ஜோர்டானில் 57 பேருடன் தவிக்கும் பிரித்விராஜ்

ஆடு ஜீவிதம்’ படப்பிடிப்புக்காக 57 பேருடன் ஜோர்டான் சென்று, தற்போது நாடு திரும்ப முடியாமல் நடிகர் பிரித்விராஜ் தவிக்கிறார்.

தமிழில் மொழி, கனா கண்டேன், சத்தம் போடாதே, வெள்ளித்திரை, நினைத்தாலே இனிக்கும் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள மலையாள நடிகரான பிரித்விராஜ், ‘ஆடு ஜீவிதம்’ படப்பிடிப்புக்காக 57 பேருடன் ஜோர்டான் சென்று, தற்போது நாடு திரும்ப முடியாமல் தவிக்கிறார். இதுகுறித்து சமூக வலைத்தள பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

“கொரோனாவால் கடந்த 27-ந்தேதி எங்கள் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதனால் பாலைவனக் கூடாரத்தில் தங்கும் நிலை ஏற்பட்டது. ஏப்ரல் 2-வது வாரம் வரை படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டதால் அதற்கான உணவுகள் ஏற்பாடு செய்யப்பட்டன. குழுவில் உள்ள மருத்துவர் 72 மணிநேரத்துக்கு ஒருமுறை எங்களை பரிசோதனை செய்கிறார். ஊருக்கு திரும்ப ஆவலாக இருக்கிறோம். உலகம் தற்போது இருக்கும் சூழலில் எங்களை மீட்பது அதிகாரிகளின் கவலையாக இருக்காது என்பது புரிகிறது. உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் ஊர் திரும்ப முடியாமல் உள்ளனர். வாய்ப்பு அமையும்போது ஊருக்கு வருவோம். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள். வாழ்க்கை மீண்டும் சகஜ நிலைக்கு திரும்பும் என்று நம்புவோம்”. இவ்வாறு கூறியுள்ளார்.

இதுகுறித்து கேரள முதல்-மந்திரிக்கு கேரள பிலிம்சேம்பர் தகவல் தெரிவித்து பிரித்விராஜ் உள்ளிட்ட 58 பேரையும் பத்திரமாக அழைத்துவர ஏற்பாடு செய்யும்படி வலியுறுத்தி உள்ளது.

Related posts