உலகசுகாதார அமைப்புதான் அரசியல் செய்கிறது – டொனால் டிரம்ப்

கொரோனா வைரஸ் விவகாரத்தில் நாங்கள் அரசியல் செய்யவில்லை உலகசுகாதார அமைப்புதான் அரசியல் செய்கிறது என அமெரிக்க ஜனாதிபதி டொனால் டிரம்ப் கூறினார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனாவுக்கு ஆதரவாக உலக சுகாதார நிறுவனம் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருகிறது. உலக சுகாதார நிறுவனத்துக்கு செலவழிக்கும் பணத்தை நிறுத்தப்போகிறோம் என கூறி இருந்தார்.

இது குறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறும்போது

தயவுசெய்து இந்த கொரோனா வைரஸ் விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம். இது உலக அளவில் உங்களிடம் வேறுபாடுகளை ஏற்படுத்துகிறது. தயவுசெய்து கொரோனாவை அரசியல் மயமாக்குவதைத் தவிர்த்திடுங்கள். இந்த ஆபத்தான வைரஸைத் தோற்கடிக்க நாட்டின் ஒற்றுமை மிக முக்கியமானதாக இருக்கும்.

நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறோம். நாங்கள் இரவும் பகலும் உயிர்களைக் காப்பாற்ற தொடர்ந்து பணி புரிந்து வருகிறோம் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை என கூறினார். உலக சுகாதார அமைப்பின் தலைவர் பதில் குறித்து அம்ப்மெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா விவகாரத்தில் நாங்கள் அரசியல் செய்யவில்லை. உலக சுகாதார அமைப்பின் தலைவர்தான் அரசியல் செய்கிறார்.கடந்த ஆண்டு நாங்கள் 45 கோடி டாலர் உலக சுகாதார அமைப்புக்காக செலவு செய்தோம். அதற்கு முன் லட்சக்கணக்கிலான டாலர்களைச் செலவு செய்துள்ளோம். அதைப் பயன்படுத்தி நன்றாகச் செயல்பட்டார்கள். ஆனால் சீனாவுடன் உறவு வைத்துக்கொண்டு நீங்கள் அரசியல் பற்றிப் பேசுகிறார்கள்.

சீனா 4.20 கோடி டாலர்தான் உலக சுகாதார அமைப்புக்காக செலவிட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பின் செயல்பாடு சீனாவுக்கு ஆதரவாக இருக்கிறது. இது சரியல்ல. இது நியாயமானதாக எங்களுக்குத் தெரியவில்லை. உலகத்துக்கும் இது நியாயமானது இல்லை.

உலக சுகாதார அமைப்பு தங்களுக்கு இருக்கும் சிறப்பு உரிமைகளைப் பயன்படுத்தனாலும் அனைவரையும், அனைத்து நாடுகளையும் சமமாக நடத்த வேண்டும். ஆனால் அதுபோன்று நடத்தியதாகத் தெரியவில்லை.
நாங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதில் சில முடிவுகள் எடுக்கப்போகிறோம். அமெரிக்கா மட்டும் அதிகமான நிதி செலவிடும். மற்ற நாடுகள் குறைவாக நிதி செலவிடுவது சரியல்ல”.
இவ்வாறு டிரம்ப் கூறினார்.

Related posts