உன்னதத்தின் ஆறுதல்! வாரம் 20. 22

குறிப்பு : ஒவ்வொரு ஆக்கத்திற்கும் படைப்பாளிகளே பொறுப்பு அலைகள் அல்ல.. உன்னை மறவாமல் நினைக்கும் தேவன். சகோதரன். பிரான்சீஸ் அந்தோனிப்பிள்ளை. ரெகொபோத் ஊழியங்கள் - டென்மார்க்கிற்காக பிரார்த்திப்போம். சீயோனோ, கர்த்தர் என்னைக் கைவிட்டார், ஆண்டவர் என்னை மறந்தார் என்று சொல்லுகிறாள். ஸ்திhPயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை. இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன். உன் மதில்கள் எப்போதும் என் முன் இருக்கிறது. ஏசாயா 49:14-16. கர்த்தர் அன்புள்ளவர், தயவு உள்ளவர், காருண்யம் உள்ளவர். மட்டுமல்ல, அளவற்ற மனதுருக்கம் உள்ளவர். அவர் நம்மை நினைத்திருக்கிறார். பத்திரிகையில் நாளந்தம் வெளிவரும் செய்திகளில் முக்கியமானது போரின் விளைவால் ஏற்பட்ட துயரமான வாழ்கை பற்றியதாகும். நான் வாழும் டென்மார்க்கில் வீடற்று வீதிகளில் தங்கியிருக்கும் எனது முன்னாள் தொழில் நண்பர் ஒருவருக்கு…

சிவாஜிக்குப் பிறகு அசலான நடிகர் வடிவேலு தான்: வெற்றிமாறன்

சிவாஜிக்குப் பிறகு அசலான நடிகர் வடிவேலு தான் என்று இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். கரோனா ஊரடங்கில் அனைவருமே நேரலையில் பேட்டி மற்றும் கலந்துரையாடல் நடத்தி வருகிறார்கள். அவ்வாறு தனியார் யூடியூப் இணையதளம் ஒன்று ஒருங்கிணைத்த கலந்துரையாடலில் பயிற்சியாளர் பாசு ஷங்கர், இந்திய கிரிக்கெட் அணி வீரர் தினேஷ் கார்த்திக் மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் ஆகியோர் கலந்து கொண்டனர். தினேஷ் கார்த்திக் மற்றும் வெற்றிமாறன் இருவருக்குமே உடற்பயிற்சியாளராக பாசு ஷங்கர் இருந்து வருகிறார். இந்த கலந்துரையாடலில் சிவாஜிக்குப் பிறகு வடிவேலு தான் அசலான நடிகர் என்று தெரிவித்துள்ளார் இயக்குநர் வெற்றிமாறன். அந்தப் பகுதி: பாசு ஷங்கர்: உங்களுக்கு என்ன மாதிரியான படங்கள் பிடிக்கும்? வெற்றிமாறன்: கடந்த சில வருடங்களாக நான் வடிவேலு நகைச்சுவையைப் பார்த்து வருகிறேன். அதைத்தான் அதிகமாகப் பார்க்கிறேன். தொலைக்காட்சி பார்ப்பதை நிறுத்திவிட்டு ஓடிடி தளங்களுக்குள் சென்ற…

24 மணிநேரத்தில் 1,06,000 பேருக்கு கரோனா நோய்த் தொற்று

உலகம் முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் சுமார் 1,06,000 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு கூறும்போது, “கடந்த 24 மணிநேரத்தில் உலகம் முழுவதும் சுமார் 1,06,000 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஒரே நாளில் ஏற்பட்ட அதிகபட்ச தொற்று இதுவாகும். கரோனா வைரஸ் நோய்த் தொற்று தொடர்பாக நாம் நீண்ட தூரம் செல்ல வேண்டி இருக்கிறது. பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளில் கரோனா நோய்த்தொற்று பரவுவது குறித்து கவலை கொண்டுள்ளோம்” என்று தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் கரோனா வைரஸால் 50,90,061 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். 20, 24,222 பேர் குணமடைந்துள்ளனர். இதில் அமெரிக்காவில் மட்டும் சுமார் 15, 93,039 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 94,941 பேர் பலியாகி உள்ளனர். அமெரிக்காவை…

