இன்று 01.04.2020 காலை இலங்கை முக்கிய செய்திகள்..!

இலங்கையில் மேலும்10 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் புதிதாக இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, தற்போதைய நிலையில் நாட்டில் 142 ​பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
இவர்களில் இரண்டு பேர் உயிரிழந்துள்ள நிலையில் 16 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அதேபோல், 124 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்றைய தினம் மாத்திரம் இதுவரை 20 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

——

யாழ்.சிறைச்சாலையில் சிறு குற்றங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 44 கைதிகள் நேற்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று செவ்வாய் கிழமை யாழ் மேல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையில் கொரோனா தொற்று அபாயம் காரணமாக சிறைச்சாலைகயில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் சிறு குற்றங்க ளுடன் தொடா்புடையவா்களை பிணையில் விடுதலை செய்ய ஜனாதிபதி எடுத்துள்ள சிறப்பு நடவடிக்கையின் கீழ் நீதிம ன்றங்கள் ஊடாக இவா்கள் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றாா்கள்.
இதன்படி நேற்றும் 44 பேர் விடுவிக்கப்பட்டனர். கடந்த சில தினங்களா மேற்கொள்ளப்பட்டுவரும் இந்த நடவடிக்கை ஊடாக 197 பேர் ஏற்கனவே விடுவிக்கப்பட்டிருந்தனர்.
நேற்று விடுவிக்கப்பட்டவர்களுடன் சேர்த்து மொத்தமாக 241 பேர் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

—–

இன்று மாத்திரம் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 195 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு பகுதியில் வைத்தே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 110 வாகனங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட வாகனங்கள் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் நீங்கும் வரையில் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க படமாட்டாது எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

—–

வெளிநாடுகளில் இருந்து கடந்த மார்ச் 16 ஆம் திகதிக்கு முன்னர் நாட்டிற்குள் வந்தவர்கள் பொலிஸில் பதிவு செய்வதற்கான கால அவகாசம் இன்று (01) நண்பகல் 12 மணியுடன் நிறைவடைகிறது.
இவ்வாறு வெளிநாடுகளிலிருந்து இலங்கை வந்த சகலரும் தம்மை பதிவு செய்துகொள்ள வேண்டியது கட்டாயம் என சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
அவ்வாறு பதிவு செய்யாதவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் பிரதி பொலிஸ்மா அதிபர எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இன்று நண்பகல் 12.00 மணிக்கு முன்னர் அவ்வாறானவர்கள் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
1933 அல்லது 119 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக அல்லது அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் தம்மை பதிவு செய்து கொள்ள வேண்டும். தங்களை பொலிஸில் பதிவு செய்யத் தவறினால், அவர்கள் மீது குற்றவியல் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.
மார்ச் 16 ஆம் திகதிக்கு முதல் நாட்டுக்குள் வந்தவர்களின் பட்டியல் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர்களால் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண மேலும் தெரிவித்துள்ளார்.

——

சுற்றுலாத்துறை, ஏற்றுமதி, வெளிநாடுகளில் தொழில் செய்கின்றவர்களிடமிருந்து கிடைக்கும் வருமானம் மற்றும் கடன், பங்குச் சந்தையில் வெளிநாட்டு முதலீடுகளில் தங்கியுள்ள பொருளாதாரங்களை கொண்டுள்ள இலங்கை போன்ற இடர்நிலைக்கு உள்ளாகியுள்ள அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு உதவுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சர்வதேச நிதி நிறுவனங்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

உலக சுகாதார நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகத்துடன் தொலைபேசியில் உரையாடிய ஜனாதிபதி, கடன் தவணை உரிமையை பெற்றுக்கொள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர், உலக வங்கியின் தலைவர், ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மற்றும் இருதரப்பு கடன் வழங்கும் முன்னணி நாடுகளின் தலைவர்களின் இணக்கத்தை பெற்றுக்கொள்ளுமாறு குறிப்பிட்டார்.

Related posts