உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – பலனளிக்காத முயற்சி!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன்தினமும் தாக்குதல் நடைபெறுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னரும் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தாக்குதல் குறித்து தெரிவிக்க முயன்ற போதிலும், அவர் வெளிநாடு சென்றிருந்ததால் தொலைபேசி மூலம் அவரை தொடர்பு கொள்ள முடியாமல் போனதாக அரச புலனாய்வு துறையின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன ஆணைக்குழுவில் தெரிவித்துள்ளார்.

சாட்சியங்களை வழங்க நேற்று (21) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகி ஆணைக்குழுவின் அதிகாரிகள் வினவிய கேள்விகளுக்கு பதிலளித்த அவர், தேசிய பாதுகாப்பு பேரவை கூட்டம் இறுதியாக 2019 பெப்ரவரி மாதம் தாக்குதலுக்கு முன்னர் இடம்பெற்றதாக கூறினார்.

தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக தாக்குதலுக்கு முன்னர் சர்வதேச புலனாய்வு தகவல் கிடைத்திருந்தும் ஏன் அப்போதைய ஜனாதிபதிக்கு அறிவிக்கவில்லை என? அரச மேலதிக சொலிசிட்டர் நாயகம் நிலந்த ஜயவர்தனாவிடம் வினவினார்.

அதற்கு பதிலளித்த அவர், ´நான் மாலை 6.18 க்கு பேஜட் வீதியில் இருந்து ஜனாதிபதியை தொடர்பு கொள்ளச் செய்யுமாறு சொன்னேன். தொடர்ந்தும் முயற்சிக்குமாறு அவர்கள் என்னிடம் சொன்னார்கள். எவ்வாறாயினும், தாக்குதலுக்கு முன்னைய நாளில் அதாவது ஏப்ரல் 20 திகதியும் ஜனாதிபதியை தொடர்பு கொள்ள முயற்சித்தும் அது முடியவில்லை, ´ என நிலந்த ஜயவர்தன சாட்சியம் அளித்தார்.

நீங்கள் மறுபடியும் முயற்சிக்கவில்லையா? என மேலதிக சொலிசிட்டர் நாயகம் நிலந்த ஜயவர்தனாவிடம் மீண்டும் வினவினார்.

அதற்கு பதிலளித்த அவர், ´இல்லை. இந்த தகவலை ஏப்ரல் 4 ஆம் திகதி ஜனாதிபதிக்கு அறிவித்திருக்க வேண்டும், ஆனால் நான் அவ்வாறு செய்யவில்லை. பாதுகாப்பு செயலாளர், தேசிய புலனாய்வுத் துறைத் தலைவர் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோருக்கு அறிவிப்பதே தனது கடமை என கூறினார். எனினும் நான் என்னால் முடிந்த அனைத்தையும் செய்தேன்.´ எனக்கு கிடைத்த அந்த தகவலை ஜனாதிபதியிடம் தெரிவிக்க வேண்டும் என்று எங்கும் எழுதப்பட்ட அல்லது வாய்மொழி அறிவுறுத்தல் எதுவும் இல்லை. ஜனாதிபதியிடம் கூறிவிடலாம் என நினைத்தேன், நாம் முயற்சித்த போது அவர் வேலைபழுவாக இருந்தார். எனினும் ஜனாதிபதிக்கு அந்த செய்தியை சொல்ல வேண்டிய அவசியம் இருந்தது.

அதன் பின்னர் ´ஜனாதிபதிக்கு அறிவிக்கப்பட்டிருந்தால் மக்கள் காப்பாற்றப்பட்டிருப்பார்கள் என்று இப்போது நீங்கள் நினைக்கவில்லையா? என நிலந்த ஜயவர்தனாவிடம் ஆணைக்குழுவின் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி வினவினனார்.

´நான் இன்னும் அப்படி உணரவில்லை.´ என நிலாந்த ஜயவர்தன பதிலளித்தார்.

´நீங்கள் ஜனாதிபதியிடம் கூறியிருந்தால், ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து, இராணுவம் வரவழைக்கப்பட்டு, தேவையான நடவடிக்கைகளை எடுத்து மக்கள் கொல்லப்படுவதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கும் என நீங்கள் ஏன் நினைக்கவில்லையா? என மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி மறுபடியும் வினவினனார்.

அதற்கு பதிலளித்த நிலந்த ஜயவர்தன, ´சம்பவத்திற்குப் பின்னர் பலரும் பல விடயங்களை சொல்ல முடியும். நாங்கள் பொறுப்புடன் செயல்பட்டோம். நான் மாத்திரம் ஜனாதிபதிக்கு தெரிவிக்க வேண்டும் என்றில்லை மாறாக அதை தேசிய புலனாய்வுத் தலைவர், பாதுகாப்புச் செயலாளர் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோரால் செய்திருக்க முடியும். அவர்கள் அவ்வாறு செய்திருப்பார்கள் என நான் நினைத்தேன். எனினும் நான் முயற்சித்தேன்.

இதன்போது ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் அவரிடம், ´தாக்குதல் நடக்கும் என்று நீங்கள் இதற்கு முன்னர் கூறியபோது, பொலிஸ்மா அதிபர் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று நீங்கள் நினைத்தாக கூறினீர்கள். அப்போது கூட நீங்கள் ஏன் ஜனாதிபதியிடம் அதை தெரிவிக்கவில்லை?´என வினவினார்.

