இந்தோனீசியாவில் குற்றவாளிக்கு கசையடி போட்ட முதலாவது பெண்மணி

இந்தோனீசியாவின் ஆர்ச் வட்டகையில் குற்றமிழைத்த பெண்னக்கு முகத்தை மறைத்த இன்னொரு பெண் கசையடி போட்டார். சாரியா சட்டங்களின் படி பொது இடத்தில் தண்டனை நிறைவேற்றப்பட்டது. முதற் தடவையாக ஒரு பெண் அதை நிறைவேற்றும் முறைமை இப்போதுதான் அமலுக்கு வந்துள்ளதால் இந்த விவகாரம் அதிக கவனயீர்ப்பு பெற்றுள்ளது. தண்டிக்கப்பட்ட பெண்மணி முழந்தாளிட்டு இருந்தார். இப்பெண்மணி வெள்ளை நிற உடையால் போர்க்கப்பட்டிருந்தார். இவர் மீது கசையடி போட்டவர் முகத்தை மூடியபடி தவிட்டு நிறமான ஆடை அணிந்திருந்தார். இப்பெண்மணி அடிபோட அதை பலர் படம் பிடித்தார்கள். அங்குள்ள சாரியா சட்ட நடைமுறைக்கு மாறாக நடந்ததே குற்றமாகும். தண்டனை பெற்ற பெண்மணி ஒர் ஆணுடன் கோட்டல் அறை ஒன்றில் தங்கியதால் இந்த தண்டனை விதிக்கப்பட்டது. இப்படியான சாரியா சட்டத்தை அமல் செய்ய ஆர்ச் பகுதிக்கு சிறப்பு அதிகாரம் உள்ளது. துனி மாநில அந்தஸ்த்துள்ள…

கரோனா பரவும் அச்சம்: சீனாவில் நர்ஸுக்குப் பதிலாக ரோபோக்கள்

சீனாவில் கரோனா வைரஸ் தீவிரமாகப் பரவி வருவதையடுத்து, மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு மருந்து, உணவுகளைச் செவிலியர்கள் வழங்குவதற்குப் பதிலாக ரோபோக்கள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன. சீனாவை அச்சுறுத்திவரும் கரோனா வைரஸுக்கு இதுவரை அங்கு 800-க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளார்கள், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார். 25 நாடுகளுக்கும் மேலாக அந்த வைரஸால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் பரவும் வேகம் அதிகமாக இருப்பதால், இனிவரும் காலத்தில் அதிகமானோர் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக சீனாவில் பல மருத்துவமனைகள் ரோபோக்களை பணிக்கு அமர்த்தியுள்ளன. செவிலியர்கள் நோயாளிகளுக்கு மருந்து, மாத்திரை, உணவுகளை வழங்குவதற்கு பதிலாக ரோபோக்கள் வழங்கும். இதன் மூலம், நோயுற்றவர்களுடன் அதிகமான நேரத்தைச் செவிலியர்கள் செலவு செய்ய வேண்டியதில்லை, அவர்களுக்கு கரோனா வைரஸ் பரவும் வாய்ப்பில் இருந்து காக்கலாம் என்ற நோக்கில் இந்தமுறை பல மருத்துவமனைகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ட்விட்டரில் இதுதொடர்பான வீடியோக்கள்…

‘‘தமிழரை திருமணம் செய்ய ஆசை!’’

‘மேகா’ படத்தின் மூலம் பிரபலமானவர், சிருஷ்டி டாங்கே. விஜய் சேதுபதி நடித்து திரைக்கு வந்த ‘தர்மதுரை’ படத்தில், சிருஷ்டி டாங்கேவின் நடிப்பு பேசப்பட்டது. இளைஞர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் அனுதாபத்தை சம்பாதித்தார். மும்பையை சேர்ந்த இவர் இப்போது தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழி படங்களில் நடித்து வருகிறார். தமிழில், அடுத்து ஆரி ஜோடியாக ஒரு புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். ‘கட்டில்’ என்ற படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். இந்த படத்தில் நடித்த அனுபவத்தை சிருஷ்டி டாங்கே பகிர்ந்து கொண்டார். ‘‘கட்டில் படம் மூலம் இதுவரை எனக்கு தெரியாத தமிழ் கலாசாரத்தை புரிந்து கொண்டேன். அது, தமிழ் கலாசாரத்தின் மீதான எனது காதலை இன்னும் அதிகப்படுத்தி இருக்கிறது. ஒரு தமிழரை திருமணம் செய்து கொள்ள ஆசைப் படுகிறேன்’’என்கிறார், சிருஷ்டி டாங்கே!

