இந்த வாரம் 7 படங்கள் ரிலீஸ்

இந்த வாரம் வருகிற வெள்ளிக்கிழமை பொன் மாணிக்கவேல், எட்டுத்திக்கும் பற, ஜிப்ஸி, இம்சை அரசி, காலேஜ் குமார், வெல்வெட் நகரம், இந்த நிலை மாறும் ஆகிய 7 படங்கள் திரைக்கு வருகின்றன. ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் புதிய படங்களை திரைக்கு கொண்டு வருகிறார்கள். பண்டிகை காலங்களில் பெரிய நடிகர்கள் படங்களையும், மற்ற நாட்களில் சிறுபட்ஜெட் படங்களையும் திரையிடும்படி ஏற்கனவே தயாரிப்பாளர்கள் சங்கம் கட்டுப்பாடுகள் விதித்து உள்ளது. இந்த வாரம் வருகிற வெள்ளிக்கிழமை பொன் மாணிக்கவேல், எட்டுத்திக்கும் பற, ஜிப்ஸி, இம்சை அரசி, காலேஜ் குமார், வெல்வெட் நகரம், இந்த நிலை மாறும் ஆகிய 7 படங்கள் திரைக்கு வருகின்றன. பொன் மாணிக்கவேல் படத்தில் பிரபுதேவா, நிவேதா பெத்துராஜ் ஜோடியாக நடித்துள்ளனர். முகில் செல்லப்பன் இயக்கி உள்ளார். இதில் பிரபுதேவா போலீஸ் அதிகாரியாக வருகிறார். அதிரடி சண்டை படமாக…

கமல்ஹாசனிடம் இரண்டரை மணி நேரம் விசாரணை

இந்தியன்-2 படப்பிடிப்பு விபத்து தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜரான நடிகர் கமலிடம் இரண்டரை மணி நேரம் விசாரணை நடைபெற்றது ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்துவரும் இந்தியன்-2 படப்பிடிப்பில் கிரேன் விழுந்து விபத்துக்குள்ளானதில் உதவி இயக்குநர் உட்பட மூவர் உயிரிழந்தனர். இந்த வழக்கை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். துணை ஆணையர் நாகஜோதி விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளார். படப்பிடிப்பு தளத்தில் நிகழ்ந்த விபத்து தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு, கமல், ஷங்கருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதையடுத்து இயக்குநர் ஷங்கர் கடந்த வெள்ளிக்கிழமை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் விபத்து தொடர்பாக போலீசார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து இந்தியன் 2 படத்தின் கதாநாயகனும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசனுக்கு…

முஸ்லிம்கள் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல்

டெல்லி கலவரம், முஸ்லிம்கள் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் என்று கூறிய ஈரானுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. டெல்லி கலவரம் முஸ்லிம்கள் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் என்று சர்ச்சைக்குரிய வகையில் ஈரான் வெளியுறவு அமைச்சர் ஜாவத் ஷெரீஃப் டுவிட்டரில் பதிவிட்டு இருந்தார். இதை தொடர்ந்து டெல்லியில் உள்ள ஈரான் தூதர் அலி செகனி இன்று வெளியுறவு அமைச்சகத்திற்கு வரவழைக்கப்பட்டு இந்தியா சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அப்போது டெல்லி கலவரம் போன்றவை இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்று அவரிடம் எடுத்துரைத்த வெளியுறவுத் துறை அதிகாரிகள், ஈரான் அமைச்சரிடம் இருந்து இத்தகைய விமர்சனங்களை இந்தியா எதிர்பார்க்கவில்லை என்று கண்டிப்புடன் கூறினர்.

ஐநா மனித உரிமைகள் ஆணையம் சுப்ரீம் கோர்ட்டில் மனு..!

குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக ஐநா மனித உரிமைகள் ஆணையம் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து உள்ளதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. பாகிஸ்தான், வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து வந்து இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்கும் வகையில் குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு கடந்த டிசம்பர் 11 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது இந்த சட்டத்துக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளன. இந்த சட்டத்துக்கு எதிராக முதலில் வடகிழக்கு மாநிலங்களில் வெடித்த போராட்டம், பின்னர் மேற்கு வங்காளம், டெல்லி, சென்னை என பிற பகுதிகளுக்கும் பரவி வருகிறது. டெல்லியில் கடந்த சில நாட்களாக பெரும் வன்முறை நடந்து வந்தது. தற்போது தான் படிப்படியாக அமைதி நிலைக்கு திரும்பி உள்ளது. சென்னை வண்ணாரப்பேட்டையில் 19-வது நாளாக போராட்டம்…

மகிந்த தலைமையில் ‘காபந்து’ அரசாங்கம்..!

