ரஜினிகாந்த் திரையுலக பயணம் 45 ஆம் ஆண்டு நிறைவு

ரஜினிகாந்த் திரையுலக பயணம் 45 ஆம் ஆண்டு நிறைவு செய்வதையொட்டி கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் தொடங்கி 45 ஆண்டுகளை நிறைவு செய்யவுள்ளதை ரசிகர்கள் கொண்டாட துவங்கி உள்ளனர். வரும் ஆகஸ்ட் 15ம் தேதி அபூர்வ ராகங்கள் படம் ரிலீசாகி 45 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது.

அதனை கொண்டாடும் விதமாக, மோகன் லால் முதல் ஸ்ரேயா வரை பல திரை பிரபலங்களை வைத்து காமன் டிபியை ரஜினி ரசிகர்கள் வெளியிட்டு #45YearsOfRajinismCDP ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர். அதனைதொடர்ந்து ரஜினிகாந்தின் 45 ஆண்டுகால திரை வாழ்க்கையை கொண்டாடும் விதமாக அவரது ரசிகர்கள் பலவிதமான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் திரையுலகில் 45 ஆண்டுகளை நிறைவு செய்வதையொட்டி ரஜினிகாந்துக்கு கவிஞர் வைரமுத்து டுவிட்டர் பதிவில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து வாழ்த்து கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார்,

நகலெடுக்க முடியாத
உடல்மொழி

சூரியச் சுறுசுறுப்பு

கிழவி குழவியென
வசப்படுத்தும் வசீகரம்

45 ஆண்டுகளாய்
மக்கள் வைத்த உயரத்தைத்
தக்கவைத்த தந்திரம்

இரண்டுமணி நேரத்
தனிமைப் பேச்சிலும்
அரசியலுக்குப்
பிடிகொடுக்காத பிடிவாதம்

இவையெல்லாம் ரஜினி;
வியப்பின் கலைக்குறியீடு!

இவ்வாறு டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

——-

திரைப்பயணத்தின் 45 ஆண்டுகள் நிறைவு பெறும் நாளில், நீங்கள் இல்லாமல் நான் இல்லை என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் தொடங்கி 45 ஆண்டுகளை நிறைவு செய்யவுள்ளதை ரசிகர்கள் கொண்டாட துவங்கி உள்ளனர். வரும் ஆகஸ்ட் 15ம் தேதி அபூர்வ ராகங்கள் படம் ரிலீசாகி 45 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது.

அதனை கொண்டாடும் விதமாக, மோகன் லால் முதல் ஸ்ரேயா வரை பல திரை பிரபலங்களை வைத்து காமன் டிபியை ரஜினி ரசிகர்கள் வெளியிட்டு #45YearsOfRajinismCDP ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

பஸ் கண்டக்டராக இருந்து சூப்பர் ஸ்டாராக உயர்ந்துள்ள ஒரு மனிதர், கிட்டத்தட்ட 45 ஆண்டுகளாக தமிழ் சினிமா ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். தனது நடிப்பாலும், ஸ்டைலாலும், பஞ்ச் வசனங்களாலும், மக்கள் சேவையாலும், ரசிகர்கள் மனங்களில் நிறைந்து உள்ளார். அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் அடியெடுத்து வைத்த அவர் அண்ணாத்தவாக அசத்தி வருகிறார்.

ரஜினிகாந்தின் 45 ஆண்டுகால திரை வாழ்க்கையை கொண்டாடும் விதமாக அவரது ரசிகர்கள் பலவிதமான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். அதன் முதல் கட்டமாக 45 வருட கொண்டாட்ட காமன் டிபியை தற்போது தென்னிந்திய திரை பிரபலங்களை வைத்து வெளியிடுகின்றனர்.

இன்று (ஆகஸ்ட் 9) ரஜினியின் 45 ஆண்டுகள் கொண்டாட்டத்தை முன்னிட்டு, மோகன்லால், மம்மூட்டி, சிவகார்த்திகேயன் தொடங்கி முன்னணி நடிகர்கள் ஒன்றிணைந்து போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டர் பதிவில்,

என்னுடைய திரையுலகப் பயணத்தின் நாற்பத்தைந்து ஆண்டுகள் நிறைவு பெறும் இந்நாளில், என்னை வாழ்த்திய நல் இதயங்களுக்கும், என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கும், என்னுடைய இதயம் கனிந்த நன்றி என பதிவிட்டுள்ளார்.

Related posts