ரசிகர்களை நோக்கி கையசைத்து செல்ஃபி எடுத்தார் நடிகர் விஜய்

நெய்வேலியில் என்எல்சி முன்பு கூடியிருந்த ரசிகர்களை நோக்கி கையசைத்து, நடிகர் விஜய் செல்ஃபி எடுத்தார். நடிகர் விஜய் நடிக்கும் ‘மாஸ்டர்’ சினிமா படப்பிடிப்பு நெய்வேலியில் உள்ள என்.எல்.சி சுரங்கப்பகுதியில் நடந்து வருகிறது. இதனிடையே வருமானவரித்துறையினர் படப்பிடிப்பில் இருந்த விஜய்யை சென்னை அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதன் பின்னர் விஜய் மீண்டும் நேற்று முன்தினம் மாஸ்டர் படப்பிடிப்பில் பங்கேற்றார். இந்த படப்பிடிப்புக்கு பாரதீய ஜனதா கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். பாதுகாக்கப்பட்ட இடமான என்.எல்.சி சுரங்கத்தில் படப்பிடிப்பு நடத்த என்.எல்.சி சுரங்க நிர்வாகம் எப்படி அனுமதி அளித்தது என்று கூறி போராட்டம் செய்தனர். இதனை அறிந்த விஜய் ரசிகர்கள் திரண்டு வந்து பாரதீய ஜனதா கட்சியினருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். போராட்டம் செய்த பாஜகவினரை சமரசம் செய்து போலீசார் அனுப்பி வைத்தனர். நேற்று காலை 9 . 1 5…

தமிழகம் முழுவதும் பயணம் செய்ய ரஜினிகாந்த் திட்டம்

ரஜினிகாந்த் செப்டம்பரில் தமிழகம் முழுவதும் பயணம் செய்யும் திட்டத்தில் இருக்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் கடந்த 23 ஆண்டுகளுக்கு மேலாக வலியுறுத்தி வருகின்றனர். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு இந்த கோரிக்கை அவரது ரசிகர்கள் மத்தியில் மேலும் வலுத்தது. இதைத்தொடர்ந்து கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ரசிகர்கள் சந்திப்பை ரஜினிகாந்த் நடத்தினார். அப்போது தான் அரசியலுக்கு வருவதற்கான அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பை வெளியிட்டு, 2 ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும், ரஜினிகாந்த் தனிக்கட்சி தொடங்காதது அவரது ரசிகர்கள் மத்தியில் சற்று ஏமாற்றத்தையும், வருத்தத்தையும் அளித்து. நாடாளுமன்ற தேர்தலிலும், சட்டசபை தொகுதி இடைத்தேர்தலிலும் எந்த முடிவையும் அறிவிக்காமல் ரஜினிகாந்த் தனது ரசிகர்களுக்கு மவுனத்தையே பரிசாக தந்தார். அவ்வப்போது, மத்திய அரசுக்கு ஆதரவாக…

திரைப்படமாகிறது அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு

மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது. மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை டெல்லியில் மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டார். தெலுங்கில் தயாராகும் இந்தப்படம் தமிழ், இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது. அப்துல்கலாம் வேடத்தில் தெலுங்கு நகைச்சுவை நடிகர், அலி பாஷா நடிக்க இருக்கிறார். இந்த ஆண்டின் இறுதியில் திரைப்படம் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்நிகழ்ச்சியின் படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துகொண்ட மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் அதில் கூறியுள்ளதாவது: இந்தியாவின் சின்னமான மக்கள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றின் ஃபஸ்ர்ட் லுக் போஸ்டர் புதுடெல்லியில் இன்று வெளியிடப்பட்டது. # Hollywood மற்றும் தெலுங்கு திரைப்படத்துறை இணைந்து தயாரிக்கும் இப்படம்…

