சூர்யா – வெற்றி மாறன் படத்தின் இசையமைப்புப் பணிகள் ஆரம்பம்

சூரரைப் போற்று படத்துக்குப் பிறகு இரு படங்களில் நடிக்கத் திட்டமிட்டுள்ளார் சூர்யா.

சூர்யா – இயக்குநர் ஹரி கூட்டணி அருவா படத்தின் மூலம் மீண்டும் இணைகிறது. ஞானவேல்ராஜா இப்படத்தைத் தயாரிக்கிறார். சூர்யாவின் 39-ஆவது படம் இது. ஹரியின் 16-ஆவது படம். இசை – இமான்.

அசுரன் படத்துக்குப் பிறகு சூரி கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் வெற்றி மாறன். இதன்பிறகு வாடிவாசல் என்கிற சூர்யா நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார். இசை – ஜி.வி. பிரகாஷ். இது அவர் இசையமைக்கும் 75-வது படம்.

இந்நிலையில் வாடிவாசல் பற்றி ஜி.வி. பிரகாஷ் கூறியுள்ளதாவது:

ஜி.வி. 75 சிறப்பாக இருக்கும். இசையமைப்புப் பணிகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டன. ஒலித்தரம் தனித்துவமாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

Related posts