நடிகர்கள்-இயக்குனர்களுக்கு சதவீத அடிப்படையில் சம்பளம்

படத்தை வியாபாரம் செய்த பின்னர், அதில் கிடைக்கும் பணத்தை சதவீத அடிப்படையில் தயாரிப்பாளர், நடிகர். நடிகைகள், இயக்குனர்கள் பிரித்துக்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. கொரோனா ஊரடங்கினால் திரையுலகம் முடங்கி உள்ளது. இதனால் நடிகர்கள் பலர் சம்பளத்தை குறைத்துள்ளனர். இந்த நிலையில் படத்தை வியாபாரம் செய்த பின்னர், அதில் கிடைக்கும் பணத்தை சதவீத அடிப்படையில் தயாரிப்பாளர், நடிகர். நடிகைகள், இயக்குனர்கள் பிரித்துக்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இதனை சத்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் ஏற்றுள்ளனர். இதுகுறித்து பிரபல வினியோகஸ்தரும், தியேட்டர் உரிமையாளர்கள் சங்க தலைவருமான திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள ஆடியோவில் பேசி இருப்பதாவது:- கொரோனா காலத்தில் தயாரிப்பாளர் பிரமிட் நடராஜனிடம் பேசியபோது சில ஆலோசனைகள் சொன்னார். உடனே தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரியை தொடர்பு கொண்டு, தமிழ் சினிமாவில் கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்கள், இயக்குனர்களுக்கு சதவீத அடிப்படையில் சம்பளம்…

படப்பிடிப்பு இல்லாமல் வறுமை பழ வியாபாரம் செய்யும் நடிகர்

கொரோனாவால் படப்பிடிப்பு இல்லாமல் வருமானம் இன்றி வறுமையில் தவிக்கும் நடிகர் ஒருவர், தெருவில் தள்ளு வண்டியில் பழ வியாபாரம் செய்யும் தகவல் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா ஊரடங்கினால் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட அனைத்து மொழி திரைத்துறையும் முடங்கி உள்ளது. 2 மாதங்களாக படப்பிடிப்புகள் இல்லாததால் திரைப்பட தொழிலாளர்கள் வருமானம் இன்றி தவிக்கிறார்கள். அவர்களுக்கு முன்னணி நடிகர், நடிகைகள் பலர் உதவி வழங்கி உள்ளனர். திரைப்பட தொழிலாளர்களுக்கு ‘பெப்சி’ நிதி திரட்டி உதவி வருகிறது. நடிகர் சங்கம் சார்பிலும் நிதி திரட்டி நலிந்த நடிகர், நடிகைகளுக்கு உதவி வழங்குகிறார்கள். இந்த நிலையில் கொரோனாவால் படப்பிடிப்பு இல்லாமல் வருமானம் இன்றி வறுமையில் தவிக்கும் நடிகர் ஒருவர், தெருவில் தள்ளு வண்டியில் பழ வியாபாரம் செய்யும் தகவல் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

நடிகர் பிரித்விராஜ் தனிமைப்படுத்தப்பட்டார்

படப்பிடிப்புக்காக ஜோர்டான் சென்று கேரளா திரும்பிய நடிகர் பிரித்விராஜ் தனிமைப்படுத்தப்பட்டார். பிரித்விராஜ், ‘ஆடுஜீவிதம்’ என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார். அமலாபால், அபர்ணா முரளி, வினித் சீனிவாசன் ஆகியோரும் இதில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். பிளஸ்சி இயக்குகிறார். இதன் படப்பிடிப்புக்காக பிரித்விராஜ் உள்பட படக்குழுவை சேர்ந்த 58 பேர் கொரோனா ஊரடங்குக்கு முன்பே ஜோர்டான் சென்று விட்டனர். அங்குள்ள வாடி ரம் என்ற பாலைவன பகுதியில் படப்பிடிப்பு நடந்து கொண்டு இருந்தபோது ஊரடங்கை அறிவித்து விமான போக்குவரத்தை நிறுத்தியதால் அவர்களால் இந்தியா திரும்ப முடியவில்லை. பாலைவன பகுதியில் தங்கி இருப்பதாகவும், நல்ல உணவு கிடைக்கவில்லை என்றும் பிரித்விராஜ் உருக்கமான பதிவை வெளியிட்டு இருந்தார். அவரை மீட்டு வரும்படி கேரள அரசுக்கு மலையாள திரையுலகினர் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அரசு முடியாது என்று கைவிரித்து விட்டது. இந்த நிலையில்…