நியூயார்க்கில் இறப்பு வேகம் மருத்துவர்களை ஆச்சரியப்படுத்துகிறது

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் நியூயார்க்கில் இறப்பு வேகம் மருத்துவர்களை ஆச்சரியப்படுத்துகிறது.

அமெரிக்காவில் கொரோனா பாதிப்புக்கு கடந்த 24 மணிநேரத்தில் 2,569 பேர் பலியாகி உள்ளனர் என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கின்றது. இது வேறெந்தவொரு நாட்டையும் விட மிக அதிக அளவிலான பலி எண்ணிக்கையை கொண்டுள்ளது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அமெரிக்காவில் 6 லட்சத்து 44 ஆயிரத்து 89 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. அந்நாட்டில் 28 ஆயிரத்து 529 பேர் பலியாகி உள்ளனர். 48 ஆயிரத்து 701 பேர் சிகிச்சை முடிந்து சென்றுள்ளனர்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 2 லட்சத்து 14 ஆயிரத்து 648 பேருக்கும், இதனை தொடர்ந்து நியூஜெர்சி நகரில் 71 ஆயிரத்து 30 பேருக்கும் அதிக அளவாக பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதேபோன்று இந்த இரு நகரங்களிலும் கொரோனா வைரசுக்கான பலி எண்ணிக்கையும் அதிகளவில் உள்ளன. நியூயார்க்கில் 11 ஆயிரத்து 586 பேரும், நியூஜெர்சியில் 3 ஆயிரத்து 156 பேரும் பலியாகி உள்ளனர்.

அமெரிக்க விஞ்ஞானிகள் டேடன் தோர்பே மற்றும் கெல்சி லிபர்கர் ஆகிய இருவர் தாங்கள் இதுவரை மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், கலிபோர்னியா மாநிலத்தில் மட்டும் 2.7 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.இது தற்போது கலிபோர்னியா நிர்வாகத்தால் வெளியிடப்பட்டுள்ள கணக்குகளைவிட 10 மடங்கு அதிகம் என குறித்த விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

அது மட்டுமின்றி, ஒட்டுமொத்த அமெரிக்கா மக்கள்தொகையில் சுமார் 4.8 சதவீதம் பேர் கொரோனாவுக்கு இலக்காகியுள்ளதாக இருவரும் கண்டறிந்துள்ளனர்.

இது தற்போது உறுதி செய்யப்பட்ட கொரோனா பாதிக்கப்பட்டவர்களைவிட 40 சதவீதம் அதிகம்.மட்டுமின்றி நியூயார்க்கில் கிட்டத்தட்ட 50 சதவீதம் மக்கள், அதாவது 90 லட்சம் மக்கள் தற்போது கொரோனாவுக்கு இலக்காகியுள்ளனர் என்ற தகவலையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.

இவர்களின் இந்த ஆய்வறிக்கை உண்மையாக இருக்கும் பட்சத்தில், இதுவரை சோதிக்கப்படாத அல்லது அறிகுறிகளே இல்லாத அமெரிக்கர்கள் கொரோனாவை நாடு முழுவதும் பரப்பி வருவது மருத்துவ சமூகத்திற்கு பேரிடியாக மாறும்.ஆனால் இந்த விஞ்ஞானிகள் இருவரின் கூற்றை மறுத்துள்ள உள்ளூர் சுகாதார நிபுணர்கள், இவர்கள் இருவரும் முழுமை பெறாத தரவுகளின் அடிப்படையில் ஆய்வுகளை முன்னெடுத்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

நியூயார்க் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள பகுதி என்றும், ஆனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46 சதவீதத்திற்கு நெருக்கமாக இருப்பதாகவும்,அரசு பதிவு செய்துள்ளது போன்று1.09 சதவிகிதம் அல்ல என்றும் ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.நியூயார்க்கை அடுத்து இரண்டாவது இடத்தில் நியூ ஜெர்சி உள்ளது எனவும் இங்குள்ள மக்கள்தொகையில் 16 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.மூன்றாமிடத்தில் உள்ள லூசியானாவில் 10 சதவிகித பொதுமக்கள் கொரோனா பாதிப்புக்கு இலக்காகியுள்ளனர்.

Related posts