காணாமல் போனோர் வெளி நாடுகளில் இருந்து வரக்கூடும்..! கோட்டபாய !

காணாமல் போனோர் வெளிநாடுகளில் மறைந்திருக்கலாம்.. மறுபுறம் அவர்கள் காணமால் போனோர் பட்டியலிலும் இருக்கலாம்..

சில வேளை ஒரு கட்டத்தில் அவர்கள் திரும்பியும் வரலாம் என்று கூறியுள்ளார் கோட்டபாய.

இவ்வறு ஐ.நாவிடம் கூறியுள்ளார்.

ஜனாதிபதி கோட்டபாய கொடுத்திருக்கும் இந்த புது விளக்கம் தந்திரமானதா இல்லை உண்மையானதா தெரியவில்லை.

ஆனால் இராணுவத்திடம் நேரடியாக ஒப்படைத்தவர்கள் வெளிநாட்டில் இருந்து வரும் அதிசயம் சிறிலங்கா போன்ற நாடுகளில் நடக்குமா ?

பொய் செய்திகளிலும், அதீத கற்பனைகளிலும் உருவேறும் மக்கள் இதை எப்படி எடுப்பர் என்று தெரியவில்லை.

ஆனால் இக்கருத்தானது புலிகளின் உயர் மட்டத்தில் பலர் தப்பி மறைந்திருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

இது குறித்த விசு கருணாநிதி செய்தி வருமாறு..:

ஜெனீவா பிரேரணையிலிருந்து இலங்கை விலகிக்கொண்டது ஏனென்பதை மேற்குலக நாடுகள் விளங்கிக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்தார். உள்ளகப் பொறிமுறையொன்றினூடாக மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதன் மூலம் சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும் என்பதைச் சுட்டிக்காட்டியிருப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்றுப் பகல் (05) நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

பொருளாதார ஏற்றத்தாழ்வை அரசியலாக்கி கொண்டுள்ளனர். ஆரம்பத்தில் பொருளாதாரத்தில் சமவாய்ப்பு இல்லாமல், பாரபட்சம் நிலவியமைதான் எல்லாப் பிரச்சினைக்கும் அடிப்படை தென்னிலங்கையிலும் இந்த ஏற்றத்தாழ்வு இருந்தால்தான் கிளர்ச்சிகள் தோற்றம்பெற்றதாகச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, பொருளாதாரத்தை மையமாக வைத்தே ஆரம்பத்தில் உமா மகேஸ்வரன் இயக்கம் தொடங்கியதாகவும் குறிப்பிட்டார்.

“ஜெனீவா இணை அனுசரணையிலிருந்து இலங்கை விலகியதன் பின்னரான சூழ்நிலையை எவ்வாறு எதிர்கொள்வீர்கள், உள்ளகப் பொறிமுறையைச் சிலர் நிராகரிக்கிறார்களே?” என்று எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதில் அளித்த ஜனாதிபதி, ” தமிழ் மக்கள் மட்டுமல்ல, சிங்கள, முஸ்லிம் மக்களுக்கும் சமவாய்ப்பு விடயத்தில் குறைபாடுகள் உள்ளன. இதனைச் சீர்செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். சகலருக்கும் சமமான வாய்ப்பு இருந்தால், பிரச்சினை இருக்காது. சில அரசியல்வாதிகளின் தேவைகளுக்காக மக்கள் பகடைக்காய்களாக்கப்படுகிறார்கள். பிரச்சினைகளைத் தேடினால், தேடிக்கொண்டே போகலாம்.

காணாமல் போனோர் விவகாரத்தைச் சிலர் அரசியலுக்காகப் பொதுப் பிரச்சினையாக்க முயற்சிக்கிறார்கள். அது தவறு. ஒரு சில பிரத்தியேகமான சம்பவங்களை வைத்துக்கொண்டு ஒட்டுமொத்தமாக ஒரு பொதுப் பிரச்சினையாக இதனைப் பார்க்கக்கூடாது. யுத்த காலத்தில் உயிரிழந்த படையினரைப்போல புலிகள் இயக்க உறுப்பினர்களின் சடலங்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவில்லை. சரணடைந்தவர்களைக் காணவில்லை என்று சிலர் சொன்னாலும், யுனிசெப் நிறுவனம் நடத்திய ஒரு கணக்கெடுப்பில், எட்டுப்பேர் மட்டுமே படையினர் கொண்டுசென்றதாகச் சொல்லியிருக்கிறார்கள். ஏனைய சுமார் இரண்டாயிரம் சம்பவங்கள் புலிகள் இயக்கத்தில் செயற்பட்டுக் காணாமல்போனதாகத்தான் பதியப்பட்டுள்ளன. இதுதான் உண்மை. வேண்டுமானால், காணாமல் போனவர்களைச் சரியாக உறுதிப்படுத்திக்கொண்டு அவர்களுக்கு மரணச் சான்றிதழ் பெற்றுக்கொடுக்க முடியும். சிலவேளை, அவர்கள் வெளிநாடுகளிலிருந்து வரவும்கூடும். எனவே, இந்த விடயத்தை அறிவுபூர்வமாகச் சிந்தித்துச் செயற்பட வேண்டும்” என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

விசு கருணாநிதி

Related posts