பாராளுமன்றத்தின் பதவிக்காலம் 4 1/2வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவினால் பாராளுமன்றம் நேற்று கலைக்கப்பட்டது. இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்ட நிலையில் புதிய அரசாங்கம் உருவாக்கப்படும் வரை காபந்து அரசாங்கமே செயற்படவுள்ளது. அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டால் தவிர எக்காரணம் கொண்டும் பாராளுமன்றம் கூட்டப்படாதென பிரதி பாராளுமன்ற செயலாளர் நீல் இத்தவெல தினகரனுக்கு தெரிவித்தார். பாராளுமன்றத்தின் பதவிக்காலம் ஆகஸ்ட் மாதத்துடன் நிறைவடைகின்ற போதும் 19ஆவது திருத்தத்திற்கு அமைய 4 1/2வருடங்களின் பின்னர் ஜனாதிபதியால் பாராளுமன்றத்தை கலைக்க முடியும். இதற்கமைய நேற்று பாராளுமன்றம் கலைக்கப்பட்டதோடு ஏப்ரல் 25ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறும் என வர்த்தமானியூடாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மார்ச் 12ஆம் திகதி முதல் 19ஆம் திகதிவரை வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படுமென வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுத் தேர்தல் நடத்துவதற்கான பணிகளை தேர்தல்…

ஐ.தே.கவுக்குள் மோதல் ரணில் தரப்பு பகிஷ்கரிப்பு

ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியின் பொது உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு நேற்று (02) இடம்பெற்றது. கொழும்பு தாமரைத் தடாகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் இக்கூட்டணியின் பிரதான கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி தலைவரோ, செயலாளரோ பங்கேற்கவில்லை.எனினும்பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. பொதுத் தேர்தலை இலக்குவைத்து ஐக்கிய மக்கள் சக்தி புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட போதிலும் கூட்டணியின் சின்னம் குறித்து எவ்வித முடிவும் எட்டப்படவில்லை. யானைச் சின்னத்தைப் பயன்படுத்துமாறு ரணில் விக்கிரமசிங்க கூறியிருந்தாலும் சின்னத்தை மாற்றுவதில் சிக்கல்கள் உள்ளதால் யானைச் சின்னத்தில் போட்டியிட முடியாதென ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார். உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வில் மனோகணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு முன்னணி, ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ரிஷாத் பதியுத்தீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், பாட்டலி சம்பிக்கரணவக்க தலைமையிலான…

நிர்பயா பாலியல் வல்லுறவு: தூக்குத் தண்டனை நிறுத்திவைப்பு

நிர்பயா கூட்டுப் பாலியல் வல்லுறவு வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட நால்வரை தூக்கிலிடும் உத்தரவை திகதி குறிப்பிடாமல் நிறுத்திவைத்து டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, இன்று காலை 6 மணிக்கு இவர்கள் நால்வருக்கும் தூக்குத் தண்டனை நிறைவேற்ற வேண்டும் என்று மூன்றாவது முறையாக நீதிமன்றம் தேதி நிர்ணயித்திருந்தது. ஆனால், இவர்களில் நான்காவது குற்றவாளியான பவன்குப்தா சார்பில் தற்போது குடியரசுத் தலைவரிடம் கருணை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதைக் காரணம் காட்டி, விசாரணை நீதிமன்றமான பாட்டியாலா இல்ல நீதிமன்றத்தில் நால்வரின் தூக்குத் தண்டனை நிறைவேற்றுவதை ஒத்திவைக்கவேண்டும் என்று பவன் குப்தா சார்பு வழக்குரைஞர் ஏ.கே.சிங் நேற்று தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணையின்போது இந்த உத்தரவை நீதிபதிகள் பிறப்பித்துள்ளனர். ஏற்கெனவே இந்த வழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற மற்ற முகேஷ் சிங், வினய் ஷர்மா, அக்ஷய் தாக்கூர்…

வல்வெட்டித்துறை பகுதியில் வெடிமருந்துடன் நால்வர் கைது..!

வல்வெட்டித்துறை பகுதியில் வெடிமருந்து 850 கிராம் வைத்திருந்த குற்றச்சாட்டில் 4 பேரை பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர். யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து நேற்று இரவு பயங்கரவாத விசாரணை பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், இந்த நால்வரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயது முதல் 24 வயதுடைய இளைஞர்களையே இவ்வாறு கைதுசெய்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட நால்வரையும் யாழ்ப்பாணத்தில் உள்ள பயங்கரவாத விசாரணைப் பிரிவினரின் அலுவலகத்தில் தடுத்து வைத்திருப்பதுடன், நால்வரையும் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கையை பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.