மாணவர்களை இலவசமாக விமானத்தில் அழைத்து செல்லும் சூர்யா

அரசு பள்ளியில் பயிலும் 100 மாணவர்களை விமானத்தில் இலவசமாக அழைத்து செல்ல சூரரை போற்று படக்குழு முடிவு எடுத்துள்ளது.

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் படம் சூரரைப் போற்று. இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகி வரும் இந்தப் படத்தில் அபர்ணா பாலமுரளி, தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்தப் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனமும், சிக்யா நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன.

இந்நிலையில், அரசுப் பள்ளியில் பயிலும் 100 மாணவர்களை இலவசமாக விமானத்தில் அழைத்து செல்ல சூரரை போற்று படக்குழு முடிவு எடுத்துள்ளது. விமான நிறுவனம் தொடங்குவது தொடர்பான கதை களத்தில் சூர்யா நடிக்கிறார். இதனால் பள்ளி மாணவர்களை விமானத்தில் அழைத்து செல்ல படக்குழு முடிவு எடுத்துள்ளது.

———-

தமிழ் பட உலகுக்கு பல வெற்றி படங்களை கொடுத்து, ‘சகலகலா வல்லவர்’ என்று அழைக்கப்படும் டைரக்டர், டி.ராஜேந்தர். இவர், பட உலகின் பல்வேறு பிரச்சினைகள் காரணமாக சில வருடங்களாக படங்கள் இயக்குவதை தவிர்த்து வந்தார்.

சமீபத்தில், சென்னை-காஞ்சீபுரம்-திருவள்ளூர் மாவட்ட வினியோகஸ்தர்கள் சங்க தேர்தலில் போட்டியிட்டு, அதன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதைத்தொடர்ந்து தமிழ் பட உலகில் உள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது பற்றி தமிழ்நாடு முழுவதும் உள்ள வினியோகஸ்தர்களுடன் கலந்து ஆலோசித்து வருகிறார். தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் உள்ள வினியோகஸ்தர்களின் கூட்டமைப்புக்கு தலைவராக இவர் பொறுப்பேற்க உள்ளதாக பேச்சு அடிபடுகிறது.

இந்த நிலையில், டி.ராஜேந்தர் அடுத்து ஒரு புதிய படத்தை இயக்க இருக்கிறார். இந்த படத்துக்கு அவர், ‘இன்னிசை காதலன்’ என்று பெயர் சூட்டியிருக்கிறார். “இது, இசைக்கும் காதலுக்கும் முக்கியத்துவம் உள்ள படம். கதாநாயகனாக 2 புதுமுகங்களும், கதாநாயகி களாக 3 புதுமுகங்களும் அறிமுகமாகிறார்கள்.

இந்த படத்துக்காக, சென்னை போரூரில் உள்ள டி.ராஜேந்தர் தோட்டத்தில் பிரமாண்டமான அரங்கு அமைக்கும் வேலைகள் நடைபெறுகின்றன. அங்கு விரைவில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.”

Related posts