம் அதிகம்.

பிராட் கிரீன் இங்கு கடந்த ஏப்ரல் முதல் குற்றங்கள் நிலையான விகிதத்தில் அதிகரித்து வருகிறது. ஜுலை மாதத்தில் மட்டும் 290 பிராட்கிரீன்குற்றங்கள் பதிவாகியுள்ளன. இந்த இந்த ஆண்டு இதுவரை எந்த மாதத்திலும் இல்லாத அதிகபட்ச எண்ணிக்கை இதுவாகும்.பொதுவான குற்றமாக 454 பதிவாகியுள்ளது.

பயர் பீல்டு இது தான் நகரின் குற்றங்களின் மைய இருப்பிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக 2294 குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இங்கு குற்ற விகித 206,21 ஆக உள்ளது. இது சராசரியை விட நான்கு மடங்கு அதிகம்.நபருக்கு எதிரான வன்முறை மற்றும் திருட்டு குற்றங்கள் முறையே 582 மற்றும் 567 ஆகிய பதிவாகியுள்ளன.

Related posts