உன்னதத்தின் ஆறுதல்! வாரம் 20. 31

நிலையில்லா இளமையும் நிலையான தேவனும். சகோதரன். பிரான்சீஸ் அந்தோனிப்பிள்ளை. ரெகொபோத் ஊழியங்கள் - டென்மார்க்கிற்காக பிரார்த்திப்போம். இளவயதும் வாலிபமும் மாயையே. பிரசங்கி 11:10. இன்றைய சிந்தனையை விளங்கிக்கொள்ள பின்வரும் வேதப்பகுதியை தியானத் தோடு வாசிப்போம். வாலிபனே! உன் இளமையிலே சந்தோஷப்படு, உன் வாலிப நாட்களிலே உன் இருதயம் உன்னைப் ப10ரிப்பாக்கட்டும். உன் நெஞ்சின் வழிகளிலும், உன் கண்ணின் காட்சிகளிலும் நட ஆனாலும் இவை எல்லாவற்றின் நிமித்தமும் தேவன் உன்னை நியாயத்திலே கொண்டுவந்து நிறுத்துவார் என்று அறி. நீ உன் இருதயத்திலிருந்து சஞ்சலத்தையும், உன் மாம்சத்திலிருந்து தீங்கையும் நீக்கிப்போடு, இளவயதும் வாலிபமும் மாயையே. வச. 9-10. வாலிபம் என்பது வாழ்க்கையின் ஒருபருவமே தவிர வாலிபம்தான் வாழ்க்கையல்ல. மானிட வாழ்வில் எந்தப்பருவம் சந்தோசத்தைக் கொடுக்கிறது? குழந்தைப்பருவமா? வாலிபப்பருவமா? முதுமைப்பருவமா? இப்படியாக ஓர் பட்டி மன்றம் நடப்பதை விஜய் தொலைக்காட்சியில் பார்த்தேன்.…

அபிஷேக் இன்னும் சிகிச்சையில் இருப்பதை நினைக்கும்போது வலிக்கிறது

அபிஷேக் இன்னும் சிகிச்சையில் இருப்பதை நினைக்கும்போது மனம் வலிக்கிறது என அமிதாப் பச்சன் கூறி உள்ளார். அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், மகள் ஆராத்யா ஆகியோருக்கு சமீபத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்கள். இதில் ஐஸ்வர்யா ராய், ஆராத்யா இருவருக்கும் லேசான தொற்றுதான் என்பதால், முதலில் குணமாகி வீடு திரும்பினார்கள். நேற்று அமிதாப் பச்சனுக்கு கொரோனா நெகட்டிவ் வந்ததால் வீடு திரும்பினார். ஆனால், அபிஷேக் பச்சனுக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதியானதால் தொடர் சிகிச்சையில் இருக்கிறார். வீடு திரும்பிய அமிதாப் பச்சன் தனக்காகப் பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து டுவீட் செய்திருந்தார். தற்போது அவருடைய பேஸ்புக்கில் அபிஷேக் சிகிச்சையிலிருப்பது மனம் வலிக்கிறது என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமிதாப் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:…