விக்னேஸ்வரன் தலைமையில் புதிய கூட்டணி

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையில் உருவாகும் புதிய கூட்டணியான "தமிழ் மக்கள் தேசிய கூட்டணி"புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று (09) ஞாயிற்றுக்கிழமை ரில்கோ விருந்தினர் விடுதியில் கைச்சாத்திடப்பட்டது. தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் வடக்கு முன்னாள் முதலமைச்சருமான விக்னேஸ்வரன் தலைமையில் புதிய அணியொன்று உருவாக்கும் முயற்சிகள் கடந்த பல மாதங்களாக நடைபெற்று வந்தது. ஆயினும் கூட்டணி அமைப்பதில் ஏற்பட்ட இழுபறி நிலைமைகளால் அது குறித்தான உத்தியோகபூர்வ அறிவிப்புக்கள் வெளிவருவதில் தாமதம் ஏற்பட்டிருந்த நிலையில் தற்போது அந்தக் கூட்டணிக் கட்சிகளுக்கிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டு உத்தியோகபூர்வ அறிவிப்புக்கள் இன்று வெளியிடப்பட்டது. காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரையிலான சுப நேரத்திலேயே இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இதற்கமைய தமிழ் மக்கள் கூட்டணி, EPRLF, ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகம், தமிழ் தேசியக் கட்சி ஆகிய நான்கு…

எனது மக்களுடகாக இறுதி வரை பணி செய்வது என்று முடிவு செய்துள்ளேன்

நீங்கள் விரும்பிய படியே எனது அரசியல் பயணம் தொடரும். என்னை நம்பிய எனது மக்களுடன் இறுதிவரை வாழ்ந்து அவர்களுக்காக பணி செய்வது என்று முடிவுசெய்துள்ளேன் என தமிழ் மக்கள் தேசீயக் கூட்டணியின் தலைவரும் முன்னாள் வடமாகாண முதலமைச்சருமான சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ´தமிழ் மக்கள் தேசீயக் கூட்டணி´யின் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடும் பூர்வாங்கக் கூட்டம் இன்று (09) காலை 10 மணிக்கு யாழ் டில்கோ ஹோட்டலில் சி.வி விக்னேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது, கருத்து தெரிவித்த அவர், உங்கள் நீண்டகால எதிர்பார்ப்பான மாற்று அணி உருவாகிவிட்டது. எமது புரிந்துணர்வு உடன்படிக்கை என தருமை மக்களான உங்கள் முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது. பலமானதொரு கூட்டணி பரிணமித்துள்ளது. ஒரு சில தனி நபர்களின் விருப்பு, வெறுப்புக்கள், பதவி மோகங்களுக்கு அப்பால் தமிழ் தேசிய அரசியலை கொள்கை அடிப்படையில் நிறுவனமயப்படுத்தி அகத்திலும் புலத்திலும்…

இந்தியப் பிரதமருடனான சந்திப்பு வெற்றிகரமாக அமைந்தது

இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியுடனான சந்திப்பு வெற்றிகரமாக அமைந்ததாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கடந்த 7 ஆம் திகதி இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு இந்தியாவில் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய பிரதமரும் இந்திய ஜனாதிபதியும் சந்தித்த போது இவருக்கு இந்த வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோதி, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு செங்கம்பள வரவேற்பு அளித்தார். இராணுவ மரியாதையும் இதன் போது இடம்பெற்றது. தமது விஜயத்தின் போது பல்வேறு விடயங்கள் குறித்து இந்திய பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்தியாவில் நவம்பர் மாதம் மேற்கொண்ட வெற்றிகரமான அரச விஜயத்துக்கு மத்தியில் இந்திய பிரதமருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் பெறுபேறாக இது அமைந்துள்ளது. இந்திய அரசாங்கம் கடைப்பிடிக்கும் அயல்நாட்டுக்கு முதலாவது இடம் என்ற கொள்கைக்கு அமைவாக இலங்கையுடன் முன்னெடுக்கப்படும்…