´நான் ஜனாதிபதியுடன் பேசினாலும், அவர் பாதுகாப்பு செயலாளரிடமோ அல்லது பிரதமரிடமோ அதை கூறுவார் அவர் பிரதமருடன் பேசுவாரா? என்று எனக்குத் தெரியவில்லை. நான் ஜனாதிபதியிடம் பேசியும் எதுவும் நடக்கவில்லை என்றால், தேசிய புலனாய்வு சேவை எதுவும் செய்யவில்லை என்று அவர் கூறுவார்,´ என அவர் கூறினார்.

´ஜனாதிபதி இலங்கையில் இல்லை என்றால், ஏன் அது குறித்து பிரதமரிடமோ அல்லது பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தவிடமோ சொல்லவில்லை?´ என ஜனாதிபதி ஆணைக்குழுவின் நீதிபதி நிலந்த ஜயவர்தனாவிடம் மீண்டும் விசாரித்தார்.

அதற்கு பதிலளித்த அவர், ´பிரதமருக்கு அறிவிக்கப்படவில்லை காரணம் இதுபோன்ற விடயங்களில் இதற்கு முன்னர் அவர், குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியிருக்கவிலை´என பதிலளித்தார்.

இதன்போது ஏப்ரல் 21 தாக்குதலுக்கு முன்னர் கூடுதல் தகவல் கிடைத்ததா? ஏன மேலதிக சொலிசிட்டர் நாயகம் நிலந்த ஜயவர்தனவிடம் கேட்டார்.

´காலை 8.27 க்கு எனது தகவல் வழங்குநர்கள் என்னிடம் இதுபற்றி சொன்னாரகள், அவர்களின் இலக்குகளில் ஒன்று கொழும்பு மெதடிஸ்ட் தேவாலயம் என்றும் அவர்கள் அன்று காலை 6 முதல் 10 மணிக்குள் தாக்குதலை நடத்துவார்கள். என அவர்கள் கூறினர். இந்த தகவலுவுடன், காலை 8.28 க்கு நான் மேல் மாகாணத்திற்கு பொறுப்பாக இருந்த சிரேஸ்ட பொலிமா அதிபர் நந்தன முனசிங்கவுக்கும், காலை 8.30 க்கு பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கும் அறிவித்தேன் ஆனால் பொலிஸ்மா அதிபர் அதற்கு பதிலளிக்கவில்லை. அதன் பின்னர் 8.32 க்கு பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோவுக்கு அறிவித்தாகவும் நிலந்த ஜயவர்தன கூறினார்.

இதன்போது, வெளிநாட்டு புலனாய்வு அதிகாரிகள் நிலந்த ஜயவர்தனவுக்கு தகவல் வழங்கிய போது, அதாவது 2019 ஏப்ரல் 4 முதல் தாக்குதல் நடத்தப்படும் வரை நடந்த சம்பவங்கள் தொடர்பான தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தால் தாக்குதலை தடுத்திருக்க முடியுமானதாக அமைந்திருக்கும் அல்லவா என அரச மேலதிக சொலிசிட்டர் நாயகம் அவரிடம் வினவினார்.

அந்த வேளையில் ஆணைக்குழு முன் மிகவும் உணர்ச்சி வசப்பட்ட நிலந்த ஜயவர்தன, ´அப்படி நடந்திருந்தால் ஒருவரை ஏனும் காப்பாற்றியிருக்க முடியும்´ என்று கூறினார்.

அரச மேலதிக சொலிசிட்டர் நாயகம் மறுபடியும் ´முதல் குண்டு வெடித்ததை அறிந்த பிறகு, அரச புலனாய்வு பணிப்பாளராக நீங்கள் என்ன நினைத்தீர்கள்?´ என வினவினார்.

இதற்கு பதிலளித்த நிலந்த ஜயவர்தன, ´நான் அப்போது அரச புலனாய்வு பிரிவின் பணிப்பாளராக இருந்தனை எண்ணி வருத்தப்பட்டேன் என்றார். நான் முயற்சித்தும் அது முடியாமல் போனது. தாக்குதல்களுக்குப் பின்னர் நாங்கள் பிரதமரின் தலைமையில் பாதுகாப்பு அமைச்சில் சந்தித்தோம். அதன்போது ´இதுவரை ஆறு குண்டுகள் வெடித்துள்ளன. இன்னும் இரண்டு குண்டுகள் உள்ளன. குண்டுகளை சுமந்த மற்றொரு வேன் உள்ளது. எனவே எங்கும் செல்ல வேண்டாம்.´ என அப்போது நான் கூறினேன். என தெரிவித்தார்.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைமை நீதிபதி மீண்டும் நிலந்த ஜயவர்தனவிடம், ´இந்த தாக்குதலுக்கு முன்னர் தேசிய பாதுகாப்பு பேரவை கடைசியாக எப்போது கூடியது?´ என கேட்டார்.

அதற்கு பதிலளித்த அவர் ´ 2019 பெப்ரவரி 29 ஆம் திகதி என கூறினார்.

Related posts